Posts

Showing posts from August, 2022

பாரான் || அறிந்து கொள்வோம் || பகுதி -92 ||

Image
  அறிந்து கொள்வோம் பகுதி -92 பாரான் (Paran - place,Mount and wilderness) அர்த்தம்:- (அலங்கார வேலைப்பாடு,பெரும் குகைகளின் இடம்,அழகு படுத்துதல், அழகு, மகிமை, ஆபரணம்) உபாகமம் 1:2 -ன் படி இது ஒரு இடம் . உபாகமம் 33:2-ன் படி இது ஒரு மலை . எண்ணாகமம் 10:12,12:16 - ன் படி இது ஒரு வனாந்திரம் . கானான் தேசத்திற்கு தெற்கே உள்ள ஒரு மலை தேசம். இது மோவாப்புக்கு தெற்கே இருந்த ஒரு வனாந்தரம். இதற்கு வடக்கே பெலிஸ்திய தேசம் மேற்கே ஏத்தாம் வனாந்திரம் தெற்கே சீனாய் வனாந்திரம் கிழக்கே அராபா பள்ளத்தாக்கு இவைகளின் எல்லையாக இருந்தது. இங்கு இந்த இடம் கல் பூமியும் மணல் தரையுமாய் இருந்தது,அதற்குள் தான் சீன் வனாந்திரம் சேர்ந்திருந்தது, எகிப்தில் இருந்து இஸ்ரவேலர்கள் செல்லும் வழி இதுவாக இருந்தது இதனால் இதை இந்நாள் வரைக்கும் "அலைந்து திரிகிறதின் வனாந்தரம்" என்று அழைப்பார்கள். 🌼 ஆதியாகமம் 21:21   ஆகாரும் இஸ்மவேலும் இங்கு வாசம் செய்தார்கள்.இஸ்மவேல் எகிப்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டான். 🌼எண் 10:12,12:16,13:3,26,உபா 1:1 இஸ்ரவேலர்கள் இங்கு சில வருடங்களாக சஞ்சரித்தார்கள்.சீனாய் வனாந்தரத்திற்கு பின்பு மேக...

சேபா || அறிந்து கொள்வோம் || பகுதி -91 ||

Image
  அறிந்து கொள்வோம் பகுதி -91 சேபா 🔯சேபா -1(Seba) அர்த்தம்:- (மாண்புமிகு, நீ குடி, குடிகாரர்) 1.காமுடைய குமாரனான கூஷின் முத்த குமாரன்.இவன் சந்ததிகள் ஆப்பிரிக்க, எத்தியோப்பிய பகுதிகளில் குடியேறினர்கள்.(ஆதி10:7,1நாளா1:9)  2.எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியிலுள்ள இத்தேசத்தில் கூஷின் சந்ததியார் குடியேறினர்.இது ஒரு செழிப்பான நல்ல பூமி. (சங்72:10, ஏசா43:3) சபேயர்கள் இதைச் சேர்ந் தவர்களாயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 🔯சேபா-2 (Sheba)  அர்த்தம்:- ( அனைத்து உறுதிமொழி)  1.கூக்ஷின் குமாரனான ராமாவின் குமாரன். (ஆதி10:7,1நாளா 1:9). 2.சேமின் சந்ததியில் ஏபேரின் இரண்டாம் குமாரனான யொக்தானின் குமாரன்.(ஆதி 10:28, 1நாளா 1:22). 3.கேத்தூராளின் 2ஆம் குமாரனான யக்க்ஷனின் மூத்த குமாரன் இவன்.(ஆதி25:3, 1 நாளா1:32). 4.சேபா ஒரு தேசமாயிருக்கலாம். இதின் ராஜஸ்திரீ சாலொமோனிடம் திரளான பரி வாரங்களுடன் வந்தாள்.(1ராஜா10:1,4,10,13, 2நாளா9:1,3,9,12). 🔯சேபா-3 (Sheba) அர்த்தம்:- (ஆணை, உறுதிமொழி, ஏழு, ஏழுதரம், வாரம், புனிதமான பூரண மான ஒன்று, ஆணையிடு, பூரணமான, உடன்படிக்கை, நிச்சயமில் லா எண், உடன்படிக்கை செ...

