தீக்கோழி அறிந்து கொள்வோம் பகுதி -25
அறிந்து கொள்வோம் பகுதி -25 தீக்கோழி நெருப்புக்கோழி (Ostrich) தீக்கோழி குறித்து தமிழ் வேதாகமத்தில் (லேவி.11:16; உபா.14:15; புல.4:3; யோபு 39:13) ஆகிய இந்த வசனங்களில் தீக்கோழி என்னும் சரியான பதத்தை நம்மால் காண முடியும். ஆனால் இந்த குறிப்பிட்ட வசனங்கள் - யோபு 30:29; ஏசா.13:21, 34:13, 43:20; எரே.50:39; மீகா 1:8 ல்- நம் வாசிக்கிறது என்ன "கோட்டான்" அல்லது "ஆந்தை" என்று ஆனால் "கோட்டான்" மற்றும் "ஆந்தை" என்ற வார்த்தைக்கு பதிலாக தீக்கோழி என்ற பதம் இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள் வேத பண்டிதர்கள். சில ஆங்கில வேதகமாத்தில் சரியாக தீக்கோழி (Ostrich) என்று இருக்கிறது. ஆப்பிரிக்கா கண்டத்திலும் அரபி தேசத்திலும் சீரியாவுக்குத் தென் கிழக்கில் உள்ள வனாந்தரங்களிலும் இந்த தீக்குருவிகள் இருக்கின்றன. பெண் தீக்குருவி தன் முட்டைகளைப் பற்றி கவனிக்கிற தில்லை என்று யூதர்கள் நினைத்தார்கள். யோபு 39:15. ஆனால் இந்தத் தீக்குருவியின் இயல்பைப் பற்றி படித்த அநேகர் இப்படியாக சொல்லி இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண் குருவிக்கும் மூன்று அல்லது நாலு பெண் குருவிகள் இருக்கும் என்ற...