10-ம் சங்கீதம் / சங்கீத விளக்கம்
சங்கீத விளக்கம் 10-ம் சங்கீதம் (துன்மார்க்கனின் முதல் சங்கீதம்) பிரிவு 1.துன்மார்க்கனை தண்டிக்க வேண்டும் என்று கர்த்தரிடம் ஏறேடுக்கப்படும் முதலாவது விண்ணப்பம். துன்மார்க்கனின் 22 பாவங்கள் - (10:1-11) 2.துன்மார்க்கனை தண்டிக்க வேண்டும் என்று கர்த்தரிடம் ஏறேடுக்கப்படும் இரண்டாவது விண்ணப்பம். அத்துடன் நீதிமான் ஒடுக்கப்படும் போது அவனுக்கு உதவி புரிய வேண்டும் என்று கர்த்தரிடம் ஏறேடுக்கப்படும் விண்ணப்பம் (10:12-18) செப்துவஜிந்து பதிப்பில் ஒன்பதாவதுசங்கீதமும், பத்தாவது சங்கீதமும் சேர்த்து ஒரே சங்கீதமாய் இருக்கிறது. எபிரெய பாஷையிலுள்ள சங்கீத புஸ்தகத்தில், ஒன்பதாவது சங்கீதமும்,பத்தாவது சங்கீதமும் தனித்தனி சங்கீதமாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. தாவீது துன்மார்க்கருடைய துர்க்குணத்தை பற்றி கர்த்தரிடத்தில் முறையிடுகிறார். கர்த்தரோ துன்மார்க்கருக்கு விரோதமாக உடனடியாக எழும்பி வராமல் தாமத்தப்படுத்துகிறார் என்று தாவீது வருத்தத்தோடு ஜெபம் பண்ணுகிறார். (சங் 10:1-11). கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை விடுவிப்பதற்காக, துன்மார்க்கருக்கு விரோதமாய் எழும்பி வருமாறு தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப...