Posts

Showing posts from May, 2021

மெகிதோ அறிந்து கொள்வோம் பகுதி -44

Image
  அறிந்து கொள்வோம் பகுதி -44 மெகிதோ சாரோன் சமபூமிக்கும் யெஸ்ரயேல் சம பூமிக்கும் இடையிலுள்ள இந்தக் கோட்டை உள்ளது ,கர்மேல்மலைக்குத் தென்கிழக்கே 20 மைல் தூரத்தில் இருந்தது. பூர்வ காலத்தில் கானான்தேசத்தில் வாழ்ந்து வந்த கானானியர்கள் இந்த  விசேஷமான கோட்டையை கட்டினார்கள். மனாசே கோத்திரத்திற்கு இந்த பகுதி விடப்பட்டு இருந்தது.பின்பு சிலகாலம் கானானியர் இந்த பகுதியில் வாழ்ந்தார்கள். பாராக் இந்த கோட்டை அருகில் தான் சிசெராவை ஜெயித்தான்.  யோசு.12:21, 17:12, நியா.1:27, 5:19. சாலொமோன் இதன் அலங்கத்தை பழுது பார்த்து சீர்படுத்தினார்.  1 இரா.9:15 . அகசியா மற்றும் யோசியா ராஜாக்கள் இங்கு தான் மரித்தார்கள்.  2 இரா.9:27, 23:29. ‘அர்மெகெதோன்' என்பதற்கு " மெகிதோவின் மலை' என்று அர்த்தம் தருகிறார்கள். மெகிதோவில்  பல யுத்தங்கள் நடந்ததினால், ஆவிக்குரிய விதமான யுத்தம் இவ்விடத்தில் நடப்பதாக வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வெளி.16:16.

மீதியான் / மீதியானியர் அறிந்து கொள்வோம் பகுதி -43

Image
அறிந்து கொள்வோம் பகுதி -43 மீதியான் / மீதியானியர்  " மீதியான் " என்ற எபிரெய பெயருக்கு " சண்டை "என்று பொருள். பழைய ஏற்பாட்டில் " மீதியான் " என்ற பெயரில் ஒரு நபரும் ஓர் இடமும் உள்ளது. 1. ஆபிரகாம், கேத்தூராள் ஆகியோரின் குமாரன்.  (ஆதி 25:1-6).  மீதியானுக்கு நான்கு குமாரர்கள் இருந்தார்கள் (1நாளா 1:33). வேதாகமத்தில் மீதியான் பற்றி வேறு எந்த விவரமும் இல்லை. ஆபிரகாமின் இரண்டாம் குடும்பத்தில் மீதியான் முக்கியமானவன். மீதியான் மற்றும்அவருடைய குடும்பத்தாரை பற்றி வேதாகமத்தில் 67 இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஏசா மீதியானை வென்றான். (ஆதி 36:35),  மோசே மீதியானுடைய தேசத்திற்குத் தப்பி ஓடிப்போய், அங்கு மீதியானிய ஸ்திரீ ஒருத்தியை திருமணம் செய்து கொண்டான்.(யாத் 2.15-16; யாத் 31; யாத் 4:19; யாத் 18:1) மீதியானியர் இஸ்ரவேலுக்கு ஒரு கண்ணியாக இருந்தார்கள். (எண் 2:51-15)  அவர்களுடன் யுத்தம் பண்ணும் படி தேவன்இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்டார். (எண் 25.16-18; எண் 31: 1-20),  பல நூற்றாண்டுகளாக, இஸ்ரவேலர்கள் மீதியானியரோடு அடிக்கடி யுத்தம் பண்ணினார்கள். (யோசு 13:21;நியா 6:1-2; நியா 7.8-25; நியா...

வாசல் ஒரு ஆய்வு

Image
  வாசல் ஒரு ஆய்வு ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: " நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" யோவ 10:7 வேதாகமத்தில் பலவிதமான வாசல்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது குறிப்பாக இடுக்கமான வாசல், விசாலமான வாசல், மோட்ச வாசல், நரக வாசல், பாதாள வாசல்,மரண வாசல், ஜீவ வாசல், என்று பல உண்டு. இங்கு இயேசு தன்னை வாசல் என்று அடையாளப்படுத்துகிறார். ஆக வாசலை குறித்து சற்று ஆராய்ந்து பார்ப்போம். வாசலைக் குறிக்க "shaar" என்ற எபிரெயச் சொல் வேதாகமத்தில் 300 முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சங். 107:15-ன் படி வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாசல்கள் இரும்பிலும், மரத்திலும், வெண்கலத்திலும் செய்யப்பட்டிருந்தன. ஆதி. 22:17- ல் ஆபிரகாமுக்கு இந்த வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது.  " உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்" சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவது என்பது அவர்களை வெற்றிகொள்வதற்கான அடையாளம். மாணிக்கக் கற்களால் செய்யப்பட்ட வாசல்களை குறித்து ஏசா 54:12 " உன் வாசல்களை மாணிக்கக் கற்களு...

