சேலா || அறிந்து கொள்வோம் || பகுதி -90 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி -90


சேலா 


🕎சேலா -1 (Sela)


அர்த்தம்:-

(கன்மலை, பாறை; குன்று(அ)உயரமான செங்குத்துப்பாறை, அரணான யெகோவாபோன்ற செங்குத்துப்பாறை, பாதுகாப்பான)


💡பட்டணம்:-

யுதாவின் 9-ம் ராஜா அமத்சியா  ஏதோம் தேசத்தில் உள்ள இந்த "சேலா" பட்டணத்தைப் பிடித்து அதற்கு "யொக்தியேல்" என்று பேரிட்டான்.(2ராஜா 14:7,ஏசா 16:1) 

இதன் மறுபெயர் (Petra)"பெட்ரா". 

இது உப்புக்கடலுக்கும் அகாபா வளைகுடாவுக்கும் மத்தியில் உள்ளது.


🕎சேலா-2 (Shelah)


அர்த்தம்:-

(கோரிக்கை,விண்ணப்பம், அமைதியுடைமை,சமாதானம்)


💡 மனிதன்:-

யாக்கோபின் குமாரனாகிய யூதாவுக்கும் சூவாவின் குமாரத்திக்கும் கெசீபிலே பிறந்த மூன்றாவது மகன் தான் இந்த "சேலா".(ஆதி38:5,46:12) 

ஆனால் 1 நாளா4:21ல் யூதாவின்  குமாரன் "சேலா" என்ற பெயர் பிழையாக "சேலாக்" எனக் கொடுக்கப்பட்டுள்ளது.


🕎சேலா -3 (Zelah) 


அர்த்தம்:-

(நொண்டி நடத்தல், விழுதல், இன்னல், துன்பம், கெட்டகாலம், இடுக்கண்; நிற்குமிடம், விலாஎழும்பு, வளைவு, தடைக்கல், ஒரு பக்கமாக, சரிவு)


💡பட்டணம்:-

பென்யமீனுக்குக் சுதந்திரமாக கிடைத்த ஒரு பட்டணம் தான் "சேலா"

இப்பட்டணத்தில் தான் தாவீதின் காலத்தில் சவுல்,யோனத்தானின் எலும்புகள் கொண்டுவரப்பட்டு கீசின் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டது.(யோசு18:28, 2சாமு 21:14) இவைகள் கி.மு.1056 ல் நடந்தது என்று நம்பப்படுகிறது.


🕎சேலா -4 (Selah)


அர்த்தம்:-

(இசையை நிறுத்துதல், இடைநிறுத்துதல், தூக்கிப்பாடுதல். உயர்த்திப்பாடுதல், மென்மையாக்குதல், ஒருபுறமாக இங்குமங் குமாக அசைத்தல், அசையைத் தூக்கிப்பாடுதல்)


💡இசை குறியீடு:

சங்கீதப் புஸ்தகத்திலும்,ஆபகூக் புத்தகத்திலும் உள்ள பாடல்களில் கையாளப்பட்டுள்ள இந்த வார்த்தை தொங்குதல், எடை(hung up,i.e.,weight) என்று பொருள்தரும் வார்த்தையிலிருந்து வந்தது. (சங்3:2முதல் ஆபகூக் 3:13 வரை) 74 இடங்களில் இவ்வார்த்தை வருகிறது. இதைப் பற்றிய அர்த்தங்கள்:-


1.இடையில் சிறிது நிறுத்துதல்.

2.பாடியதைத் திரும்பப் பாடுதல்.

3.ஒரு பாடற்கூறின் முடிவு.

4.முழு பலத்துடனும் இசைத்தல்.

5.வணக்கமுறையில் தலையில் அல்லது உடலை வளைத்தல்.

6.திரும்பத் திரும்ப பாடும் குறுகிய சுரம் அதாவது இசை பாவனை அல்லது மெல்லிசையில் இருந்து வில்லிசைக்கும் மாற்றிக் கொள்ளுதல்.(Piano to Forte)

7.பாடலை நிறுத்தி அதை திரும்ப சிந்தித்தல்.

8. மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்துதல்.(சங்கீதம் 3:2,4,8.4:2,.9:16…ஆபகூக் 3:3,9,13.) முதலிய 74 இடங்களில் இவ்வார்த்தை வருகிறது.


🕎சேலா அம்மாலிகோத்:-

 (selah hammahlekoth)


அர்த்தம்:-

(பிரிவுகளின்/ பிரிதலின் செங்குத்து பாறை, அல்லது கன்மலை.தப்பிக் கொள்ளுதலின் செங்குத்தான கன்மலை)


💡மலை:-

யூதாவுக்கு தெற்கே மோவாப் தேசத்தில் உள்ள இந்த மலையில் தான் தாவீது தொடர்ந்த வந்த சவுல் அவனை விட்டு திரும்பி போனபடியினால் இந்த மலைக்கு "சேலா அம்மாலிகோத்" என்ற பெயர் உண்டானது.

(1 சாமுவேல் 23:28)


🕎சேலாவியர்:-

 (Shelanites)


💡மக்கள் கூட்டம்:

யூதாவின் மூன்றாம் குமாரனான சேலாவின் சந்ததியார்கள்.(எண் 26:20)


Post a Comment

0 Comments