Posts

Showing posts from September, 2023

ஐபிராத்து நதி || அறிந்து கொள்வோம் || பகுதி -130 ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி -130 Euphrates ஐபிராத்து நதி ( ஐபிராத்து என்பதற்கான கிரேக்க வார்த்தை "Eufratees") மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நீளமான நதி.மெசொப்பொத்தாவில் இரண்டு பெரிய நதிகள் பாய்ந்து ஓடுகிறது அவற்றில் ஐபிராத்தும் ஒன்று.அர்மேனியா என்ற மலைப்பகுதியில் ஐபிராத்து நதி உற்பத்தியாகிறது. அர்மேனியாவின் தற்கால பெயர் துருக்கி இங்கிருந்து தான் மேற்கு முகமாக மத்திய தரைக்கடலை நோக்கி இந்த நதி பாய்ந்து ஓடுகிறது.அதன் பின்பு தென்புறமாக திரும்பி சீரியா தேசத்தின் வழியாகபாய்ந்து, தென்கிழக்காக ஆயிரம் மைல் ஓடி, அதன் பின்பு டைகிரீஸ் நதியோடு கலந்து பெர்சிய வளைகுடாவில் போய்ச்சேருகிறது. ஐபிராத்து நதியின் நீளம் சுமார் 1780 மைலாகும். இந்த நதிதில் 1200 மைல் நீளத்திற்கு கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த நதிக்கரையில் பழங்காலத்து நாகரிகங்கள் ஏராளமாக தோன்றின என்று நம்பப்படுகிறது. ஈராக் தேசத்தின் ஐபிராத்து நதிக்கரையோரத்தில் பழங்காலத்து பட்டணங்கள் பல புதையுண்டு உள்ளது.குறிப்பாக பாபிலோன், எரிது, கீஷ், லார்சா, நீப்பூர், சிப்பார்,ஊர், போன்ற பட்டணங்கள். வேதாகமத்தில் ஐபிராத்து நதிக்கு பலவிதமான பெயர்கள் கொட...

எச். எ. கிருஷ்ண பிள்ளை || மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு ||

Image
மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு எச். எ. கிருஷ்ண பிள்ளை  H. A. Krishna Pillai ( கிறிஸ்தவ கம்பன் ) கிருஷ்ண பிள்ளை தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் கரையிருப்பு என்ற கிராமத்தில் 23-04-1827ஆண்டு  ஒரு இந்து வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்தார். அவர் தனது ஆரம்பக் கல்வியை தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியத்தில் பெற்றார்.பிறகு, தமிழ்நாட்டில் சாயர்பூரம் சென்று அங்குள்ள பிஷப்பான ராபர்ட் கால்டுவெல் அவர்களால் ஒரு தமிழ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். சாயர்புரத்தில் பணிபுரிந்தபோது பிள்ளை  கிறிஸ்தவத்தின் உண்மையான ஆழத்தை உனர்ந்தார்.ஒரு முறை மிஷனரி, அவருக்கு புதிய ஏற்பாட்டை  வழங்கப்பட்டது. அதைப் படிக்க முதலில் அவர் தயக்கம் காட்டினாலும்,மெதுவாக படிக்கத் தொடங்கியபோது,தேவனுடைய ஆவியானவர் அவருடைய இதயத்தில் ஆழமாக கிரியை செய்யத் ஆரம்பித்தார். இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்த அப்பெரிய தியாகம் அவரது வாழ்க்கையை மாற்றியது.இதன் விளைவாக அவர் மனந்திரும்பி தேவனுடைய பிள்ளையாக மாறினார்.பிறகு  சென்னையில் மைலாப்பூரில் உள்ள செயின்ட் தாமஸ் திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்றார். அப்பொழுது அவருக்கு ஹென்றி ஆல்பிரட் ...

