Posts

Showing posts from January, 2026

மோளேகு (Molech) || அறிந்து கொள்வோம் - பகுதி - 148 ||

Image
அறிந்து கொள்வோம்  பகுதி - 148 மோளேகு (Molech) மோளேகு (Molech) வழிபாடு என்பது வேதாகமத்தில் மிகவும் கொடூரமான மற்றும் அருவருப்பான விக்கிரக ஆராதனையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  1.பெயர் விளக்கம் எபிரேய மொழியில் இது 'Melek' (மேலெக்) என்ற சொல்லிலிருந்து உருவானது. இதற்கு "ராஜா"என்று பொருள். விக்கிரகத்தின் பெயரிலுள்ள உயிரெழுத்துக்களை மாற்றி, 'போஷெத்' (Bosheth - வெட்கக்கேடு) என்ற சொல்லின் ஒலியைச் சேர்த்து, அதை ஒரு "வெட்கக்கேடான ராஜா" என்று அழைக்கும் விதமாக 'மோளேகு' என இஸ்ரவேலர் குறிப்பிட்டனர். இது மேலும் அம்மோனியர்களின் தேவனான இது மில்கோம் (Milcom) என்றும் அழைக்கப்படுகிறது. 2.ஆராதனை முறைகள் மோளேகு வழிபாடு அதன் கொடூரமான பலியிடும் முறைக்காக அறியப்பட்டது. 🎇 தீக்கடத்தல் : பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை (முக்கியமாக முதற்பேறான பிள்ளைகளை) எரியும் நெருப்பிற்குள் எறிந்து அல்லது பழுக்கக் காய்ச்சப்பட்ட சிலையின்காலில் வைத்துப் பலியிடுவார்கள். எருசலேமுக்கு அருகிலுள்ள இன்னோம் பள்ளத்தாக்கு (Valley of Hinnom) அல்லது தோப்பேத் என்னுமிடத்தில் இது நடைபெற்றது. குழந்தைகளின் ...

கல்தேயர்கள் (Chaldeans) || அறிந்து கொள்வோம் - பகுதி -147 ||

Image
அறிந்து கொள்வோம்  பகுதி -147 கல்தேயர்கள் (Chaldeans)   1.கல்தேயர்கள் யார்? வரலாற்று ரீதியாக, கல்தேயர்கள் மெசொப்பொத்தேமியாவின் தெற்குப் பகுதியில் (இன்றைய ஈராக்) வாழ்ந்த ஒரு பழங்குடி மக்கள். கல்தேயர்கள் பாபிலோனியப் பேரரசின் ஒரு முக்கிய அங்கமாக மாறினர். வேதாகமத்தில் "பாபிலோனியர்கள்" மற்றும் "கல்தேயர்கள்" என்ற பெயர்கள் பெரும்பாலும் ஒரே மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. கி.மு. 7- 6 ஆம் நூற்றாண்டுகளில் நேபுகாத்நேச்சரின் தலைமையில் அவர்கள் உலகப் பேரரசாக உருவெடுத்தனர். அவர்களே எருசலேமை அழித்து, யூதர்களைச் சிறைப்பிடித்துச் சென்றனர். 2.கல்தேயர்களின் குணநலன்கள் கல்தேயர்களின் குணநலன்கள் வேதாகமத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் ஞானத்தின் கலவையாகச் சித்தரிக்கப்படுகின்றன: 👉 யுத்த வெறி: அவர்கள் மிகவும் கொடூரமான போர் வீரர்கள், வேகமான குதிரைகளையும் பயங்கரமான ஆயுதங்களையும் கொண்டவர்கள் (ஆப 1:6-8). 👉 வித்தை மற்றும் ஜோதிடம்: அவர்கள் நட்சத்திரங்களை ஆராய்வதிலும், மந்திரவாதம், சோதிடம் மற்றும் மாயவித்தைகளிலும் சிறந்தவர்களாகக் கருதப்பட்டனர் (தானியேல் 2:2). 👉 அகந்தை : தங்களது சொந்த பலமே தங்...