விரோதி || அறிந்து கொள்வோம் || பகுதி 111 ||

அறிந்து கொள்வோம்


பகுதி 111


விரோதி

(எதிரி)



"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்" என்ற அன்பின் கட்டளையை ஆண்டவராகிய இயேசு நமக்குக் கொடுத்திருக்கிறார் (மத்.5:44).


இதன்படியே அவர் செய்தும் காட்டியிருக்கிறார். தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக அவர் "பிதாவே இவர்களுக்கு மன்னியும்" என்று ஜெபித்தார் (லூக்கா 23:34).


சத்துருக்கள் குறிக்க " echthros " என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.


' உன் சத்துருவின் மாடவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடம் கொண்டுபோய் விடுவாயாக" என்ற கட்டளை இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது (யாத்.23:4) .


ஸ்தேவான் தன்னைக் கல்லால் எறிந்து கொல்லுபவர்களுக்காக ஜெபித்தான் (அப். 7:60).


விரோதிகளைக் குறித்த கட்டளைகள்


மேலே குறிப்பிடப்பட்ட கட்டளைகளைத் தவிர வேறு பல கட்டளைகளும் விரோதிகளைக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.


"உன் சத்துரு பசியிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகறங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. அதனால நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; உனக்குப் பலனளிப்பார் என்ற நீதிமொழிகள் 25:21, 22 வசனங்கள் சொல்லப்படுகின்றன. பவுல் அப்போஸ்தலன் இந்த வசனங்களை எடுத்துக் காட்டுகிறது.


சத்துரு விழும்போதும், இடறும்போதும் அதைக் கண்டு சந்தோஷப்படக் கூடாது (நீதி. 24:17).


இஸ்ரவேலரின் எதிரிகள்


வேதாகமத்தில் இஸ்ரவேலரின் எதிரிகளின் பட்டியல் கால வரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ளது.


1.எகிப்தியர்கள் - (யாத். 1:8-11; யாத். 14:9; 1 இரா.14:25)


2.அமலேக்கியர் - யாத். 17:8; நியா. 3:13.


3.ஏதோமியர் - எண். 20:18; 1 இரா. 11:14.


4.எமோரியரின் ராஜாவாகிய சீகோன்             எண்.21:23. 


5.பாசானின் ராஜாவாகிய ஓக் :

 எண். 21:33.


6.கானானியரும், சுற்றிலும் இருந்த ஜாதியினரும்:

யோசுவா 11:1-5.


7.சீரியர்கள் -(நியா. 3:8; 1 இரா. 11:25; 

1 இரா. 20:1; 2இரா.6:8,24; 2 இரா. 24:2; 2 நாளா. 28:5)


8.மோவாபியர் ( நியா.3:12;2 இரா. 1:1; 

2 இரா. - 24:2)

9.அம்மோன் புத்திரர்

 (நியா. 3:13; நியா. 10:9;

2சாமு.10:6 1 நாளா. 19:6; 2 இரா. 24:2.)


10.மீதியானியர் - நியா. 6:1.


11.பெலிஸ்தர் - (நியா. 10:7-8;

 1 சாமு.4:1-2; 1 சாமு.17:1-2; 1 சாமு.31:1; 

2 சாமு. 5:17; 2 சாமு.8:1; 2 சாமு.21:15,18 1நாளா.20:4)


12.அசீரியர் -( 2 இரா. 15:19, 29;

 2 இரா. 17:3-6; 2இரா.18:13.)


13.பாபிலோனியர் ( 2 இரா. 24:1;

 2 இரா. 25:1; 2 நாளா. 36:5-7, 15-20)


14.பெர்சியனாகிய ஆமான் - எஸ்.3:5-6.


15.கிரேக்கர் - சக. 9:13.


16.ரோமர் -யோவான் 11:48


இஸ்ரவேலரின் எதிரிகள் கொடூரமானவர் களாகவும், ஒடுக்கப்படுபவர்களாகவும் இருந்தனர் (எரே. 6:23; 50:42).


பலவேளைகளில் இவர்கள் ஒன்றுசேர்ந்து வந்தார்கள் (சங். 83:5-8).


தேவன் தமது ஜனத்தைச் சுற்றிலும் இருந்து,அவர்களைப் பாதுகாத்தார்.

 (சங். 125:2).


தேவனுடைய சிட்சையின் காரணமாக அவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டபோது மட்டுமே எதிரிகளால் அவர்களை மேற்கொள்ள முடிந்தது (உபா.28:47,48).


விரோதியான சாத்தான்


சாத்தான் " விரோதியானவன் " என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.

 (1 தீமோ. 5:14)..


"தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசனவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்" என்று சாத்தானைக் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. (1 பேதுரு 5:8).


"மாம்ச சிந்தையும் தேவனுக்கு விரோதமான பகையாக இருக்கிறது" (ரோமர் 8:7).


மரணம் கடைசிச் சத்துருவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (1 கொரி. 15:26). ஆனால் ஆண்டவராகிய இயேசு சாத்தானையும், மரணத்தையும் சிலுவையில் ஜெயித்திருக்கிறார்.....




Post a Comment

1 Comments