பார்வோன் || அறிந்து கொள்வோம் || பகுதி - 137 ||

 அறிந்து கொள்வோம்


பகுதி - 137


பார்வோன்


*பார்வோன்* என்னும் எபிரெய பெயருக்கு “பெரிய வீடு” "great house" என்று பொருள். இது எகிப்து தேசத்தின் ராஜாக்களுக்கு கொடுக்கப்படும் பொதுவான பெயர். 


கி.மு. 323 ஆவது வருஷம் வரையிலும் எகிப்து தேசத்தின் ராஜாக்கள், பார்வோன்கள் என்று தான் அழைக்கப்பட்டார்கள்.


ஆரம்பத்தில் பார்வோன் என்னும் வார்த்தை ராஜாவின் அரண்மனையைக் குறித்தது. பிற்காலத்தில் இந்த வார்த்தை ராஜாவைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.


எகிப்தியர்கள் தங்களுடைய ராஜாக்களை தெய்வங்களாக மதித்தார்கள்.அவர்கள் மரித்த பின்பும் இந்த ராஜாக்கள் தங்களை ஆளுகை செய்வதாக நம்பினார்கள்.


வேதாகமக் காலத்தில் இஸ்ரவேல் தேசத்தாருக்கும் எகிப்தின் பார்வோனுக்கும் பல சந்தர்ப்பங்களில் தொடர்புகள் ஏற்பட்டுள்ளன.


ஆபிரகாம் பாலஸ்தீன தேசத்தில் பஞ்சம் உண்டானபோது கி.மு. 1900 ஆவது வருஷத்தில் எகிப்து தேசத்திற்குப் போனார் (ஆதி 12:10-20). 


200 வருஷங்களுக்குப் பின்பு யோசேப்பு எகிப்து யோசேப்பு எகிப்து தேசத்தின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் (ஆதி 39).


இதன் பின்பு யோசேப்பு பார்வோனின் சொப்பனத்திற்கு வியாக்கியானம் கூறி, எகிப்து தேசத்தில் உயர்ந்த அதிகாரியாக பதவி வகித்தார்.இக்காலத்தில் யோசேப்பின் குடும்பத்தார் எகிப்து தேசத்திற்கு வந்து கோசேன் என்னும் இடத்தில் தங்கினார்கள் (ஆதி 47:1-6)


சில வருஷங்களுக்குப் பின்பு எகிப்து தேசத்தில் யோசேப்பை அறியாத புதிய பார்வோன் ஆட்சிக்கு வந்தான் (யாத் 1:8). இவன் எபிரெய ஜனங்களை அடிமைப்படுத்தினான்.எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேல் புத்திரரை மோசே விடுவித்து கானான் தேசத்திற்கு அழைத்துச் சென்றார்.


பிற்காலத்தில் சாலொமோன் எகிப்து தேசத்தின் பார்வோனுடைய குமாரத்தியை திருமணம் செய்து எகிப்தியரோடு உறவு வைத்துக்கொண்டார்.(1 இராஜா 3.1; 7:8; 9:24). ஆனால்,இதன் பின்பும் எகிப்து தேசத்தின் பார்வோன்கள் இஸ்ரவேல்

தேசத்தோடு சிநேகமாக இருக்கவில்லை.


கி.மு. 609 ஆவது வருஷத்தில் எகிப்து தேசத்தின் ராஜாவாகிய பார்வோன் நேகோ, இஸ்ரவேல் ராஜாவாகிய யோசியாவை கொன்றுபோட்டான் (2இராஜா 23:29).


பாபிலோனிய நேபுகாத்நேச்சார் பார்வோன் நேகோவை முறியடித்து பாலஸ்தீன தேசத்தை தன் ஆளுகைக்கு உட்படுத்தினார் (எரே 46:2).


ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், ஓசியா ஆகிய தீர்க்கதரிசிகள் எகிப்து தேசத்தின் பார்வோன்களையும், அவர்கள் மீது தங்கள் நம்பிக்கையை வைத்திருக்கும் இஸ்ரவேல் புத்திரரையும் கடிந்து கூறியிருக்கிறார்கள்

(ஏசா 30:1-5; 31.1; எரே 42:18; எசே 29-32; ஓசி 7.11).


பார்வோன்களின் ஆட்சி கி.மு. 323 ஆவது வருஷத்தில் முடிவுபெற்றது.

இதன் பின்பு எகிப்து தேசத்தை தாலமிக்கள் என்று அழைக்கப்பட்ட கிரேக்க  ராஜாக்கள்

ஆளுகை செய்தார்கள். இவர்களைத்தான்,தென்திசையின் ராஜா* என தானியேல் அழைக்கிறார் (தானி 11:59,11,14,25,40).


நன்றி: மறைபொருள் || சசிக்குமார்||



Post a Comment

0 Comments