Posts

Showing posts from November, 2023

ஊர் பட்டணம் || அறிந்து கொள்வோம் || பகுதி -136 ||

Image
  அறிந்து கொள்வோம் பகுதி -136 ஊர் பட்டணம் (அகழ்வாராய்ச்சி ) வேதத்தில் காணப்படும் ஊர் என்ற பட்டணத்தை யாரும் நமக்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை. காரணம், இஸ்ரவேலரின் வரலாறு இங்கிருந்து தான் துவங்குகிறது. இஸ்ரவேலின் முற்பிதாவாகிய ஆபிரகாம், கானான் வருவதற்கு முன் வாழ்ந்தது இங்குதான். இதுபற்றி நடைபெற்ற அகழ்வாராய்ச்சிக் குறிப்புகள் சிலவற்றைப் பார்ப்போம். ஊர் என்பது ஆரானிலிருந்த ஒரு பட்டணம்.பட்டணம் என்றவுடன் நட்சத்திர ஹோட்டல், ரயில்வே ஜங்ஷன் வரிசையாய் நிற்கும் டாக்ஸிகள், மீட்டரை உயர்த்திக் கொண்டு ஓடும் ஆட்டோக்கள், கழுகாய் சுற்றும் பிக்பாக்கெட்காரர்கள் என்று நகரத்தனமாய்க் கற்பனை பண்ணிக்கொள்ளக் கூடாது. அந்தக்கால பட்டணம் என்பது கொஞ்சம் அதிகப்படி மக்கள் குடியிருந்த பகுதி என்றுதான் பொருள். ஊர் என்ற இடம் பற்றி பிற்காலத்தில் சிலர் சந்தேகப்பட வேதம் குறிப்பிட்டுள்ள இட அமைப்பை வைத்துக் கொண்டு இந்த ஊரைக் கண்டுபிடிக்க சிலர் போனால்.. அங்கே ஒன்றையும் காணோம். சற்றே அப்பகுதியில் மண்ணைக் கொத்தி ஆபிரகாம் விட்டுப் போன ஏதாவது காசு கிடைக்கிறதா என்று இவர்கள் தேட, காசு மட்டுமல்ல ஊரே கிடைத்தது மண்ணுக்குள்ளிருந்து....