பாரான் || அறிந்து கொள்வோம் || பகுதி -92 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி -92


பாரான்


(Paran - place,Mount and wilderness)


அர்த்தம்:-

(அலங்கார வேலைப்பாடு,பெரும் குகைகளின் இடம்,அழகு படுத்துதல், அழகு, மகிமை, ஆபரணம்)


உபாகமம் 1:2 -ன் படி இது ஒரு இடம்.


உபாகமம் 33:2-ன் படி இது ஒரு மலை.


எண்ணாகமம் 10:12,12:16 - ன் படி இது ஒரு வனாந்திரம்.


கானான் தேசத்திற்கு தெற்கே உள்ள ஒரு மலை தேசம். இது மோவாப்புக்கு தெற்கே இருந்த ஒரு வனாந்தரம். இதற்கு வடக்கே பெலிஸ்திய தேசம் மேற்கே ஏத்தாம் வனாந்திரம் தெற்கே சீனாய் வனாந்திரம் கிழக்கே அராபா பள்ளத்தாக்கு இவைகளின் எல்லையாக இருந்தது. இங்கு இந்த இடம் கல் பூமியும் மணல் தரையுமாய் இருந்தது,அதற்குள் தான் சீன் வனாந்திரம் சேர்ந்திருந்தது, எகிப்தில் இருந்து இஸ்ரவேலர்கள் செல்லும் வழி இதுவாக இருந்தது இதனால் இதை இந்நாள் வரைக்கும் "அலைந்து திரிகிறதின் வனாந்தரம்" என்று அழைப்பார்கள்.


🌼 ஆதியாகமம் 21:21 

 ஆகாரும் இஸ்மவேலும் இங்கு வாசம் செய்தார்கள்.இஸ்மவேல் எகிப்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.


🌼எண் 10:12,12:16,13:3,26,உபா 1:1 இஸ்ரவேலர்கள் இங்கு சில வருடங்களாக சஞ்சரித்தார்கள்.சீனாய் வனாந்தரத்திற்கு பின்பு மேகம் இந்த வனாந்தரத்தில் தான் தங்கிற்று.


🌼1 சாமுவேல் 25:1

சாமுவேலின் மரணத்திற்கு பின்பு தாவீது இங்கு சில காலம் இருந்தான்.


🌼1 இராஜ 11:17-18 

சாலமோனின் விரோதி ஆதாத் மீதியானிலிருந்து எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் போகும் வழியில் இங்கு தங்கி சென்றான்.


🌼உபா 33:2, ஆபகூக் 3:3 

தேவன் பதினாயிரங்களான  பரிசுத்தவான்களோடு இங்கிருந்து பிரசன்னமாகி பிரகாசித்தார்.


🌼எண் 13:3,26 

மோசே இங்கிருந்து தான் கானானை சுற்றிப் பார்க்க 12 மனிதர்களை அனுப்பினார்.



Post a Comment

0 Comments