Posts

Showing posts from August, 2023

நாத்தான்வேல் (என்ற) பர்த்தொலொமேயு |அறிந்து கொள்வோம் || பகுதி - 113 ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி - 113 நாத்தான்வேல் (என்ற) பர்த்தொலொமேயு (St.Bartholomew)  புனிதர் பர்த்தொலொமேயு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.யோவான் எழுதிய நற்செய்தியின் முதலாம் அதிகாரத்திலும்,21ம் அதிகாரத்திலும் நத்தனியேல் (Nathanael) என்று அடையாளம் காணப்படும் இவர், பிலிப்புவால் கிறிஸ்து இயேசுவுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்  இவர், இயேசுவின் பன்னிரு சீடர்களில் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர் ஆவார். இவரின் பெயர் " டாலமியின் மகன்" (Ptolemy) எனவும், " உழுசால் மகன் " என்று பொருள்படுகிறது. இது குடும்பப் பெயராய் அறியப்படுகிறது. யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் இவர் நத்தனியேல் என அழைக்கப்படுகிறார். அந்நற்செய்தியில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, 'இவர் " உண்மையான இஸ்ரவேலன்" "கபடற்றவர்" என்று இவரைக் குறித்துக் சாட்சி கொடுத்தார். மேலும் மத்தேயு,மாற்கு, லூக்கா நற்செய்திகளில் சீடர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அப்போஸ்தலர் புத்தகத்தில் இயேசுவின் பரம் ஏறுதலை கண்டவர் இவர். பெந்தேகோஸ்தே நாட்களுக்குப் பிறகு ஆர்மீனியா, இந்தியா  போன்ற இடங்களில் சமய பணி...

லீபனோனின் கேதுரு மரம் ||அறிந்து கொள்வோம் || பகுதி -112 ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி -112 லீபனோனின் கேதுரு மரம் : " லீபனோன் " என்றால் " வெண்மலை " எனபது பொருள். பாலஸ்தீனத்தின் வடமேற்கிலுள்ள ஒரு மலை நாடாகும். எர்மோன் எனும் மலை இங்குதான் உள்ளது. இதன் சிகரங்கள் பனியால் மூடப்பட்டிருப்பதினால் 'வெள்ளை மலை' என்ற பெயர் ஏற்பட்டது. ஆதி காலத்தில் இம்மலை சரிவுகளில் கேதுரு மரங்கள் நிறைய இருந்தன. இங்கிருந்துதான் சாலமோன் தேவாலயத்திற்கு தேவையான கேதுரு மரங்களைக் கொண்டுவந்தான்.நன்கு வளர்ச்சி பெற்ற ஒருகேதுருமரத்தின் அடியில் ஐயாயிரம் பேர் தங்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆகவே தான் நீதிமானின் செழிப்பை லீபனோனின் கேதுருக்கு இணையாக வேதம் சொல்கிறது,“நீதிமான் செழித்து லீபனோனில் உள்ள கேதுருவைப்போல் வளருவான்” (சங் 92:12). கேதுரு மரங்களின் வேர் வெகுதூரம் படர்ந்து வளரும். இவைகள் பாறைகளை இறுகப்பற்றிப் பிடித்துக்கொள்வதால் கடும் புயல் வந்தாலும் இம்மரங்கள் அசைக்கப்படுவதில்லை. கற்பாறையாம் இயேசுவைப்பற்றிக் கொள்வோமானால் எந்தச் சோதனைகளும் நம்மை அசைக்கமுடியாது.இம்மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று உராய்ந்து பிசின் போன்ற கசிவு ஏற்படுகிறது.கேதுருவின் பிசின் நறுமணம் ம...

விரோதி || அறிந்து கொள்வோம் || பகுதி 111 ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி 111 விரோதி (எதிரி) "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்" என்ற அன்பின் கட்டளையை ஆண்டவராகிய இயேசு நமக்குக் கொடுத்திருக்கிறார் (மத்.5:44). இதன்படியே அவர் செய்தும் காட்டியிருக்கிறார். தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக அவர் "பிதாவே இவர்களுக்கு மன்னியும்" என்று ஜெபித்தார் (லூக்கா 23:34). சத்துருக்கள் குறிக்க " echthros " என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ' உன் சத்துருவின் மாடவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடம் கொண்டுபோய் விடுவாயாக" என்ற கட்டளை இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது (யாத்.23:4) . ஸ்தேவான் தன்னைக் கல்லால் எறிந்து கொல்லுபவர்களுக்காக ஜெபித்தான் (அப். 7:60). விரோதிகளைக் குறித்த கட்டளைகள் மேலே குறிப்பிடப்பட்ட கட்டளைகளைத் தவிர வேறு பல கட்டளைகளும் விரோதிகளைக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. "உன் ச...

