பார்வோன் || அறிந்து கொள்வோம் || பகுதி - 137 ||
அறிந்து கொள்வோம் பகுதி - 137 பார்வோன் *பார்வோன்* என்னும் எபிரெய பெயருக்கு “பெரிய வீடு” "great house" என்று பொருள். இது எகிப்து தேசத்தின் ராஜாக்களுக்கு கொடுக்கப்படும் பொதுவான பெயர். கி.மு. 323 ஆவது வருஷம் வரையிலும் எகிப்து தேசத்தின் ராஜாக்கள், பார்வோன்கள் என்று தான் அழைக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில் பார்வோன் என்னும் வார்த்தை ராஜாவின் அரண்மனையைக் குறித்தது. பிற்காலத்தில் இந்த வார்த்தை ராஜாவைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. எகிப்தியர்கள் தங்களுடைய ராஜாக்களை தெய்வங்களாக மதித்தார்கள்.அவர்கள் மரித்த பின்பும் இந்த ராஜாக்கள் தங்களை ஆளுகை செய்வதாக நம்பினார்கள். வேதாகமக் காலத்தில் இஸ்ரவேல் தேசத்தாருக்கும் எகிப்தின் பார்வோனுக்கும் பல சந்தர்ப்பங்களில் தொடர்புகள் ஏற்பட்டுள்ளன. ஆபிரகாம் பாலஸ்தீன தேசத்தில் பஞ்சம் உண்டானபோது கி.மு. 1900 ஆவது வருஷத்தில் எகிப்து தேசத்திற்குப் போனார் (ஆதி 12:10-20). 200 வருஷங்களுக்குப் பின்பு யோசேப்பு எகிப்து யோசேப்பு எகிப்து தேசத்தின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் (ஆதி 39). இதன் பின்பு யோசேப்பு பார்வோனின் சொப்பனத்திற்கு வியாக்கியானம் கூறி, எகிப்து ...