Posts

Showing posts from October, 2023

வாற்கோதுமை || அறிந்து கொள்வோம் || பகுதி -135 ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி -135 வாற்கோதுமை வாற்கோதுமை புல் வகையை சார்ந்த ஒரு தாவரம் இது மனிதனின் உணவாகவும், கால்நடை தீவனமாகவும் பயன்படுகிறது. உலகத்திலேயே அதிகமாக பயிரிடப்படும் தாவரங்களில் ஐந்தாவது இடத்தில் இது உள்ளது. இந்த வாற்கோதுமை தானியத்தில் இருந்து தான் பார்லி (Barly) என்ற  அரிசியை எடுக்கிறார்கள்.கோதுமையை விட வாற்கோதுமை அதிக சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. கானான் தேசத்தில் கோதுமை மற்றும் வாற்கோதுமை என்று இரண்டு வகை கோதுமைகள் உண்டு.வேதாகமத்தில் கோதுமை என்ற வார்த்தை 40 இடத்திலும், வாற்கோதுமை என்ற வார்த்தை 34 இடத்திலும் வருகிறது. இதற்கு வாற்கோதுமை என்ற பெயர் வர காரணம் இதனுடைய கதிரில் குறைவான தானியமும் நீளமான வால் இருப்ப தால் இது வாற்கோதுமை என்றும் அழைக்கப்படுகிறது.கோதுமையில் கதிரில் தானியம் அதிகமாக இருக்கும் வால் குட்டையாக இருக்கும். உபாகமம் 8:8 -அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசம்; இது எபிரேயர்களின் மிக முக்கியமான ஒரு உணவு  ஆகும்.பொதுவாக பட்டணங்களில் கோதுமையையும், கிராமங்களில் வாற்கோதுமை மக்கள் உணவுக்காக பயன்படுத்தினார்க...

வேதாகமத்தில் பழமொழிகள் || அறிந்து கொள்வோம் || பகுதி -134 ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி -134 வேதாகமத்தில் பழமொழிகள்! 𝟙.சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது *பழமொழியாயிற்று* 𝟙 சாமு 𝟙𝟘:𝟙𝟚 𝟚.*தாயைப் போல மகள்* என்று உன்னைக்குறித்துப் *பழமொழி* சொல்லுவார்கள். எசே 𝟙𝟞:𝟜𝟜 𝟛.*பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின* என்னும் *பழமொழியை* நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச்சொல்லுகிறது என்ன? எசே 𝟙𝟠:𝟚 𝟜.மனுபுத்திரனே, *நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும்* என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் *பழமொழி* என்ன? எசே 𝟙𝟚:𝟚𝟚 𝟝.*வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச்* சொல்லி... லூக் 𝟜:𝟚𝟛 𝟞.*நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது* என்று சொல்லப்பட்ட மெய்யான *பழமொழியின்படியே* அவர்களுக்குச் சம்பவித்தது. 𝟚 பேதுரு 𝟚:𝟚𝟚 𝟟.மூடன் வாயில் அகப்பட்ட *பழமொழி* வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.  நீதி 𝟚𝟞:𝟡 நன்றி: மறைபொருள் Teams

வேதாகம மலைகளும் அதன் தொடர்புடைய சில நிகழ்ச்சிகளும் ||அறிந்து கொள்வோம் பகுதி- 133 ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி- 133 வேதாகம மலைகளும் அதன் தொடர்புடைய சில நிகழ்ச்சிகளும் 1.அரராத்மலை-ஆதி 8 : 4  பேழை தங்கிய இடம். 2.மோரியா மலை -ஆதி 22 : 2 ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடக்கொண்டு சென்ற இடம்.  3.ஒரேப்-  யாத் 3 : 1, 2 அதிசயமாக முட்செடி எரிந்த இடம். 4.சீனாய் மலை - யாத் 19 : 11, 20 நியாயப்பிரமாணம் கொடுத்த இடம்.   5.ஏபால்/கெரிசீம் மலை  உபா 11 : 29; 27 : 11 - 13 ஆசீர்வாதமும் சாபமும்  அறிக்கையிட்ட இடம்.  6.கர்மேல் மலை - 1இரா 18 : 19 -39 எலியா பலியிட்ட இடம்.  7.எர்மோன் மலை - (?)மாற் 9: 2  கிறிஸ்து மறுரூபமான இடம்  8.ஒலிவ மலை - அப் 1 : 12 கிறிஸ்து பரமேறிய இடம். 

