Posts

Showing posts from March, 2021

கிறிஸ்து இயேசு சிலுவையில் அருளிய ஏழு வாக்கியங்கள்

Image
  கிறிஸ்து இயேசு சிலுவையில் அருளிய ஏழு வாக்கியங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரட்சகர் இயேசு சிலுவையில் மரித்ததை   'புனித வெள்ளி' என்று கிறிஸ்தவர்கள் உலகமெங்கும் அனுசரித்து வருகிறோம்.  புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் இயேசு சிலுவையில் தொங்கிய போது சொன்ன ஏழு வாசகங்களைக் குறித்து பிரசங்கிப்பது - வழக்கமாக இருந்து வருகிறது.  அந்த ஏழு வாசகங்களையும் அதன் அர்த்தங்களையும் கவனிப்போம். ஆண்டவர் இயேசுவின் எல்லா உபதேச போதனைகளின் சுருக்கம்தான் இந்த ஏழு வாக்கியங்கள் என்றும் சொல்லலாம். ஆண்டவர் இயேசு சொன்னதைப் போன்ற வார்த்தைகளை சிலுவையில் அறையப்படுபவர் களிடமிருந்து எதிர்பார்க்க முடியாத ஒன்று தான்.  பொதுவாகச் 'சிலுவையில்  அறையப்படும் போது தாங்க முடியாத வேதனை ஏற்படும்.  சாவது வரை மிகக் கொடிய வேதனை இருக்கும்.  எனவே சிலுவையில் அறையப்படுபவர்கள் வேதனையைத் தாங்க முடியாமல் அழுவார்கள். உலகைத் தூற்றுவார்கள். சபிப்பார்கள். கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவார்கள். சிலுவை அருகே வேடிக்கை பார்த்து நிற்பவர்களைக் காறித் துப்புவார்கள். இதுதான் சாதாரணமாக நடை பெறுவது. ஆனா...

பாடுகளின் வாரம் // வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்//

Image
  பாடுகளின் வாரம்  வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் பிலாத்து இயேசுவை விசாரிக்கிறான் (மத்தேயு 27:2,11-14 ; மாற்கு 15:1-5 ; லூக்கா 23:1-5 ; யோவான் 18:28-38) தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்து விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி, அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்           (மத் 27:1,2). பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இயேசுவை பிடித்து கைதுபண்ணி, யூதருடைய ஆலோசனைச்சங்கத்திற்கு முன்பாக நிறுத்தி அவர் மரணத்திற்கு பாத்திரமானவர் என்று தீர்ப்பு கூறுகிறார்கள்.  ஆனால் ஒருவருக்கு மரண தண்டனை கொடுக்கும்  அதிகாரம் யூதருடைய ஆலோசனைச்சங்கத்திற்கு இல்லை. மரண தண்டனை கொடுக்கும் அதிகாரத்தை ரோமப்பேரரசு யூதரிடமிருந்து ஏற்கெனவே பறித்துக்கொண்டது. ஆகையினால் அவர்களால்  யாருக்கும் மரண தண்டனை கொடுக்க முடியாது. இயேசுவை கொலை செய்யவேண்டுமென்று விரும்பியும் அவர்களால் அவரை கொலைபண்ண முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்...