சேலா || அறிந்து கொள்வோம் || பகுதி -90 ||

Image
  அறிந்து கொள்வோம் பகுதி -90 சேலா   🕎சேலா -1 (Sela) அர்த்தம்:- ( கன்மலை, பாறை; குன்று(அ)உயரமான செங்குத்துப்பாறை, அரணான யெகோவாபோன்ற செங்குத்துப்பாறை, பாதுகாப்பான) 💡பட்டணம் :- யுதாவின் 9-ம் ராஜா அமத்சியா  ஏதோம் தேசத்தில் உள்ள இந்த " சேலா " பட்டணத்தைப் பிடித்து அதற்கு " யொக்தியேல் " என்று பேரிட்டான்.(2ராஜா 14:7,ஏசா 16:1)  இதன் மறுபெயர் (Petra)" பெட்ரா ".  இது உப்புக்கடலுக்கும் அகாபா வளைகுடாவுக்கும் மத்தியில் உள்ளது. 🕎சேலா-2 (Shelah) அர்த்தம்:- (கோரிக்கை,விண்ணப்பம், அமைதியுடைமை,சமாதானம்) 💡 மனிதன்:- யாக்கோபின் குமாரனாகிய யூதாவுக்கும் சூவாவின் குமாரத்திக்கும் கெசீபிலே பிறந்த மூன்றாவது மகன் தான் இந்த " சேலா ".(ஆதி38:5,46:12)  ஆனால் 1 நாளா4:21ல் யூதாவின்  குமாரன் " சேலா " என்ற பெயர் பிழையாக " சேலாக் " எனக் கொடுக்கப்பட்டுள்ளது. 🕎சேலா -3 (Zelah)  அர்த்தம்:- ( நொண்டி நடத்தல், விழுதல், இன்னல், துன்பம், கெட்டகாலம், இடுக்கண்; நிற்குமிடம், விலாஎழும்பு, வளைவு, தடைக்கல், ஒரு பக்கமாக, சரிவு) 💡பட்டணம் :- பென்யமீனுக்குக் சுதந்திரமாக கிடைத்த...

தெகாவியர் || அறிந்து கொள்வோம் || பகுதி -89 ||

Image
  அறிந்து கொள்வோம் பகுதி -89 தெகாவியர்   (Dehavites) பெயரின் பொருள் (the sickly-வியாதியான) சிறை இறப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்கள் ஆலயங்கட்டுவதற்கு எதிராக பெர்சிய ராஜாவிடம் மனு எழுதினவர்களில் இவர்களும் ஒருவர். சமாரியாவில் குடியேறின இந்த ஜாதியாரின் பூர்வீகம் காஸ்பியன் கடலின் கிழக்கே இருக்கும் "தைக்கா" (Daikh)வாகும் இது இந்த நாட்களில் (Dehistan)"தெஹிஸ்தான்" என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் ஆரிய இனம் என்று சிலர் கருதுகிறார்கள். ஏரோதுத்துஸ் (Herodotus) என்ற‌ ஆசிரியர் இவர்ளை "தாய்" (Dai or Dahi) எனப்படும் பெர்சிய நாடோடி இனத்தவர் என்று எழுதுகிறார். "காஸ்பியன்"(Caspian Sea) கடலுக்குக் கிழக்கே 'ஆசோப்"(Azof) கடலருகே இவர்கள் வசித்தவர்கள். ( எஸ்ரா 4:9)

மார்ஸ் மேடை || அறிந்து கொள்வோம் || பகுதி - 88 ||

Image
  அறிந்து கொள்வோம் பகுதி - 88 மார்ஸ் மேடை Mars Hill - பெயரின் பொருள்:- (rock of Ares, Areios Pagos, Areopagus,a martial peak- யுத்த தெய்வத்தின் கன்மலை, போர்சம்பந்தமான சிகரம்) அத்தேனே பட்டணத்தைத் தோற்றுவித்த " செக் ரோப்ஸ்" தான் (Cecrops)" அரியோபகஸ் "(Areopag as) என்று அழைக்கப்பட்ட இந்த உச்ச நியாயவிசாரணை மன்றம் உருவாகக் காரணமாயிருந்தவன்.பின்னர் சோலோன்(Solon) என்பவன் இதை அதிகாரப் பூர்வமானதாக்கினான். அந்த உச்ச நியாயவிசாரணை மன்றம் (supreme tribunal) மார்ஸ் மலையில் உள்ள இந்த திறந்த வெளியில் கூடிவரும். " அரியோபகஸ் " என்பது அத்தேனே பட்டணத்தின் உள் அரணின்(Acropolis) வடமேற்குக் கோடியில் இருந்த பாறாங்கற்களாலான(Areopagas) நீண்டுகிடக்கும் சுமார் 60 அடி உயரமான பள்ளத்தாக்கு போன்ற ஒரு குன்று. இது தான் மார்ஸ் மேடை. "மார்ஸ்" என்பது கிரேக்கர்களின் கடல் மற்றும் யுத்த தெய்வம். சூரியனைச் சுற்றும் 8 ஆவது கோளின்(planet) பெயரும் இதுதான்.  மார்ஸ் கடவுளின் மகள் " அலிசிப்பே "(Alicippe) என்பவளை நெப்டியூனின் மகன் " ஹலிரோத்தியுஸ் "(Halirrhothius) என்பவன் ...