ஆங்கில மொழிபெயர்ப்பு வந்த பாதை || அறிந்து கொள்வோம் பகுதி -73 ||

அறிந்து கொள்வோம்

பகுதி -73


ஆங்கில மொழிபெயர்ப்பு வந்த பாதை



14ம் நூற்றாண்டு வரை இங்கிலாந்து, தனது சொந்த மொழியான ஆங்கித்தில் முழுமையான வேதாகமத்தை கொண்டிருக்கவில்லை. அவர்களுடைய பிரதான புகார்களில் ஒன்று. கத்தோலிக்க மதகுருமார்களின் லத்தீன் மொழி மக்களுக்கு புரியவில்லை என்பதே அவருடைய வாதமாய் இருந்தது.இதை மாற்ற சில பரிசுத்த மனிதர்கள் முயற்சி எடுத்தார்கள்.

அவர்களின் விபரக்குறிப்பு


ஜான் விக்லிஃப்:- 

( John Wycliffe 1382 AD)


ஜான்ன் விக்லிஃப் ஒரு ஆக்ஸ்போர்டு பேராசிரியர், அறிஞர் மற்றும் இறையியலாளர்.இவர்தான் கிறிஸ்தவ சீர்திருத்தத்தின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டார்.இவர் அரசியல்

அதிகாரமிக்க கத்தோலிக்க

திருச்சபையின் நிர்வாக முறைமையையும்,யாரும் கேள்வி கேட்க முடியாத திருச்சபை போதனைகளையும் எதிர்த்தார். கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை தங்கள் சொந்த மொழியில் வாசிக்க, கேட்க செய்ய வேண்டும் என்று விக்லிஃப் குரல் எழுப்பினார். ஆகவே ஜான் விக்லிஃப் வேதாகமத்தை லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதை கி.பி 1408 ம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபை தடை செய்தது.பின் நாட்களில் வந்த போப்பாண்டவர் Gregory XI, வேதாகமத்தை வீக்லிஃப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாலும். அப்போதய போப்பின் போதனையை எதிர்த்ததாலும் மிகவும் கோபமடைந்து, விக்லிஃப் இறந்து 44 ஆண்டுகளுக்குப் பிறகு. அவருடைய எலும்புகளை தோண்டி எடுத்து, அதை பொடியாக்கி, பின்னர் லண்டன் ஆற்றில் கரைத்து விட கட்டளையிட்டார்.


ஜான் ஹஸ்:-

( John Hus-1415 AD)


ஜான் ஹஸ்  ஒரு இறையியலாளர், ரோமன் கத்தோலிக்க மத குரு மற்றும் ஒரு சீர்திருத்தவாதியாக மாறிய ஒரு தத்துவ போதகர். மேலும் இவர் ஜான் விக்லிஃப்பின் மாணவர். இவர் கத்தோலிக்க மதகுருமார்களின் அமைப்பை சீர்படுத்தவும். திருச்சபையின் ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும் ஹஸ் தனது பிரசங்க பிடத்தைப் பயன்படுத்தினார்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபை. மக்கள் வேதாகத்தை வாசிப்பதை குறித்து கவலை தெரிவித்தது. ஆனால் சமூக சீர்திருத்தத்தை வேதாகம கல்வியறிவின் மூலம் மட்டுமே அடைய முடியும் என்று ஹஸ் உறுதியாக நம்பினார். லத்தீன் மொழிக்கு பதிலாக உள்நாட்டு மொழியில் எழுதப்பட்ட வேதாகமத்தை மக்களுக்கு வழங்கம் ஜான் ஹஸ் அறிஞர்கள் குழுவைக் ஏற்படுத்தி 1406 ம் ஆண்டில் புதிய ஏற்பாடு. சங்கீதம் மற்றும் நீதிமொழிகள் அடங்கிய வேதாகத்தை தன் தாய்மொழியில் மொழிபெயர்ந்தார்.

ஆனால் கத்தோலிக்க திருச்சபை ஹஸ் மொழி பெயர்த்த வேதாகமம் எரிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டது. ஆகவே 1415 ஆம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்க கோட்பாடுகளுக்கு எதிரான கொள்கைக்காக, ஜான் விக்லிஃப்பின் வேதாகம கையெழுத்துப் பிரதிகளை பயன்படுத்தி, ஜான் ஹஸ் உயிரோடு எரித்து கொல்ல உத்தரவிட்டது. மரிக்கும்போது இவர் கூறிய கடைசி வார்த்தைகள் 

"இன்னும் 100 ஆண்டுகளில் திருச்சபையின் சீர்திருத்தத்திற்காக ஒரு மனிதனை கடவுள் எழுப்புவார்; அவரை உங்களால் அடக்க முடியாது" என்று உரக்ககூறி மரித்தார்.


இத்தாலியின் கிரோலாமோ சவோனரோலா (1452-1498):

(Girolamo Savonarola)

இவர் ஒரு ரோமன் கத்தோலிக்க மதகுரு சவோனரோலா கத்தோலிக்க மதகுருமார்களின் ஊழல்கள் சர்வாதிகார ஆட்சி மற்றும் ஏழைகளை சுரண்டுவதை வன்மையாக கண்டித்தார். இவர் தைரியமாக கத்தோலிக்க கோட்பாடுகளான பாதிரியார்களிடம் பாவ அறிக்கை செய்தல், செத்துப்போனவர்களின் ஆத்தும சுத்திகரிப்பு, புனித யாத்திரை புனிதர்களின் வழிபாடு, நினைவுச்சின்னங்கள் போன்றவற்றுக்கு எதிராக கடுமையாக பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, போப்பாண்டவர் இவரை கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பணிநீக்கம் செய்து, சவோனரோலாவைவும் அவரது இரண்டு ஆதரவாளர்களும் சிறையில் அடைக்க கட்டளை இட்டார். பின்னர் 23 மே 1498 இல், திருச்சபை மற்றும் அரசாங்க அதிகாரிகள் முன்னிலையில், கத்தோலிக்க கோட்பாடுகளை எதிர்த்ததற்காக புகழ்பெற்ற புளோரன்ஸ் சதுக்கத்தில் மூன்றுபேரும் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார்கள்.


ஜொஹன் குட்டன்பெர்க்:-

(Johannes Gutenberg)


ஜெர்மனியில் குட்டன்பெர்க் என்ற இடத்தில் 1455 ம் ஆண்டு அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தார். இதனால் 1456 ஆண்டு, உலகத்தில் முதன்முறையாக லத்தீன் வேதாகமம் அச்சிட்டப்பட்டது. அச்சுப் இயந்திரத்தின் கண்டுபிடிப்பு, வேதாகம நூல்களைப் அச்சிடுவதற்கு பெரிதும் உதவியது. இதனை பலர் படிக்கக் தொடங்கியதும். மற்றமொழி பேசிய மக்களிடையே அவர்களுடைய தாய் மொழியில் வேதாகமத்தை வாசிக்க தூண்டுதல் ஏற்பட்டது. இதனால் 25 ஆண்டுகளுக்குள் ஐரோப்பாவில் 

100 க்கும் மேற்பட்ட அச்சகங்கள் நிறுவப்பட்டன

(இத்தாலி -50, ஜெர்மனி-80, மற்றும் இங்கிலாந்து -4). 

குட்டன்பெர்க் அச்சககம் பைபிள் அச்சிடப்பட்ட புத்தகத்தின் வரலாற்றில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. காலப்போக்கில், இந்த அச்சிடும் நுட்பம் மறுமலர்ச்சி. சீர்திருத்தம். அறிவொளி போன்ற இயக்கங்களின் கருத்துக்களை பரப்ப உதவியது.


எராஸ்மஸ்:- 

Erasmus -(AD 1466-1536)


ஒரு கத்தோலிக்க மதகுருமார், லத்தீன் பேராசிரியர் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கழைக் களகத்தின் கிரேக்க அறிஞர். இவரது செல்வாக்கு மிக்க புலமை மற்றும் எழுத்துக்களுக்காக "மனிதநேயவாதிகளின் இளவரசர்" என்று அழைக்கப்பட்டார்.

இவர் கத்தோலிக்க திருச்சபையினுள் நடந்த முறைகேடுகளை விமர்சித்தபோதும், சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்து திருச்சபையையும் அதன் மதகுருக்களின் துஷ்பிரயோகங்களையும் சீர்திருத்துவதில் உறுதியாக இருந்தார்.

இவர் வேதாகமத்தின் மூல மொழியான கிரேக்க மற்றும் எபிரேய கையெழுத்துப் பிரதிகளை கொண்டு லத்தீன் மொழிபெயர்ப்பு வேதாகமத்தில் பல குறைவுபாடுகளை கண்டார். மேலும் எராஸ்மஸ் அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை லத்தீன் மொழிபெயர்ப்பு மிகவும் சிதைத்துவிட்டதாக கூறினார். ஆனால் லத்தீன் மொழி வேதாகமத்தின் மூல மொழி இல்லாவிட்டாலும். கத்தோலிக்க திருச்சபை வேதாகமத்தை லத்தீன் தவிர வேறு எந்த மொழியிலும் படிக்கும் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவார்கள் என்று அறிவித்தது.

இந்நிலையில் 1516 ஆம் ஆண்டில். எராஸ்மஸ் அவர்கள் புதிய கிரேக்க வேதாகமத்தையும், குறைவுபாடுகள் நிறைந்த லத்தீன் மொழி பெயர்ப்பை சரிசெய்து, மிகவும் துல்லியமான கிரேக்க-லத்தீன் இணைப்பில் புதிய ஏற்பாட்டை வெளியிட்டார். ( Greek- Latin Parallel Bible) இவருடைய கிரேக்க வேதாகமம், பின்னர் பல திருத்தங்களுடன் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழி பெயர்ப்பிற்கு அடிப்படையாக அமைந்தது.


வில்லியம் டின்டேல் 

William Tyndale - AD 1485-1536.


ஒரு கத்தோலிக்க மதகுரு ஆக்ஸ்போர்டு பல்கழைகளகத்தின் அறிஞர். இவர் 8 மொழிகளில் சாளமாக. பேசவும். எழுதவும் புலமை பெற்றவர். "சீர்திருத்தவாதிகளின் கேப்டன்" என்றால் மிகையாகாது. இவர் எராஸ்மஸ் அவர்களின் கிரேக்க மொழியிலிருந்த வேதாகமத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கபட்ட புதிய ஏற்பாட்டை அச்சிட்டார். ஆனால் இங்கிலாந்தில் வெளியிட கத்தோலிக்கை திருச்சபை ஒப்புதல் கிடைக்கவில்லை.

ஆகவே வில்லியம் டின்டேல் ஆங்கில வேதாகமத்தை கம்பளி நூல்கண்டு இடையேயும். மற்றும் மதுபான பெட்டிகளில் வைத்து வியாபாரிகள் மூலம் இங்கிலாந்திற்கு கடத்தி வரப்பட்டன. ஆங்கில வேதாகமத்தை ஒவ்வொரும் இங்கிலாந்தில் வாசிக்க ஆரம்பித்தார்கள்.

வில்லியம் டின்டேல் அவரகளின் ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பை இங்கிலாந்து அசசாங்கம் இரும்பு கரம் கொண்டு அடக்கியது. ஆகவே இங்கிலாந்து அரசாங்கமே வில்லியம் டின்டேலின் வேதாகமத்தை மற்ற எவரும் வாங்ககூடாது என்பதற்காக அதிக விலை கொடுத்து வாங்கி அதை தீயிலிட்டு எரித்தார்கள்.

இந்நிலையில் 1536 ஆம் ஆண்டில் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு தெருவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு கம்பத்தில் கட்டப்பட்ட நிலையில் தீயிலிட்டு கொளுத்தப்பட்டார். இவர் சாகும் போது "ஆண்டவரே, இங்கிலாந்து மன்னரின் கண்களைத் திறந்தருளும்" என்று உரக்க ஜெபித்து தீயில் சாம்பலானார்.


மார்ட்டின் லூதர்:

(Martin Luther -1534)


உலகின் தலைசிறந்த ஜெர்மன் தேசத்து வேத பண்டிதர். கத்தோலிக்க பாதிரியாராக இருந்தாலும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தவறுகளுக்கும் ஊழல்களுக்கும் எதிராக குரல் கொடுத்தவர்.உலகின் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும், தாய்மொழியில் வேதாகத்தை வாசிக்க அனுமதி வேண்டும் என்று ஜெர்மனியில் ஓங்கி குரல் கொடுத்தார். மேலும் வேதாகமத்திற்கு எதிரான கத்தோலிக்க திருச்சபையின் 95 கோட்பாடுகளை அக்டோபர் 31, 1517 நாள் ஜெர்மனியில் விட்டன்பர்க் ஆலய கதவில் தொங்கவிட்ட பெருமை இவரை சேரும். இதற்காக கத்தோலிக்க திருச்சபை இவரை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில் மார்டின் லூத்தர், எராஸ்மஸின் கிரேக்க-லத்தீன் புதிய ஏற்பாட்டிலிருந்து முதன்முறையாக ஜெரமன் மொழியில் வேதாகத்தை மொழிபெயர்த்து, 1522 செப்டம்பர் மாதம் வெளியிட்டார். கத்தோலிக்க திருச்சபை மார்டின் லூத்தரை துர் உபதேசம் செய்கின்றார் என்றுகூறி கொலை செய்ய வகை தேடினார்கள். ஆனால் அவருடைய நண்பரால் கடத்தப்பட்டு, ஜெர்மனியில் இரண்டு ஆண்டுகள் மறைவிடத்தில்வைத்து பாதுகாக்கப்பட்டார்.


ஜேக்கப்ஸ் ஃனபேபர்.

(Jacobus Faber Stapulensis - AD 1455-1536)


இவர்  ஒரு பிரெஞ்சு இறையியலார் ரோமன் கத்தோலிக்க குரு புகழ் பெற்ற ஈராஸ்மஸின்  சமகாலத்தில் வாழ்ந்த ஒருவர். இவர் மனிதனின் போதனைகளும் தத்துவமும் கத்தோலிக்க திருச்சபையை சிதைத்துவிட்டன என்பதை உணர்ந்தார் (மாற்கு 7: 7, கொலே 2, 8). ஆகவே கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்த

முயன்றார்.ஒவ்வொரு கிறிஸ்தவனும் தனிப்பட்ட முறையில் வேதாகமத்தை படித்து கற்றுக்கொள்வதற்கான உரிமை; உண்மையில், கடமை என்றும் ஜேக்கபஸ் உறுதியாக நம்பினார். ஆனால் கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்தவர்கள் அவரவர் தாய்மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்ப்பதை கடுமையாய் எதிர்த்தது.

கத்தோலிக்க மதகுருமார்களின் தவறான போதகத்தை அம்பலப்படுத்தவும், வேதாகத்தை பிரெஞ்சு மொழியில் அனைவரும் படிக்கும்படி கடினமாக உழைத்து, 1523 ம் ஆண்டு பாரிஸில் பிரெஞ்சு மொழியின் புதிய ஏற்பாட்டையும் பின்னர் பிரெஞ்சு மொழியில் பழைய ஏற்பாட்டை 1528 ம் ஆண்டும் வெளியிட்டார்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபை விரைவில் ஜேக்கபஸ் அவர்களின் பிரெஞ்சு வேதாகத்தை பகிரங்கமாக எரிக்க உத்தரவிட்டது. மேலும் இவரது பல புத்தகங்கள் துர் உபதேசம் என்று கண்டனம் செய்யப்பட்டன. மேலும் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு, வேதாகமத்தை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த குற்றத்திற்காக 1546 ம் ஆண்டு மரண தண்டனை கொடுக்கப்பட்டது.



ஹென்றி VIII:-

(King Henry - AD 1534)


1509 -ல். இங்கிலாந்து மன்னர் இவர்.கத்தோலிக்க திருச்சபையின் தீவிர விசுவாசியாக இருந்து சீர்திருத்தவாதிகளுக்கு  எதிராக செயல்பட்டு, இங்கிலாந்தில் கத்தோலிக்க திருச்சபையை பாதுகாத்தவர். இவர் 1536 ம் ஆண்டு வில்லியம் டின்டேலின் ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகள் அனைத்தை தடை செய்தார்.

மன்னர் ஹென்றி VIII ன் நோக்கங்கள் வேறுமாதிரி இருந்தது. மன்னர் ஹென்றி VIII க்கும் அவரது மனைவி கேத்தரீன் ஆகியோருக்கு திருமணமாகி 23 ஆண்டுகளில் மேரி என்ற ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தது அநேக முறை கர்ப்பம் கலைந்து போய்விட்டது. ஆனால் மன்னர் ஒரு ஆண் வாரிசை விரும்பினார். ஆகவே கேத்ரீனை விவாகரத்து செய்து, தனது காதலியான Anne Boleyn ஐ திருமணம் செய்து கொள்ளும்படி போப்பாண்டவரிடம் கேட்கிறார். ஆனால் கேத்ரீனின் தகப்பனார் பிரெஞ்சு தேசத்தின் மன்னராக இருந்து. கத்தோலிக்க திருச்சபையின் தீவிர விசுவாசியாக இருந்ததால் இந்த விவாகரத்துக்கு போப் மறுத்துவிட்டார். ஆகவே, ஹென்றி VIII, இங்கிலாந்தை ரோமின் கத்தோலிக்க கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற்றி, தன்னை இங்கிலாந்து தேச திருச்சபையின் (Church of England) தலைவராக அறிவித்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் உயிரோடு எரித்துக்கொள்ளப்பட்ட வில்லியம் டின்டேல் அவர்களின் ஜெபத்திற்கு கர்த்தர் பதில் கொடுத்தார். 1539 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மன்னர் ஹென்றி VIII. வில்லியம் டின்டேலின் ஆங்கில வேதாகமபதிப்பை அங்கீகரித்தார். எல்லா திருச்சபைகளிலும் ஆங்கில வேதாகமத்தை வைக்க சொல்லி, திருச்சபை மக்கள் அனைவரும் அதை வாசிக்கும்படி கட்டளையிட்டார். ஆங்கில வேதாகமத்தை எல்லோரும் வாங்கும்படி, குறைந்த விலையில் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார்.


அரசி மேரி:-

(Queen Mary- Blood Mary-AD 1555)


இங்கிலாந்தில் மன்னர் ஹென்றிக்குப் பிறகு, மன்னர் எட்வர்ட் அரியணையை கைப்பற்றினார். இவருடைய மனைவிதான் அரசி மேரி.

அரசியார் மேரி கத்தோலிக்க திருச்சபைக்கு தீவிர விசுவாசியாக மாறி, இங்கிலாந்து தேசத்தை மீண்டும் கத்தோலிக்க திருச்சபை மதகுருமார்களின் தலைமைக்கு கொண்டுவர முயற்சி செய்தார். ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகளை முற்றிலும் தடைசெய்தார்.

