ஆவிக்குரிய யுத்தம் || கடிந்து ஜெபிக்க மற்றும் சுதந்தரிக்க வேண்டியவைகள் ||

 ஆவிக்குரிய யுத்தம்

விசுவாச அறிக்கை

(கடிந்து ஜெபிக்க மற்றும் சுதந்தரிக்க வேண்டியவைகள்)

Prepared By.Pr.w.Samuvel Selvaraj Pollachi



கடிந்து ஜெபிக்க வேண்டியவை


1. அக்கிரமசிந்தை


  • என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார் -சங் 66 :15.


ஜெபம்

ஆண்டவர் எனக்கு செவிகொடாதபடி என் இருதயத்தில் இருக்கிற அக்கிரமசிந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன். இயேசுவின் நாமத்தில் கடிந்துகொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெயம் எடுக்கிறேன்.


2.மாம்ச சிந்தை


  • மாம்ச்சிந்தை மரணம். ஆளியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். ரோமர் 8:6.


ஜெபம்

ஜீவனையும் சமாதானத்தையும் இழக்கச்செய்து மரணத்தை கொடுக்கிற மாம்ச்சிந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். எதிர்க்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கடிந்துகொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெயம் எடுக்கிறேன்.


  • எப்படியென்றால். மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும் கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. ரோமர் 8.7


ஜெபம்:

தேவனுக்கு விரோதமான பகையைக் கொடுத்து தேவனுடைய பிரமாணங்களுக்கு கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் செய்கிற மாம்சசிந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கடிந்துகொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெயம் எடுக்கிறேன்.


3.வீணான சிந்தை


  • ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது. என்னவெனில் மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.எபேசியர் 4:17


ஜெபம்:

புறஜாதிகள் நடக்கிறதுபோல என்னை நடக்கச்செய்கிற வீணான சிந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன். கிறிஸ்துவின் நாமத்தில் கடிந்துகொள்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெயம் எடுக்கிறேன்.


4.மேட்டிமைச் சிந்தை


  • நல்லது,அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன. நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய், மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு. ரோமர் 11:20


ஜெபம்:

விசுவாசத்தில் நிற்காமலும் தேவனுக்கு பயப்படாமலும்் ருக்கச்செய்கிற மேட்டிமைச்சிந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கடிந்துகொள்கிறேன்.இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெயம் எடுக்கிறேன்.


5.கெட்ட சிந்தை


  • கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும் இப்படிப்பட்டவர்களை

விட்டு விலகு. 1 தீமோ 6:5.


ஜெபம்:

சத்தியமில்லாதபடிக்கும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களுக்கும் என்னை நடத்துகிற கெட்ட சிந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கடிந்துகொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெயம் எடுக்கிறேன்.


6. இறுமாப்பான சிந்தை


  • இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபளிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்...

1 தீமோ 6:17


ஜெபம்:

நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைத்து நான் அனுபவிக்கிறதற்குச் சகல நன்மைகளையும் எனக்கு சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்காமலும் இருக்கும்படியாக செய்கிற இறுமாப்பான சிந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன். இயேசு கடிந்துகொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெயம் எடுக்கிறேன்.



சுதந்தரிக்க வேண்டியவை


1.கர்த்தருடைய சிந்தை

      (ரோமர் 11: 33- 36)


1. The greatness of God.


தேவன் மகத்துவமானவர் என்றும்


(தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது)



2.His Judgements are unsearchable


அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள் என்றும்.


3. His ways are untraceable


Man's inability to find  God's ways


அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள் என்றும்.


4.His secrets are unsearchable


அவருடைய இரகசியங்கள் ஆராயப்படாதவைகள் என்றும்


5. No one can be a counselor for God


தேவனுக்கு ஆலோசனைக்காரன் என்பதே இல்லை என்றும்.


6. அவர் நமக்கு யாதொரு பதிலையும் கொடுப்பதற்கு நாம் அவருக்கு ஒன்றையும் கொடுக்க முடியாது கொடுத்ததுமில்லை என்றும்


7: God's Independence


தேவன் தனித்துவமானவர் என்றும்.


8. For from Him and through Him and to Him are all things 

சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது என்பதையும்


9.To be Him the glory forever and ever. Amen! 


அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக என்பதையும் உணர்ந்து


அறியும்படிக்கும் நடைமுறையில் வெளிப்படுத்தும்படிக்கும். கர்த்தருடைய சிந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சுதந்தரிக்கிறேன்.



2.கிறிஸ்துவின் சிந்தை

               (1 கொரி 2:9 – 16 )


1.தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளை தமது ஆவியினாலே நமக்கு வெளிப்படுத்துவார்.


ஜெபம்:

தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளை ஆவியினாலே எனக்கு வெளிபடுத்தும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே கிறிஸ்துவின் சிந்தையை சுதந்தரிக்கிறேன்


2.தேவனுடைய ஆவியானவர் தேவனுக்குரியவைகளை நமக்கு அறிவிப்பார்


ஜெபம்

தேவனுடைய ஆவியானவர் தேவனுக்குரியவைகளை எனக்கு

அறிவிக்கும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே கிறிஸ்துவின் சிந்தையை சுதந்தரிக்கிறேன்.