வண்ணான் || அறிந்து கொள்வோம் || பகுதி - 110 ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி - 110 வண்ணான் இவர்கள் அழுக்கான ஆடைகளைத் துவைத்துச் சுத்தமாக்கும் பணியைச் செய்துவந்தார்கள். வேதாமக நாட்களில் துணியை ஒரு கட்டையினால் அடித்துத் துவைப்பதுண்டு. இப்படிப்பட்ட ஒரு உருளைக் கட்டையைக் கொண்டுதான் இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபு கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. சவுக்காரம் துணிகளிலுள்ள அழுக்கைப் போக்குவதற்கு வண்ணாருடைய சவுக்காரம் பயன்படுத்தப்பட்டது. (மல். 3:2). இது எபிரெய மொழியில் " borith" என்று அழைக்கப்படுகிறது. வனாந்தரத்தில் காணப்பட்ட சில தாவரங்களை எரித்த சாம்பல்கூடத் துணிகளைத் துவைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.  வண்ணார் துறை இது எருசலேமுக்கு வெளியேயிருந்த ஒரு இடமாகும். அசீரிய ராஜாவினால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் இந்த இடத்தினருகே நின்று, யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு எதிராகச் சவால் விட்டார்கள் (2இரா.18:17). இதற்கருகேயிருந்த குளம் " மேல்குளம் " என்று அழைக்கப்பட்டது (ஏசாயா 36:2). இது எருசலேமுக்குச் செல்லும் சாலையின் அருகே இருந்தது.  இது " இன்னோம் " பள்ளத்தாக்கின் தலைப்பகுதியாகும். வண்ணார்கள் துவைத்த துணிகளை உலர வைக்க இடம்...

அந்தியோகியா பட்டணம் || அறிந்து கொள்வோம் பகுதி -109 ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி -109 அந்தியோகியா பட்டணம்  பரிசுத்த வேதாகமத்தில் அந்தியோகியா பட்டணம் பற்றிய வசனங்கள் ( அப்போஸ்தலர் 6:5 , அப்போஸ்தலர் 11:19 ,  அப்போஸ்தலர் 11:20 , அப்போஸ்தலர் 11:22 ,  அப்போஸ்தலர் 11:25 , அப்போஸ்தலர் 11:26 ,  அப்போஸ்தலர் 11:27 , அப்போஸ்தலர் 13:1 ,  அப்போஸ்தலர் 13:14 , அப்போஸ்தலர் 14:19 ,  அப்போஸ்தலர் 14:21 , அப்போஸ்தலர் 14:26 ,  அப்போஸ்தலர் 15:22 , அப்போஸ்தலர் 15:23 ,  அப்போஸ்தலர் 15:30 , அப்போஸ்தலர் 15:35 , அப்போஸ்தலர் 18:22 , கலாத்தியர் 2:11 ,  II தீமோத்தேயு 3:11 ) தற்போதைய அந்தியோகியா அந்தியோகியா ( Antioch ) என்னும் பழங்கால நகர் இன்றைய துருக்கி நாட்டின் தென் கிழக்குப் பகுதியில், சிரியாவின் வடகிழக்கு எல்லையிலிருந்து 12 மைல் தொலையில் அமைந்த நகரம் ஆகும். இந்நகருக்கு மேற்குப்பக்கத்தில் ஒரோண்டெஸ் (Orontes) என்னும் பேராறு ஓடுவதால் அதற்கு "ஒரோண்டெஸ் கரையில் அமைந்த அந்தியோக்கியா" (Antioch on the Orontes) என்னும் பெயரும் உண்டு.பழைய நகரான அந்தியோக்கியா புது நகரான "அந்தாக்கியா" (Antakya) அருகே இன்றைய துருக்கி நாட்டில் அமைந்து...