1557 ஆம் ஆண்டில், Thomas Matthew என்பவரும் Miles Coverdale சேர்ந்து ஆங்கிலத்தில் வேதாகத்தை வெளியிட்டார்கள். இதற்காக அரசியார் மேரி உத்தரவின்படி எரித்துக் கொல்லப்பட்டார்.

1558 ஆம் ஆண்டில், இங்கிலாந்து தேசத்தில் தலைசிறந்த வேதபண்டிதர்கள் மற்றும் சீர்திருத்த திருச்சபையின் குருவானவர்களாகிய John Rogers மற்றும் Thomas Cranmer ஆகியோர் உட்பட 300 சீர்திருத்த திருச்சபையின் குருவானவர்கள் அப்போஸ்தலனாகிய பர்திமேயு திருநாள் ஆராதனையில், இங்கிலாந்து அரசியார் மேரி உத்தரவின்படி சீர்திருத்த திருச்சபையின் குருவானவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக வெட்டி கொல்லப்பட்டார்கள்.

மேரி ஆட்சி காலத்தின்போது, திருச்சபையின் சீர்திருத்தவாதிகளை துர் உபதேசகாரர்கள் என்று கூறி அவர்களை கொலை செய்வதற்கு உத்தரவு பிரப்பித்தார். 

இதனால் பலர், சீர்திருத்த திருச்சபையின் தேசமாக விளங்கிய ஜெனீவாவுக்கு தப்பி ஓடினார்கள். அத்தகையவர்களில், William Whittingham, என்பவர் 1560 இல் ஆங்கிலத்தில்

 "The Geneva Bible" என்ற பெயரில் வெளியிட்டார்.


ஸ்காட்லாந்தின் ஜேம்ஸ் VI:-

{King James 1 - AD 1605}


இங்கிலாந்தின் அரசி எலிசபெத் தனது 45 ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு 1603 மார்ச் 24 அன்று இறந்தார். ஆகவே, ஸ்காட்லாந்தின் ஜேம்ஸ் VI என்பவர் எலிசபெத்துக்குப் பின், இங்கிலாந்தின் மன்னராக (ஜேம்ஸ் I )வந்தார்.

1604 -ல், மன்னர் ஜேம்ஸ் 1 ஒரு மாநாட்டை ஹாம்ப்டன் கோர்ட் என்னும் இடத்தில் கூட்டினார். இதில் இங்கிலாந்து திருச்சபைகளில் 85 ஆண்டுகளாக பயன்படுத்திவந்த வில்லியம் டின்டேல் (1526) அவர்களின் ஆங்கில வேதாகமத்தில் உள்ள குறைகளை நீங்கி புதிய ஆங்கில பதிப்பு உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.

எனவே இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் I என்பவர் 54 வேத பண்டிதர்களை நியமித்து, வேதாகமத்தின் மூல மொழியாகிய எபிரேயம், அரமேயம் மற்றும் கிரேக்கு மொழிகளை சரியான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வேதாகமத்தை வெளியிட கட்டளையிட்டார்.

இப்படியாக ஒரு குழுவிற்கு ஆறு பேரை நியமித்து. ஆறு ஆண்டுகள் மிகவும் பிரயாசப்பட்டு கி.பி. 1611 ம் ஆண்டு வேதாகமத்தின் மூல மொழியான எபிரேய கிரேக்கு மொழியில் இருந்து. புதிய ஆங்கில வேதாகமம் வெளியிடப்பட்டது.

இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் மிகவும் பிரயாசப்பட்டு. முயற்சி செய்தமையால் அவருடைய பெயரிலே இந்த புதிய ஆங்கில வேதாகமம் King James Version (KJV) என்று அழைக்கப்படுகிறது

இந்த வேதாகமம் கடந்த 400 ஆண்டுகளாக உலகமெங்கும் ஆங்கிலத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாக கருதப்பட்டு, 

எல்லாரலும் வாசிக்கப்பட்ட வருகிறது.

Taken from Rev.David Notes




Post a Comment

0 Comments