ஹனுக்கா || அறிந்து கொள்வோம் || பகுதி - 87 ||
அறிந்து கொள்வோம் பகுதி - 87 ஹனுக்கா - Hanukkah தீபத் திருநாள் அல்லது ஒளி விழா (Festival of Lights) என்று பொருள் படும்.இது யூதர்களின் கொண்டாட்டங்களில் ஒன்று. எட்டு நாட்கள் நடைபெறும் இந்த பண்டிகை கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எருசலேமில் நடந்த மக்கேபியப் புரட்சியின் போது, யூதர்களின் புனிதக் கோவில் (இரண்டாம் கோவில்) மீண்டும் வழிபாட்டுக்கென அர்பணிக்கபட்டதை நினைவு கூற கொண்டாடப்படுகிறது. எட்டு இரவுகளும் எட்டு பகல்களும் கொண்டாடப்படும் இந்த பண்டிகை. கி.மு. 167-ல் இஸ்ரவேல் நாடு சீரியா தேசத்தின் கீழ் இருந்து வந்தது. அப்போது, மத்தியாஹூ (Mattiyahu) என்னும் யூத ஆசாரியரை அவருடைய ஊராகிய மோடி என்னுமிடத்தில் சீரிய இராணுவம் பிடித்து, தங்கள் தெய்வமாகிய ஜீயஸ் (Zeus) என்னும் கடவுளுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, மத்தியாஹூவையும், அவருடய ஐந்து மகன்களையும் அதை வணங்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். அதற்கு மத்தியாஹூ மறுத்ததுமன்றி, அந்த பலிபீடத்தை தைரியமாக இடித்துப் போட்டு, வற்புறுத்திய வீரனையும் கொன்று விட்டு, பக்கத்தில் இருந்த மலைக்கு தன் மகன்களோடும் இன்னும் சில யூதர்களோடும் தப்பி ஓடினார். இந்த சிறிய குழுவினர் ...