அறிந்து கொள்வோம் - பகுதி -102 || சிலுவையும் காடியும் ||
அறிந்து கொள்வோம் பகுதி -102 சிலுவையும் காடியும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவுக்குக் காடி கொடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியும். ஆனால், எத்தனை முறை கொடுக்கப்பட்டது? எப்போது கொடுக்கப்பட்டது? எப்படி கொடுக்கப்பட்டது? என்கிற குழப்பம் அநேகருக்கு உண்டு. இயேசுவுக்கு மூன்று முறை காடி கொடுக்கப்பட்டதாக வேதம் விவரிக்கின்றது. அதைத் தெரிந்துக்கொள்வோம். 1.மாற்கு 15:23 - சிலுவையில் அறைவதற்க்கு முன்: முக்கிய குறிப்பு: வெள்ளிப்போளம் கலந்த திராட்சைரசமான இது வலியை மறக்கக் கொடுக்கப்படும் பாணம். ஆனால், கிறிஸ்துவோ முழு வேதனையையும் சகிக்கும்படி அதை ஏற்கவில்லை. 2.லூக்கா 23:36 - சிலுவையில் மத்தியானத்திற்கு முன்: முக்கிய குறிப்பு: இது படைவீரர்கள் கிறிஸ்துவை ராஜா என எள்ளி நகையாடி கொடுத்தது. அக்காலத்தில் அரசர்கள் பதவி ஏற்றவுடன் மரியாதை நிமித்தம் இனிய பானம் வழங்குவதைப்போல இயேசுவுக்குக் கொடுத்து, நீ யூதரின் ராஜாவானால் இரட்சித்தக்கொள் என்று கிண்டல் செய்தனர் (லூக் 23:36). சிலுவையின் இரண்டாவது வாரத்திற்கு முன்பு இது நடந்தது (லூக் 23:43). அதன் பின்பு பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அந்தக...