வண்ணான் || அறிந்து கொள்வோம் || பகுதி - 110 ||

அறிந்து கொள்வோம்

பகுதி - 110


வண்ணான்



இவர்கள் அழுக்கான ஆடைகளைத் துவைத்துச் சுத்தமாக்கும் பணியைச் செய்துவந்தார்கள். வேதாமக நாட்களில் துணியை ஒரு கட்டையினால் அடித்துத் துவைப்பதுண்டு. இப்படிப்பட்ட ஒரு உருளைக் கட்டையைக் கொண்டுதான் இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபு கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.


சவுக்காரம்


துணிகளிலுள்ள அழுக்கைப் போக்குவதற்கு வண்ணாருடைய சவுக்காரம் பயன்படுத்தப்பட்டது.

(மல். 3:2). இது எபிரெய மொழியில் "borith" என்று அழைக்கப்படுகிறது.


வனாந்தரத்தில் காணப்பட்ட சில தாவரங்களை எரித்த சாம்பல்கூடத் துணிகளைத் துவைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. 


வண்ணார் துறை


இது எருசலேமுக்கு வெளியேயிருந்த ஒரு இடமாகும். அசீரிய ராஜாவினால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் இந்த இடத்தினருகே நின்று, யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு எதிராகச் சவால் விட்டார்கள் (2இரா.18:17).


இதற்கருகேயிருந்த குளம் "மேல்குளம்" என்று அழைக்கப்பட்டது (ஏசாயா 36:2). இது எருசலேமுக்குச் செல்லும் சாலையின் அருகே இருந்தது.

 இது "இன்னோம்" பள்ளத்தாக்கின் தலைப்பகுதியாகும்.


வண்ணார்கள் துவைத்த துணிகளை உலர வைக்க இடம் தேவைப்பட்டபடியால் இந்தத் துறை எருசலேம் பட்டணத்துக்கு வெளியேயிருந்தது. வண்ணார்கள் துணிகளின் அழுக்கைப் போக்கப் பயன்படுத்தும் சில பொருட்களின் நெடியும் அதிகமாக இருக்கும் என்பதால் அதை பட்டணத்தின் வெளியே வைத்திருந்தார்கள்.


உருவகத்தில் வெளுத்தலும் வெண்மையும்:-


ஆண்டவராகிய இயேசு மறுரூபமாகியபோது அவருடைய ஆடை வெண்மையாகப் பிரகாசித்தது. அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது" என்று மாற்கு 9:3 -ல் சொல்லப்பட்டுள்ளது.


மேசியா புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் சுத்திகரிப்பார் என்று மல்கியா 3:2 -ல் ஒப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.






Post a Comment

0 Comments