தீமோத்தேயு || அறிந்து கொள்வோம் || பகுதி -132 ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி -132 தீமோத்தேயு தீமோத்தேயு என்ற கிரேக்க பெயருக்கு " Timotheos " என்றும் "தேவனுக்கு முக்கியமானவர்"- "Precious One of God"அல்லது தேவனால் கனம் பண்ணப்பட்டவர் என்றும் அர்த்தப்படும். 🌿தீமோத்தேயுவின் தாய் - யூதர் (ஐனிக்கேயாள்) 🌿தீமோத்தேயுவின் தந்தை - ஒரு கிரேக்கர் (பெயர் குறிப்பிடப்படவில்லை).  🌿தீமோத்தேயுவின் பாட்டி - லோவிசாள்.  🌿 பவுல் லீஸ்தீராவுக்கு போனபோது அங்கு தீமோத்தேயுவை சந்தித்தார். பவுலின் ஊழியத்தின் மூலமாக இவர் இரட்சிக்கப்பட்டார். பவுலோடு பல இடங்களுக்கு பிரயாணம் பண்ணி ஊழியம் செய்தார்.ரோமாபுரியில் பவுல் சிறைச்சாலையில் இருந்த போது அவரும் அவரோடு கூட இருந்தார். வேதாகமத்தில் புதியஏற்பாட்டில் சிறந்த முன்மாதிரியான ஒரு ஊழியக்காரனாக இருப்பவர் தீமோத்தேயு. இவர் வாலிபப் பிராயத்திலிருந்து ஊழியம் செய்பவராயிருந்தார்.(1தீமோ-4:12)  இவர் பவுலின் ஊழியத்தில் உருவக்கப்பட்டவர்.ஒவ்வொரு ஊழியர்களும் தமக்குப் பின்னர் ஊழியத்தை தொடர்ந்து நடத்துவதற்கு ஆவிக்குரிய தீமோத்தேயுக்களை உருவாக்க வேண்டும்.  "நான்" தீமோத்தேயுவைப் போல உருவாக வேண்டும்' ...

வேதாகமத்தின் ஆண் / பெண் தீர்க்கதரிகள் ||ஆய்வு கட்டுரைகள் ||

Image
ஆய்வு கட்டுரைகள்  வேதாகமத்தின்  ஆண் / பெண் தீர்க்கதரிகள் வேதாகமத்தில் தீர்க்கதரிசிகள் என குறிப்பாக பலர் குறிக்கப்பட்டுள்ளனர். சிலர் குறிக்கப்படவில்லை,ஆனால் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்கள். புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள், சுவிசேஷகர்கள், கர்த்தரின் உள்ளத்தை நமக்கு சொல்லியிருக்கிறார்கள். கர்த்தர் உரைத்ததை நமக்கு சொல்லியிருக்கிறார்கள். பெண் தீர்க்கதரிசிகள் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் உள்ளனர்.எல்லா தீக்கதரிசிகளும் நிறைவாய் இதில் அடங்கி உள்ளார்களா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. பழைய ஏற்பாட்டில் 1239 தீர்க்கதரிசனங்களும், புதிய ஏற்பாட்டில் 578 தீர்க்கதரிசனங்களும், மொத்தமாக 1817 உள்ளன. இது சம்பந்தமான வசனங்கள் 8352 ஆகும். இவையெல்லாம் வேத அறிஞர்களால் ஆராய்ந்து சொல்லப்பட்டவை.மொத்த தீர்க்கதரிசிகள் 80க்கும் மேற்பட்டவர்கள். இதில் பெரும்பான்மை தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன.  தீர்க்கதரிசனம் பற்றி அறிய வேண்டியது……. 2 பேதுரு 1:21 “தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை.தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்...

மக்பேலா குகை || அறிந்து கொள்வோம் || பகுதி -131 ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி -131 மக்பேலா குகை -Makpelah  மக்பேலா என்னும் எபிரெய பெயருக்கு Makpelah - “இரட்டை (குகை) " "double" or "portion" என்று பொருள். இது ஒரு நிலமும் குகையும் ஆகும். ஆபிரகாம் தன் மனைவி சாராளை அடக்கம் பண்ணுவதற்காக இந்த இடத்தை (ஏத்தின் புத்திரர் கையில் 400 சேக்கல் வெள்ளி) விலைக்கு வாங்கினார்.இந்த இடம் மம்ரே எதிராய் எப்ரோனுக்கு கிழக்கில் அமைந்துள்ளது (ஆதி 23.19).ஆரம்பகாலத்தில் ஆபிரகாம் மம்ரேக்கு அருகில் தன் கூடாரத்தை போட்டார் (ஆதி 13.18),  சாராளுக்கு குழந்தை பிறக்கும் என்னும் வாக்குத்தத்தத்தை இந்த இடத்தில் ஆபிரகாம் பெற்றுக்கொண்டார். (ஆதி 18:1-15). ஆபிரகாம் மக்பேலாவை ஏத்தியனாகிய எப்ரோனிடமிருந்து கிரயத்திற்கு வாங்கினார். ஆபிரகாம், சாராள், ஈசாக்கு, ரெபெக்காள், யாக்கோபு, லேயாள் ஆகியோர் இங்கு அடக்கம் பண்ணப்பட்டார்கள் (ஆதி 49:31; 50.13). இன்றும் இந்த குகை எபிரேனில் சுமார் 39அடி உயரமும் 23 அடி நீளமும் கொண்ட அழகான கட்டிடமாக எருசலேமுக்கு தெற்கில் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இது ஏரோது மன்னரால் கட்டப்பட்டது. _______________________ Thanks to Bro A.S...