மிஷனெரிகளின் வாழ்விலிருந்தது || I.R.H. ஞானதாசன் ||
மிஷனெரிகளின் வாழ்விலிருந்து…… பகுதி -1 I.R.H. ஞானதாசன் மிஷனெரி தாகத்தை ஏற்படுத்துவோம் ஓய்வு நாள் பள்ளி பிள்ளைகள் வசனத்தைக் கேட்பதிலும், செயல்படுத்துவதினும் அதிக வாஞ்சை உள்ளவர்கள்; கற்றுக் கொண்டதை செயல்படுத்த துடிப்பவர்கள். பேராயர் I.R.H.ஞானதாசன் இச்சிறுவர்களை தம் ஊழியத்தில் பயன்படுத்திய விதம் அனைவருக்கும் சிறந்த எடுத்துகாட்டாகும். அவர் ஓய்வு நாள் பள்ளிக்கூடத்தில் உள்ள " பிரைமரி " பிள்ளைகளுக்கு "மிஷனெரி டேமியன் குடும்பம்" என்று பெயரிட்டார். இந்த பிள்ளைகள் தொழுநோயாளிகளை தாங்கினர்கள்.குளச்சல் பகுதியில் உள்ள தொழுநோய் இல்லம் இவர்களால் குதூகலமானது. "ஜூனியர்" மாணவர்களுக்கு "மிஷனெரி சத்தியா குடும்பம்" என்று பெயரிட்டார். இவர்கள் "பாப்புவா தீவில்" நடைபெற்ற ஊழியத்தை தாங்கி உற்சாகப்படுத்தினர்கள். "சீனியர் "மாணவர்களை “மிஷனெரி லீச் குடும்பம்" என்று அழைத்தார். இவர்கள் "நெய்யூர் மிஷன்" பணியை வளரச் செய்தனர்கள். இப்படி சிறுபருவத்திலேயே குழந்தைகளுக்கு மிஷனெரி தாகத்தை ஏற்படுத்தியவர் இந்த பேராயர் ஞானதாசன். பிள்ளைகளை நடக்க வேண...