அறிந்து கொள்வோம்
பகுதி -135
வாற்கோதுமை
வாற்கோதுமை புல் வகையை சார்ந்த ஒரு தாவரம் இது மனிதனின் உணவாகவும், கால்நடை தீவனமாகவும் பயன்படுகிறது.
உலகத்திலேயே அதிகமாக பயிரிடப்படும் தாவரங்களில் ஐந்தாவது இடத்தில் இது உள்ளது. இந்த வாற்கோதுமை தானியத்தில் இருந்து தான் பார்லி (Barly) என்ற அரிசியை எடுக்கிறார்கள்.கோதுமையை விட வாற்கோதுமை அதிக சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
கானான் தேசத்தில் கோதுமை மற்றும் வாற்கோதுமை என்று இரண்டு வகை கோதுமைகள் உண்டு.வேதாகமத்தில் கோதுமை என்ற வார்த்தை 40 இடத்திலும், வாற்கோதுமை என்ற வார்த்தை 34 இடத்திலும் வருகிறது.
இதற்கு வாற்கோதுமை என்ற பெயர் வர காரணம் இதனுடைய கதிரில் குறைவான தானியமும் நீளமான வால் இருப்ப
தால் இது வாற்கோதுமை என்றும் அழைக்கப்படுகிறது.கோதுமையில் கதிரில் தானியம் அதிகமாக இருக்கும் வால் குட்டையாக இருக்கும்.
உபாகமம் 8:8 -அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசம்;
இது எபிரேயர்களின் மிக முக்கியமான ஒரு உணவு ஆகும்.பொதுவாக பட்டணங்களில் கோதுமையையும், கிராமங்களில் வாற்கோதுமை மக்கள் உணவுக்காக பயன்படுத்தினார்கள் குறிப்பாக மேய்ப்பர்கள் இந்த வாற்கோதுமையை அதிகமாக உபயோகப்படுத்தினார்கள்.
1 இராஜ 4:28 -ஆரம்பக் காலங்களில் இந்த வாற்கோதுமை ஒட்டகத்திற்கும் குதிரைகளுக்கும் உணவாக பயன்படுத்தப்பட்டது, பின் நாட்களில் மனிதர்களும் அதை உணவாக உட்கொள்ள ஆரம்பித்தார்கள்.
2 இராஜாக்கள் 7:16
ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது.
இதன் விலை மிகவும் மலிவாக இருந்தது.துக்கம் மற்றும் உபவாச நாட்களில் வாற்கோதுமை மூலம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவார்கள். உடம்பின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஒரு உணவு இந்த வாற்கோதுமை, இது ஐந்து மாதங்களில் பயிர் ஆகும் தானியம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இதன் அறுவடை இருக்கும் குறிப்பாக பஸ்கா பண்டிகையின் போது இருக்கும். பொதுவாக யூதர்களுக்கு மூன்று அறுவடை காலம் உண்டு ஒன்று வாற்கோதுமை, இரண்டாவது கோதுமை அறுவடை மூன்றாவது திராட்சை பழ அறுவடை.
இந்த வாற்கோதுமை மற்றும் கோதுமை அறுவடை காலங்களில் தான் ரூத் பெத்லேகமுக்கு வந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது ( ரூத் 1:22)
இயேசு கிறிஸ்து 5 அப்பம் 2 மீன்களைக் கொண்டு 5000 பேரை போசித்தது இந்த வாற்கோதுமையால் செய்யப்பட்ட அப்பம்.(யோவான் 6:9)
பழைய ஏற்பாட்டிலும் எலிசா 20 வாற்கோதுமை
அப்பங்களை வைத்து தான் 100 பேருக்கு உணவு அளித்தார்.( 2 இராஜாக்கள் 4:42-44)
இது ஏழைகளின் உணவு என்று அழைக்கப்படுகிறது.
0 Comments