யாப்பேக்கு அறிந்து கொள்வோம் பகுதி -40

அறிந்து கொள்வோம்

பகுதி -40


யாப்பேக்கு


"யாப்பேக்கு" என்றால் "ஊற்றப்படுதல்" அல்லது "மல்யுத்தம் செய்தல்” என்று அர்த்தமாகும்.


யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியில்  சேரும் ஒரு சிறிய ஆறு தான் இது.

இது கலிலேயாக் கடலுக்குத் தெற்கே 45 மைல் தொலைவில் இருக்கிறது.


கீலேயாத் மலைகளின் கிழக்குப் பகுதியில் உற்பத்தியாகும் இந்தச் சிற்றாறு ஒரு அகலமான  ஆழமானதுமான மலையிடுக்கின் வழியாகப் பாய்ந்து, 70 கி. மீ. தூரம் ஓடி யோர்தான் நதியில் கலக்கிறது.


இது இயற்கை அழகு நிறைந்த பகுதியில் பாய்கிறது. சில இடங்களில் தரைக்கு அடியில் கூட செல்கிறது. 

அரளி மலர்ச் செடிகள் அதன் கரையில் அதிகமாக காணப்படுகின்றன.


இப்போது இது நீல நிற ஆறு என்று அர்த்தப்படும் ஜெர்க்கா ஆறு என்று அழைக்கப்படுகிறது. அதன் கரைகளில் பல புராதன பட்டணங்களின் இடிபாடுகள் காணப்படுகின்றன.இந்தப் பகுதி மக்கள் அதிகமாக வசித்த பகுதியாக இருந்திருக்க வேண்டும் 


குளிர்காலத்தில் இந்த ஆற்றில் வெள்ளம் வரும்போது மட்டுமே இதைக் கடப்பது சிரமமாக இருக்கும்

இப்போது இந்த ஆறு ஜோர்டான் நாட்டின்  எல்லை இருக்கிறது.


இந்த ஆறு அம்மோன் புத்திரரின் வடக்கு எல்லையாக இருந்தது (யோசு 12:1-5).


கானான் தேசம் பங்கிடப்பட்ட போது, 

இது ரூபன் கோத்திரத்தாருக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் எல்லையாக இருந்தது


யாக்கோபின் வாழ்வில் இந்த ஆறு


யாக்கோபு தன் மாமனாகிய லாபானை விட்டுப் பிரிந்து கானான் தேசத்திற்கு திரும்பி வரும் வழியில் தன்மீது முன்பு கோபம் கொண்டிருந்த அண்ணன் ஏசா எதிர்கொண்டு வருவதை குறித்து கேள்விப்பட்டான்.

யாக்கோபு ஏசாவை சந்தித்து அவனுக்கு அநேக வெகுமதிகளை கொடுக்கும்படி தனது வேலையாட்களை அனுப்பினான்.

பிறகு தனது பதினொரு குமாரர்களையும், மனைவிமார்களையும், பரிவாரங்களையும் இந்த யாப்பேக்கு நதியைக் கடந்து அக்கரைக்குச் செல்லும் படி செய்தான் (ஆதி. 32:22, 23).


யாக்கோபு பிந்தித் தனித்திருந்த போது, அவனுக்கும் தேவனுடைய புருஷனுக்கும் இடையில்

போராட்டம் உண்டாகியது

யாக்கோபு போராடி மேற்கொண்ட படியால், தேவன் அவனுடைய பெயரை யாக்கோபு என்பதிலிருந்து

இஸ்ரவேல் என்று மாற்றினார்.

எனவே யாக்கோபு இஸ்ரவேலாக மாறிய இடம் இந்த யாப்பேக்கு….



Post a Comment

0 Comments