சேபா || அறிந்து கொள்வோம் || பகுதி -91 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி -91


சேபா


🔯சேபா -1(Seba)


அர்த்தம்:-

(மாண்புமிகு, நீ குடி, குடிகாரர்)


1.காமுடைய குமாரனான கூஷின் முத்த குமாரன்.இவன் சந்ததிகள் ஆப்பிரிக்க, எத்தியோப்பிய பகுதிகளில் குடியேறினர்கள்.(ஆதி10:7,1நாளா1:9) 


2.எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியிலுள்ள இத்தேசத்தில் கூஷின் சந்ததியார் குடியேறினர்.இது ஒரு செழிப்பான நல்ல பூமி. (சங்72:10, ஏசா43:3) சபேயர்கள் இதைச் சேர்ந் தவர்களாயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


🔯சேபா-2 (Sheba) 


அர்த்தம்:-

(அனைத்து உறுதிமொழி)


 1.கூக்ஷின் குமாரனான ராமாவின் குமாரன். (ஆதி10:7,1நாளா 1:9).


2.சேமின் சந்ததியில் ஏபேரின் இரண்டாம் குமாரனான யொக்தானின் குமாரன்.(ஆதி 10:28, 1நாளா 1:22).


3.கேத்தூராளின் 2ஆம் குமாரனான யக்க்ஷனின் மூத்த குமாரன் இவன்.(ஆதி25:3, 1 நாளா1:32).


4.சேபா ஒரு தேசமாயிருக்கலாம். இதின் ராஜஸ்திரீ சாலொமோனிடம் திரளான பரி வாரங்களுடன் வந்தாள்.(1ராஜா10:1,4,10,13, 2நாளா9:1,3,9,12).


🔯சேபா-3 (Sheba)


அர்த்தம்:-

(ஆணை, உறுதிமொழி, ஏழு, ஏழுதரம், வாரம், புனிதமான பூரண மான ஒன்று, ஆணையிடு, பூரணமான, உடன்படிக்கை, நிச்சயமில் லா எண், உடன்படிக்கை செய்த இடம், உடன்படிக்கைக்கு).


1.சிமியோனுக்குக் கிடைத்த பட்டணங்களில் ஒன்று. இதன் மறுபெயர் பெயெர்செபா ஆகும். (ஆங்கிலத்தில் Beersheba or Sheba=அல்லது சேபா) (யோசு19:2).


2.தாவீதுக்கு விரோதமாய் எழும்பி, பெத்மாக்காவாகிய ஆபேல் ஊர் மக்கள் மூலம் தலையைப் பறி கொடுத்த பேலியாளின் மகனான இவன் பென் யமீனனான பிக்கிரியின் குமாரன். (2சாமு:20:1,2, 6,7,10,13,21,22).


3.காத் புத்திரரின் வீட்டாரில் மூன்றாவதாகிய ஒருவன். (1 நாளா5:13).



🔯சேபா -4 (Shebah)


அர்த்தம்:-

(ஆணை, உறுதிமொழி, ஏழு, ஏழுதரம், வாரம், புனிதமான பூரணமான ஒன்று, ஆணையிடு, பூரணமான, நிச்சயமில்லா எண். உடன்படிக்கை செய்த இடம், உடன்படிக்கைக்கு)


ஈசாக்கின் வேலைக்காரர் நான்காவதாக வெட்டின  பெயர்செபாவிலுள்ள ஒரு துரவின் பெயர் இது.(ஆதி26:33)


🔯சேபா-5 (Zebah)


அர்த்தம்:-

(பாதுகாப்பிலிருந்து கவரப்பட்டது, (யாதொரு) பலி)


கிதியோனின் சகோதரரைக் கொன்றுபோட்ட மீதியானியரின் இரு ராஜாக்களில் ஒருவனாகிய இவனைக் கிதியோன் கொன்றுபோட்டு அவனுடைய ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக்காறைகளை அதாவது வாசனைத் திரவியங்கள் உள்ளுக்குள்ளே அடைக்கப்பட்ட ஆபரணங்களை எடுத்துக் கொண்டான்.

(நியா 8:5,6,7,10,12,15,18,21.சங்:83:11)


Post a Comment

0 Comments