வாஞ்சை || அறிந்து கொள்வோம் பகுதி-82 ||
அறிந்து கொள்வோம் பகுதி-82 வாஞ்சை " வாஞ்சித்தல் " என்பது " முழு இருதயத்தோடும் விரும்புதல் " என்று அர்த்தப்படும். " வாஞ்சை " என்ற வார்த்தையை குறிக்க "taabah"என்ற எபிரெயச் சொல் பயன்படுத்தி உள்ளார்கள். நீதி. 13:12 - ல் நாம் விரும்பியதைப் பெறும்போது, அது ஜீவவிருட்சத்தைப் பெறுவதுபோல இருக்கும் என்று பவுல் தான் ரோமாபுரியின் விசுவாசிகளைக் காண வாஞ்சிப்பதாகக் கூறியிருக்கிறார் (ரோமர் 1:11). இங்கே வாஞ்சிப்பதைக் குறிக்க "epipothed" என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இது அதிகமான விருப்பத்தைக் குறிக்கும் வார்த்தை ஆகும். இஸ்ரவேலர் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே தனது இருதயத்தின் விருப்பம் என்றும் அவர் சொல்லுகிறார் ரோமர் 10:1 -இங்கே விருப்பத்தைக் குறிக்க "eudokia" என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்படுகிறது. நாம் எதை வாஞ்சிக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. 1.நாம் தேவனுடைய நியாயங்களை வாஞ்சிக்க வேண்டும் -சங். 119:20. 2.நாம் தேவனை வாஞ்சிக்க வேண்டும் - ஏசா26:9. அவரைத் தவிர நமக்கு வேறு விருப்பம் இருக்கக்கூடாது. சங். 73:25. 3.நாம் அதிகாலையி...