யோதாம் || அறிந்து கொள்வோம் பகுதி - 74 ||
அறிந்து கொள்வோம் பகுதி - 74 யோதாம் வேதத்தில் இரண்டு யோதாம் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் உசியாவின் குமாரன். இரண்டாவது கிதியோனின் இளைய மகன். 1.உசியாவின் குமாரன் . உசியாவிற்க்கு பிறகு யூதாவின் 12-வது ராஜாவாக ஆளுகைக்கு வந்தான். இவனுடைய தாயின் பெயர் எருசாள். உசியாவின் கடைசி நாட்களில் அவன் தொழுநோயால் பாதிக்கப்பட்டதின் காரணமாக அரசுக் காரியங்களைக் கவனிக்க முடியவில்லை. இவனுக்குப் பதிலாக இவனுடைய குமாரன் யோதாம் ஏழு ஆண்டுகள் அரசாங்கத்தைக் கவனித்துவந்தான். (2 நாளா.26:21, 23; 27:1). யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாக இருந்து 16- ஆண்டுகள் எருசலேமில் ஆளுகைசெய்தான். (2 நாளா. 27:1). இவன் தன் தகப்பனைப் போலக் கர்த்தருடைய பார்வைக்குச் சரியானவைகளைச் செய்தான். "அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஒபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான். யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும் காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான். (2 நாளா. 27:3, 4). இவனுடைய ஆளுகையின்போது தேசம் செழிப்பாக இருந்தது." யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய ...