சாராள் நவ்ரோஜி |அறிந்து கொள்வோம் ||பகுதி -86|

 அறிந்து கொள்வோம்

பகுதி -86


அம்மையார் சாராள் நவ்ரோஜி 


சாராள் நவ்ரோஜி ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது பெற்றோருக்கு கடைசி பிள்ளை. அவருடைய தந்தை இசை சொல்லி கொடுக்கும் ஆசிரியராக லூத்தரன் குருகுல கல்லூரியில் பணி புரிந்தார். அவருடைய தாயார் பள்ளியில் ஆசிரியையாக பணியில் இருந்தார்.சாராள் நவ்ரோஜி 10 வயதாக இறுக்கும் பொது அவருடைய தந்தை தவறிவிட்டார்.சாராள் நவ்ரோஜி தன்னுடைய 15வது வயதில் கர்த்தரை சொந்த ரட்சகராக ஏற்று கொண்டார். 

1956களில் அவர் சிலோன் பெந்தேகோஸ்தே மிஷனில் உறுப்பினர் ஆனார். அந்த கால கட்டத்தில் அவர் மெட்ராஸ் மின்சார வாரியத்தில் பணியில் இருந்தார்.


1959களில் கர்த்தரிடமிருந்து ஊழியத்திற்கு அழைப்பு வந்தது. வேலையை உதறிவிட்டு ஒரு சகோதிரியாக இணைந்தார். வீட்டில் எல்லோரும் இதை கடுமையாக எதிர்த்தனர். நான் கர்த்தர்ருக்காக என் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்திருக்கிறேன். எல்லாம் கர்த்தர் பார்த்துக் கொள்வார் என்று சொல்லி வீட்டில் யாருக்கும் சொல்லாமல் வேலையை விட்டு விட்டு, ஊழியத்திற்காக சிலோன் போக இரயில் ஏறிவிட்டார்கள். இவங்க கடைசிப் பிள்ளை என்பதால் அம்மாவிற்கு ரொம்ப செல்லமாம், வழியனுப்ப வந்த அம்மா பயங்கரமாக அழ, இவங்களும் அவங்களைப் பார்த்து அழுது கொண்டே போக, அப்போழுது கர்த்தரின் அன்பை மையபடுத்தி எழுதப்பட்ட பாடல் இது.


“ என்னை மறவா யேசு நாதா

உந்தன் தயவால் என்னை நடத்தும் ”


ஒரு முறை ஸ்டுடியோவில் பாடல் பதிவு செய்து கொண்டிருக்கையில், ஒரு சினிமா இசை இயக்குனர், உங்க குரலும் பாடலும் நன்றாக இருக்கிறது. சினிமாவில் பாடுங்கள் என்று கேட்க, மாட்டேன் என்று சொல்லி விட்டார்களாம். அந்த சூழ்நிலையில், கர்த்தரை தவிர யாரையும் பாட மாட்டேன் என்று சொல்லி பாடிய பாடல் தான் இது.


“ உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

உம்மையன்றி யாரைப் பாடுவேன் ஏசையா ”


இவர் இப்படி பல அருமையான பாடல்களை இயற்றியுள்ளார்.


Post a Comment

0 Comments