3.தேவனிடலிருந்து புறப்படுகிற ஆவியை நாம் பெற்றிருக்கிறபடியால் தேவனால் நமக்கு அருளப்பட்டவைகளை நாம் அறிய முடியும்.


ஜெபம்

தேவனிடலிருந்து புறப்படுகிற ஆவியை நான் பெற்றிருக்கிறபடியால் தேவனால் எனக்கு அருளப்பட்டவைகளை நான் அறிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே கிறிஸ்துவின் சிந்தையை சுதந்தரிக்கிறேன்.


4.மனுஷ ஞானம் இல்லாமல் பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளை உடையவர்களாய் இருந்து, ஆவிக்குரியவைகளோடே ஆவிக்குரியவைகளை சம்பந்தப்படுத்தி அறிந்து கொள்ள இயலும்...


ஜெபம்:

 மனுஷ ஞானம் இல்லாமல் பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளை உடையவளாய் இருந்து ஆவிக்குரியவைகளோடே ஆவிக்குரியவைகளை சம்பந்தப்படுத்தி நான் அறிந்து கொள்ள இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே கிறிஸ்துவின் சிந்தையை சுதந்தரிக்கிறேன்.


3.கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தை.       ( பிலி  2:2-8)


1.நாம் ஏக சிந்தையும் ஏக அன்புள்ளவர்களுமாயிருந்து ஒன்றிணைந்த ஆத்துமாக்களாய் கிறிஸ்துவுக்குள் ம ஒன்றையே சிந்திக்கிறவர்களாய் இருப்போம்..


ஜெபம்.

 நான் ஏக சிந்தையும் ஏக அன்புள்ளவர்களுமாயிருந்து ஒன்றிணைந்த ஆத்துமாக்களாய் கிறிஸ்துவுக்குள் ஒன்றையே சிந்திக்கிறவனாய் இருக்கும்படி கிறிஸ்துவின் நாமத்தில் கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையை சுதந்தரிக்கிறேன்.


2.யாதொன்றையும் வாதினாலாவது விண்பெருமையினாலாவது செய்கிறவனாயிராததினால், மன தாழ்மையே மேலோங்கி,ஒருவரையொருவர் தங்களைக் காட்டிலும் மேன்மையுள்ளவர்களாய் மதிக்கும் உயர்ந்த எண்ணம் உண்டாகும்...


ஜெபம்

யாதொன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது

செய்கிறவனாயிராததினால், மன தாழ்மையே மேலோங்கி, ஒருவரையொருவர் தங்களைக் காட்டிலும் மேன்மையுள்ளவர்களாய் மதிக்கும் உயர்ந்த எண்ணம் உண்டாகும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையை சுதந்தரிக்கிறேன்.


3.ஒருவனும் தனக்குரியதை மாத்திரமல்ல, பிறருக்குரியதையும் முக்கியமாக கருதுவான்.


ஜெபம்:

எனக்குரியதை மாத்திரமல்ல, பிறருக்குரியதையும் முக்கியமாக கருதும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையை சுதந்தரிக்கிறேன்.


4.கிறிஸ்துவை போல் நம்முடைய அந்தஸ்தை எண்ணாமல் நம்மை வெறுமையாக்கவும். மரணத்திலும் நாம் கீழ்ப்படிதலுள்ளவர்களாய் மிகுந்த தாழ்மையை இயல்பாகவே வெளிபடுத்த முடியும். 


ஜெபம்

கிறிஸ்துவை போல், என்னுடைய அந்தஸ்தை எண்ணாமல், என்னை வெறுமையாக்கவும், மரணத்திலும் நான் கீழ்ப்படிதல் உள்ளவனாய் மிகுந்த தாழ்மையை இயல்பாகவே வெளிப்படுத்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையை சுதந்தரிக்கிறேன்.


5.ஜென்மசுபாவமில்லாமல் ஆவிக்குரியவைகளை ஏற்று கொள்ளும். ஆவியானவர் அருளும் 

சுபாவம் உண்டாகும்.


ஜெபம்:

ஜென்மசுபாவமில்லாமல், ஆவிக்குரியவைகளை ஏற்று கொள்ளும்.

ஆவியானவர் ஆளும் சுபாவம் உண்டாகும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே கிறிஸ்துவின் சிந்தையை சுதந்தரிக்கிறேன்.


6.ஆவிக்குரியவைகளை ஆவிக்கேற்ற பிரகாரமாய் நாம் அவைகளை ஆராய்ந்து. நிதானித்து அறிய ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்...


ஜெபம்:

ஆவிக்குரியவைகளை ஆவிக்கேற்ற பிரகாரமாய், நான்

அவைகளை ஆராய்ந்து, நிதானித்து அறிய ஆவியானவர் எனக்கு உதவி செய்யும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே கிறிஸ்துவின் சிந்தையை சுதந்தரிக்கிறேன்.