நம் இருதயத்தில் இருக்க கூடாதது , அறிந்து கொள்வோம் பகுதி-42

Image
  அறிந்து கொள்வோம் பகுதி-42 நம் இருதயத்தில் இருக்க கூடாதது   1) கசப்பு - யாக் 3:14  2) வைராக்கியம் - யாக் 3:14  3) விரோதம் - யாக் 3:14  4) பெருந்திண்டி - லூக் 21:34  5) வெறி - லூக் 21:34  6) உலக கவலை - லூக் 21:34  7) இச்சை - நீதி 6:25  8) அக்கிரம சிந்தை - சங் 66:18  9) பயம் - யோ 14:27  10) கர்வம் - 2 நாளா 25:19  11) அகந்தை - லூக் 1:51  12) கபடு - கொ 3:22  13) பிறரை அவமதித்தல் - 2 சாமு 6:16  14) சோர்வு - சங் 40:13  15) பொருள் ஆசை - சங் 119:36  16) மேட்டிமை - ஏரே 48:29  17) அவிசுவாசம் - எபி 3:13  18) பொல்லாத சிந்தனை - சங் 140:2  19) துணிகரம் - பிரச 8:11  20) தேவனை தூஷித்தல் - யோபு 1:5  21) இருள் - ரோமர் 1:21  22) பிசாசின் தூண்டுதல் யோ 13:2  23) சகோதரனை பகைக்க கூடாது-  லேவி 19:17  24) சஞ்சலம் - பிரச 11:10  25) சந்தேகம் - லூக் 24:38  26) அக்கிரமம் - சங் 41:6  27) மந்தம் - லூக் 24:25

தவிடு அறிந்து கொள்வோம் பகுதி -41

Image
அறிந்து கொள்வோம் பகுதி -41 தவிடு  Husk Ceratonia Siliqua இலத்தீன் பாஷையில் Ceratonia Siliqua என்று பெயர் கொண்ட 10 அங்குல நீளமான காய்கள் உடைய ஒரு ஜாதி மரம் பலஸ்தீனா தேசத்தில் உண்டு. இந்த மரம் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரைக்கும் காய் காய்க்கும். இந்தக் காய்களில் சாப்பிடகிறதற்கேற்ற சதையும் அந்தச் சதைக்குள் அநேக நல்ல விதைகளும் இருக்கும், நமது தேசத்தில் வேலிக்கருவேல  நெற்றுக்களை ஆடுகளுக்கு இரையாக உபயோகிப்பது போல, பலஸ்தீனா தேசத்தில் இந்த மரத்தின் பழங்களையும் மிருகங்களுக்கு இரையாக பயன்படுத்துவார்கள். பஞ்ச காலங்களில் ஏழைகள் இவைகளைத் தின்பார்கள்.  இந்த மரத்தின் பழங்களை தான்  லூக்கா சுவிசேஷத்தில் தவிடு என்று சொல்லியிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.(லூக்.15:16) ஆகையால் கெட்ட குமாரன் நமக்குத் தெரிந்த தவிட்டை அல்ல இந்த மரத்தின் பழங்களை தான் சாப்பிட்டிருக்க வேண்டும், அது மட்டும் அல்ல மத்.3:4 - ல்   யோவான் ஸ்நானகன் சாப்பிட்டது  வெட்டுக் கிளிகளை' அல்ல இந்தப் பழங்களை தான் என்று அநேகர் சொல்கிறார்கள். 

யாப்பேக்கு அறிந்து கொள்வோம் பகுதி -40

Image
அறிந்து கொள்வோம் பகுதி -40 யாப்பேக்கு " யாப்பேக்கு " என்றால் " ஊற்றப்படுதல் " அல்லது " மல்யுத்தம் செய்தல் ” என்று அர்த்தமாகும். யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியில்  சேரும் ஒரு சிறிய ஆறு தான் இது. இது கலிலேயாக் கடலுக்குத் தெற்கே 45 மைல் தொலைவில் இருக்கிறது. கீலேயாத் மலைகளின் கிழக்குப் பகுதியில் உற்பத்தியாகும் இந்தச் சிற்றாறு ஒரு அகலமான  ஆழமானதுமான மலையிடுக்கின் வழியாகப் பாய்ந்து, 70 கி. மீ. தூரம் ஓடி யோர்தான் நதியில் கலக்கிறது. இது இயற்கை அழகு நிறைந்த பகுதியில் பாய்கிறது. சில இடங்களில் தரைக்கு அடியில் கூட செல்கிறது.  அரளி மலர்ச் செடிகள் அதன் கரையில் அதிகமாக காணப்படுகின்றன. இப்போது இது நீல நிற ஆறு என்று அர்த்தப்படும் ஜெர்க்கா ஆறு என்று அழைக்கப்படுகிறது. அதன் கரைகளில் பல புராதன பட்டணங்களின் இடிபாடுகள் காணப்படுகின்றன.இந்தப் பகுதி மக்கள் அதிகமாக வசித்த பகுதியாக இருந்திருக்க வேண்டும்  குளிர்காலத்தில் இந்த ஆற்றில் வெள்ளம் வரும்போது மட்டுமே இதைக் கடப்பது சிரமமாக இருக்கும் இப்போது இந்த ஆறு ஜோர்டான் நாட்டின்  எல்லை இருக்கிறது. இந்த ஆறு அம்மோன் புத்திரரின் வடக்கு எல்லையா...