Posts

Showing posts from June, 2022

ஐந்து விரல் ஜெபம் || அறிந்து கொள்வோம் || பகுதி -85 ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி -85 ஐந்து விரல் ஜெபம் நாம் அனைவரும் ஜெபிக்க வேண்டும் என்று விரும்பபடுகிறோம். ஆனால் எப்படி ஜெபிப்பது???  சோர்ந்து போகாமல் ஜெபிக்க வேண்டும் என்பது தேவனுடைய கட்டளையாதலால் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம்  ஜெபிக்க  எளிதான முறையில் ஞாபகம் வைக்க சில குறிப்புகளை இங்கு பார்க்கலாம். அதை பின்பற்றி நாம் எளிதாக ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் ஜெபிக்கலாம். நாம் கார் ஓட்டும் போது சிக்னலுக்காக காத்திருக்கும்போதோ, வேலையிடத்தில் சிறிது ஓய்வெடுக்கும்போதோ, இந்த சிறிய ஜெபத்தை நாம் செய்யலாம். நமது கரத்தை எடுத்து கொள்வோம். அதை ஜெபிக்க கூப்பும்போது, 1.முதலாவது நமக்கு அருகில் இருப்பது பெருவிரல்:   பெருவிரல் நமக்கு அருகில் இருப்பதால், நமக்கு நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், நமக்கு நெருங்கிய ஊழியர்கள் என்று நெருங்கியவர்களுக்காக ஜெபிக்கலாம். நமது ஞாபகத்தில் அவர்கள் இருப்பதால் அவர்களை நினைத்து எளிதாக ஜெபிக்கலாம். மற்றும் பெருவிரல் முதல் விரலாக இருப்பதால், தேவன் ஏற்ப்படுத்திய ஊழிய முறைப்படி முதல் ஊழியமாகிய அப்போஸ்தல ஊழியத்தை செயபவர்களுக்காக ...

எலியா மற்றும் எலிசா மூலம் தேவன் செய்த அற்புதங்கள் ||அறிந்து கொள்வோம் ||பகுதி -84 ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி -84 எலியா மற்றும் எலிசா மூலம் தேவன் செய்த அற்புதங்கள் எலியா செய்த 8 அற்புதங்கள்:- 1.மழையும் பனியும் நின்றது.  1 இராஜாக்கள் 17,1-7. 2.மாவும் எண்ணெயும் குறையாதது. 1 இராஜாக்கள் 17:8-16. 3.சாறிபாத் விதவை மகனை உயிர்ப்பித்து . 1 இராஜாக்கள் 17:17- 24. 4.அக்கினி இறங்கி பலியை பட்சித்தல். 1 இராஜாக்கள் 18:17-40. 5.பலத்த மழை பெய்தது. 1 இராஜாக்கள் 18:41- 46. 6. 51 பேர்கள் மேல் அக்கினி விழுந்தது. 2 இராஜாக்கள் 1:1-10, 7.மீண்டும் 51 பேர்கள் மேல் அக்கினி விழுந்தது. 2 இராஜாக்கள் 1:11 - 12. 8.யோர்தான் பிரிந்தது. 2 இராஜாக்கள் 2:7-10. இரட்டிப்பான வரத்தை இறைவாக்கினர் எலியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட எலிசா, எலியாவைக் காட்டிலும் அதிகமாக ஊழியம் செய்ததாக நம்பப்படுகிறது. " எலிசா " என்ற பெயருக்கு " கடவுள் என் மீட்பு" என்று அர்த்தம். எலிசா ஒருவேளை ஆறு வருடம் எலியாவின் உதவியாளராக சேவை செய்திருந்தபோதிலும், அவரை விட்டுப் பிரிந்து போக எலிசா சம்மதிக்கவே இல்லை. எனவே வேதத்தில் பதிவு செய்யப்பட்ட எலியாவின் 8 அற்புதங்களின் இரு மடங்காக எலிசாவின் அற்புதங்கள் இருந்தது. எலிசாவின் 16 அற்...