சீஷர்களின் மரணம் || அறிந்து கொள்வோம் || பகுதி - 129 ||

அறிந்து கொள்வோம்

பகுதி - 129


சீஷர்களின் மரணம் 



📚மத்தேயு:-

எத்தோபியா நாட்டில் ஈட்டியால் குத்தப்பட்டு குடல் சரிந்து இறந்தார். இவர் குடல் சரிந்து இறந்தாலும் உயிரிழந்து கிடக்கும் கிறிஸ்தவத்தை உயிர்பிக்கிறது இவர் எழுதிய மத்தேயு நற்செய்தி நூல்.


📚மாற்கு:- 

அலெக்சண்டரியா பட்டணத்தில் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். இவரை வீதிகள்தோறும் இழுத்துச்செல்லப்பட்டு சாகடிக்கப்பட்டாலும் இவர் எழுதிய மாற்கு நற்செய்தி நூல் வீதிதோறும் பிரசங்கிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.


📚லூக்கா:- 

கிரேக்க நாட்டில் ஒலிவமரத்தில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். ஆனால் இவர் எழுதிய லூக்கா நற்செய்தி நூல் பாவ சேற்றில் வாழும் பலரை இன்றும் தூக்கி எடுத்துக்கொண்டே இருக்கிறது.


📚யோவான்:-

கொதிக்கும் எண்ணையில் போடப்பட்டும் சாகாததினால் பத்மூ தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். அங்கிருந்து அவர் எழுதியதே வெளிபடுத்தல் சுவிசேஷ நூல், பட்டினி கிடந்து சுட்டெரிக்கும் வெயிலில் சுருண்டு விழுந்து இறந்தாலும் வாழ்வில் வாழ வழியின்றி சுருண்டு விழ கிடப்பவனை எழும்பி நடக்கச் செய்கிறது இவர் எழுதிய யோவான் சுவிசேஷம்.


📚அந்திரேயா:- 

சிலுவையில் அறையப்பட்ட பின்னர் சிலுவையில் இருந்தே பிரசங்கிக்க வற்புறுத்தப்பட்டிருக்கிறார். பிரசங்கித்துக்கொண்டே மரித்தார்.


📚பர்த்தலோமியு:- 

உயிரோடு தோலுரிக்கப்பட்டு நரக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.


📚தோமா:-

இந்தியாவின் சென்னையில் ஈடியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.


📚யூதா:-

மரத்தில் கட்டி அம்புகள் எய்து கொல்லப்பட்டார்


📚பர்ணபா:- 

கலோனிக்கா என்ற நகரில் கல் எறிந்து கொல்லப்பட்டார்.


📚பேதுரு:-

ரோமில் சிலுவையில் தலைகீழாக வைத்து அடித்து கொல்லப்பட்டார்.


📚பெரிய யாக்கோபு:- 

எருசலேம் நகரில் தலையை வெட்டி கொல்லப்பட்டார்.


📚சின்ன யாக்கோபு:- 

கோபுரத்தின் உச்சியிலிருந்து தள்ளப்பட்டும் சாகததால் அடித்தே கொல்லப்பட்டார்.


📚பவுல்:- 

நீரோ என்ற ரோம பேரரசனால் தலை தூண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.


முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவம் சந்தித்த வன்கொடுமைகள் தான் இவை ஆனாலும் ஒரு ஒற்றுமை என்னவென்றால்…….. 


சாதித்த பின்னர் தான் சாகடிக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்துவை போதித்த பின்பு தான் புதைக்கப்பட்டுள்ளனர். 


நாமும் புதைக்கப்படும் முன் விதைத்துவிடுவோம்

அழிக்கப்படும்முன் ஆத்தும அறுவடை செய்வோம் 




Post a Comment

0 Comments