கேத்தரின் பூத் || கிறிஸ்தவ வரலாறு ||

Image
  கிறிஸ்தவ வரலாறு கேத்தரின் பூத்  (1829-1890) (சால்வேஷன் ஆர்மி) குழந்தை பருவம் :  கேத்தரீன் ஜனவரி 17, 1829 இல் இங்கிலாந்தின் டெர்பிஷையர் நகரில் மெத்தடிஸ்ட் திருச்சபையில் அங்கத்தினர்களாக இருந்த மம்ஃபோர்ட் மற்றும் சாரா மில்வர்ட் தம்பதியினரின் ஐந்தாம் குழந்தை பிறந்தார். இவரது தந்தையார் திருச்சபையில் சாதாரண உதவி போதகராக பணியாற்றிக்கொண்டு,போக்குவரத்து வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தார். இவரது தாயார் சிறுவிலிருந்தே கேத்தரீனுக்கு கிறிஸ்தவ போதனைகளையும், ஒழுக்கத்தையும், சமூக சேவைகளையும், அதிகமாக கற்றுக்கொடுத்தார். பள்ளி வாழ்க்கை :  சிறு வயதிலிருந்தே, கேத்தரின் கல்வி அறிவிலும் கேள்வி ஞானத்திலும் சிறந்து விளங்கினாள். தன்னுடைய 12 வயதுக்கு முன்பே வேதாகமத்தை எட்டு முறை முழுவதுமாக வாசித்து முடித்துவிட்டார்.இங்கிலாந்தில் தேனீர் தயாரிக்கும் சீனி தயாரிக்கும் ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாகப் பயன்படுத்துவதை அறிந்துகொண்ட கேத்தரீன், அன்றிலிருந்து சீனி சாப்பிடுவதையும் கைவிட்டுவிட்டார்.இரவுக்குப் பிறகு தனது தந்தையாரிடம் அன்றைய காலகட்டத்தில் இருந்த சமூகப் பிரச்சினைகளைப்...

சீஷர்களின் மரணம் || அறிந்து கொள்வோம் || பகுதி - 129 ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி - 129 சீஷர்களின் மரணம்  📚மத்தேயு :- எத்தோபியா நாட்டில் ஈட்டியால் குத்தப்பட்டு குடல் சரிந்து இறந்தார். இவர் குடல் சரிந்து இறந்தாலும் உயிரிழந்து கிடக்கும் கிறிஸ்தவத்தை உயிர்பிக்கிறது இவர் எழுதிய மத்தேயு நற்செய்தி நூல். 📚மாற்கு :-  அலெக்சண்டரியா பட்டணத்தில் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். இவரை வீதிகள்தோறும் இழுத்துச்செல்லப்பட்டு சாகடிக்கப்பட்டாலும் இவர் எழுதிய மாற்கு நற்செய்தி நூல் வீதிதோறும் பிரசங்கிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. 📚லூக்கா :-  கிரேக்க நாட்டில் ஒலிவமரத்தில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். ஆனால் இவர் எழுதிய லூக்கா நற்செய்தி நூல் பாவ சேற்றில் வாழும் பலரை இன்றும் தூக்கி எடுத்துக்கொண்டே இருக்கிறது. 📚யோவான் :- கொதிக்கும் எண்ணையில் போடப்பட்டும் சாகாததினால் பத்மூ தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். அங்கிருந்து அவர் எழுதியதே வெளிபடுத்தல் சுவிசேஷ நூல், பட்டினி கிடந்து சுட்டெரிக்கும் வெயிலில் சுருண்டு விழுந்து இறந்தாலும் வாழ்வில் வாழ வழியின்றி சுருண்டு விழ கிடப்பவனை எழும்பி நடக்கச் செய்கிறது இவர் எழுதிய யோவான் சுவிசேஷம். 📚அந்திரேய...

ஃபிரடெரிக் வில்லியம் சாவிட்ஜ் ||மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு ||

Image
    மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு ஃபிரடெரிக் வில்லியம் சாவிட்ஜ்  Frederick William Savidge  ஃபிரடெரிக் வில்லியம் சாவிட்ஜ் 1862 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ்ஷையரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார் . அவரது குடும்பம் பாப்டிஸ்ட் தேவாலயத்தைச் சேர்ந்தது.அவர் முனைவர் பட்டம் பெற்று லண்டனில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தார். வடகிழக்கு இந்தியாவில் மிஷனரிகளின் தேவை இருந்தது என்று அறிந்த அவர் உடனடியாக தனது வேலையை ராஜினாமா செய்தார்.லண்டனில் உள்ள பாப்டிஸ்ட் சபையின் மூலம் தனது வருங்கால மிஷனரி கூட்டாளியான ஜேஎச் லோரனை சந்தித்து இருவரும் நண்பர்களாகி இந்தியாவில் பணியாற்ற ஆர்திங்டன் பழங்குடியினர் மிஷன் வழங்கிய மிஷனரி ஊழிய வாய்ப்பை ஏற்றுக்கொண்டு இங்கிலாந்தை விட்டு வெளியேறினார். அவர் இந்தியாவிற்கு கப்பலில் பயணம் செய்து 1891 நவம்பரில் கல்கத்தா வந்து சேர்ந்தார். அவர் 1891ஆம் ஆண்டில் வங்காளத்தை அடைந்தாலும், இன்னும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அவரால் மிசோரமை அடைய முடியவில்லை.கிறிஸ்துவின் சமாதான செய்தியைப் பரப்புவதற்காக அவர் தனது நண்பர் ஜேம்ஸ் ஹெர்பர்ட் லோரெய்னுடன் சேர்ந்து ஒரு ஆபத்தான பயணத்தை மேற்கொ...