7.ஆவியானவர் நம்மை எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்க செய்வார்.


ஜெபம்:

ஆவியானவர் என்னை எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்க செய்யும் படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கிறிஸ்துவின் சிந்தையை

சுதந்தரிக்கிறேன்.


8.நம்மை ஒருவனும் ஆராய்ந்து நிதானிக்க ஆவியானவர் இடங்கொடார்..


ஜெபம்:

என்னை ஒருவனும் ஆராய்ந்து நிதானிக்க ஆவியானவர்

இடங்கொடாதபடி இயேசு கிறிஸ்துவின்

நாமத்திலே கிறிஸ்துவின் சிந்தையை

சுதந்தரிக்கிறேன்.


4.கிறிஸ்து எனக்காக மாம்சத்திலேபாடுபட்ட சிந்தையை

ஆயுதமாகத்  தரித்துக்கொள்ளுகிறேன்.   

            ( 1 பேதுரு4: 1-4)


1.கிறிஸ்துவுக்காக மாம்சத்தில்

பாடுபடுவது நமக்கு இலகுவாக

இருக்கும்.


ஜெபம்

கிறிஸ்துவுக்காக மாம்சத்தில் பாடுபடுவது எனக்கு இலகுவாக இருக்கும்படி கிறிஸ்து எனக்காக மாம்சத்திலே பாடுபட்ட சிந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுகிறேன்.


2.அவ்விதமாய் மாம்சத்தில் பாடுபடுபவன் மனுஷனுடைய இச்சைகளுக்கு இடங்கொடாமால் தேவசித்தத்தின்படியே வாழும் பொருட்டு பாவங்களற்று இருப்பான்..


ஜெபம்

அவ்விதமாய் மாம்சத்தில் பாடுபடுகிறவனாய் மனுஷனுடைய

இச்சைகளுக்கு இடங்கொடாமால், தேவசித்தத்தின்படியே வாழும் பொருட்டு பாவங்களற்று இருக்க கிறிஸ்து எனக்காக மாம்சத்திலே பாடுபட்ட சிந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுகிறேன்.


3.மாம்சத்தில் பாடுஅநுபவிக்கிறவன்

பழைய புறஜாதிகளுடைய

இஷ்டப்படி, வாழமாட்டான்.


ஜெபம்:

மாம்சத்தில் பாடுஅநுபவிக்கவும் பழைய புறஜாதிகளுடைய இஷ்டப்படி வாழாதபடி காணப்பட கிறிஸ்து எனக்காக மாம்சத்திலே பாடுபட்ட சிந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுகிறேன்.


4.மாம்சத்தில் பாடுபடுகிறவனுக்கு காமவிகாரம் துர்இச்சை, மதுபானம்பண்ணுதல்,

களியாட்டுகள் வெறிகள் அருவருப்பானவைகள்.


ஜெபம்

மாம்சத்தில் பாடுபடுகிற எனக்கு காமவிகாரம். துர்இச்சை மதுபானம்பண்ணுதல், களியாட்டுகள் , நெறிகள் அருவருப்பானவைகளாய் காணப்படும்படி சிறிஸ்து எனக்காக மாம்சத்திலே பாடுபட்ட சிந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுகிறேன்.


5.மாம்சத்தில்  பாடுபடுகிறவன் துன்மார்க்க வாழ்வு வாழாததினால், அப்படி வாழ்பவர்களின் எதிர்ப்பையும், வெறுப்பையும் தூஷணத்தையும் சகித்தவனாய், கிறிஸ்துவின் சிந்தையை ஆயுதமாய் தரித்து வாழ்கிறவனாயிருப்பான்.


ஜெபம்:

மாமிசத்தில் பாடுபடுகிற நான் துன்மார்க்க வாழ்வு வாழாததினால், அப்படி வாழ்பவர்களின் எதிர்ப்பையும். வெறுப்பையும். தூஷணத்தையும் சகித்தவனாய், கிறிஸ்துவின் சிந்தையை ஆயுதமாய் தரித்து வாழுகிறவனாய் இருக்க கிறிஸ்து எனக்காக மாம்சத்திலே பாடுபட்ட சிந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுகிறேன்.


       பிரகடனம் -Declaration


ஆவியின் சிந்தை

    (ரோமர் 8:5,6,27)


1.ஆவியின் சிந்தையை உடையவனாய், ஆவியின்படியாய் நடந்து. ஆவிக்குரியவைகளை சிந்திக்கிறவனாகையால், ஜீவனையும் மிகுந்த சமாதானத்தையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உடையவனாயிருக்கிறேன்.


2.ஆவியின் சிந்தையை உடையவனுக்குள்ளிருந்து ஆவியானவர்

பரிசுத்தவான்களுக்காய் வேண்டுதல் செய்கிறபடியால், என் இருதயத்தை சுத்திகரித்து, என்னை பரிசுத்தவானாய் நிலைநிறுத்தி ஆவியானவர் எனக்கு மேன்மேலும் தம்முடைய சிந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அருள்வார்….. ஆமென்…..



Post a Comment

1 Comments