மார்ஸ் மேடை || அறிந்து கொள்வோம் || பகுதி - 88 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி - 88


மார்ஸ் மேடை


Mars Hill - பெயரின் பொருள்:-

(rock of Ares, Areios Pagos,

Areopagus,a martial peak-

யுத்த தெய்வத்தின் கன்மலை, போர்சம்பந்தமான சிகரம்)


அத்தேனே பட்டணத்தைத் தோற்றுவித்த "செக் ரோப்ஸ்" தான் (Cecrops)"அரியோபகஸ்"(Areopag as) என்று அழைக்கப்பட்ட இந்த உச்ச நியாயவிசாரணை மன்றம் உருவாகக் காரணமாயிருந்தவன்.பின்னர் சோலோன்(Solon) என்பவன் இதை அதிகாரப் பூர்வமானதாக்கினான். அந்த உச்ச நியாயவிசாரணை மன்றம் (supreme tribunal) மார்ஸ் மலையில் உள்ள இந்த திறந்த வெளியில் கூடிவரும்.


"அரியோபகஸ்" என்பது அத்தேனே பட்டணத்தின் உள் அரணின்(Acropolis) வடமேற்குக் கோடியில் இருந்த பாறாங்கற்களாலான(Areopagas) நீண்டுகிடக்கும் சுமார் 60 அடி உயரமான பள்ளத்தாக்கு போன்ற ஒரு குன்று. இது தான் மார்ஸ் மேடை. "மார்ஸ்" என்பது கிரேக்கர்களின் கடல் மற்றும் யுத்த தெய்வம். சூரியனைச் சுற்றும் 8 ஆவது கோளின்(planet) பெயரும் இதுதான். 


மார்ஸ் கடவுளின் மகள் "அலிசிப்பே"(Alicippe) என்பவளை நெப்டியூனின் மகன் "ஹலிரோத்தியுஸ்"(Halirrhothius) என்பவன் பலவந்தம் செய்ததினிமித்தம் 12 கடவுள்களை நீதிபதிகளாக வைத்து அவர்கள் முன்னிலையில் அவனை மார்ஸ் இங்கே கொல்ல முயன்றான்.

என்று கிரேக்கக்கதை இவ்விதமாகச் சொல்லுகிறது.


பவுல் அத்தேனே பட்டணத்தின் சந்தை வெளியில்(agora) தினந்தோறும் சம்பாஷித்தான். அவனை இந்த மார்ஸ் மேடைக்கு அழைத்துச்சென்று பவுலின் கருத்தைக் கேட்டனர். இவ்விடத்தில் நியாயாதிபதிகள் கூடிவருவது வழக்கம். பவுல் தேவ பக்தி நிறைந்த அத்தேனருக்கு இதின் நடுவிலே நின்று அவர்களால் அறியப்படாதிருந்த மெய்யான தெய்வத்தைப்பற்றியும், உயிர்த்தெழுதல்பற்றியும் உபதேசித்தான்.

சிலர் அவனைப்பற்றிக்கொண்டு விசுவாசிகளானார்கள்.அவர்களில் மார்ஸ்மேடை நியாயாதிபதிகளில் ஒருவனான "தியொனீசியு" என்பவனும், "தாமரி" என்கிற ஸ்திரீயும், வேறு சிலரும் இருந்தனர்.(அப்17:22).


இரு நபர்கள் குறித்த சிறு குறிப்பு


🌾தியொனீசியு (Dionysius)


பெயரின் பொருள்:-

(கிரேக்க மதுக்கடவுளுக்கு அற்பணிக்கப்பட்ட, திராட்சத் தெய்வம். களியாட்டுச் செய்பவர், பிரகாசமான தெய்வம் அல்லது சூரியன், தெய்வீகமாகத் தொடப்பட்ட, தெய்வீகமாகக் குத்தப்பட்ட, திராட்சைஆலைக்கு அற்பணிக்கப்பட்டவன்)


அத்தேனே பட்டண மார்ஸ்மேடை நியாயாதிபதிகளில் (Areopagite) ஒருவனான இவன் பவுலின் பிரசங் கத்தினால் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டான்.(அப்17:34) அத்தேனே பட்டணத்தின் முதல் கண்காணி என இவன் கருதப்படுகிறான். 

அங்கு இவன் இரத்தச்சாட்சியாக மரித்தான் என சொல்லப் படுகிறது. முன் நாட்களில் இவன் கிரேக்க மதுக்கடவுளாகிய "பாக்கஸின்" பக்தனாயிருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.



🌾தாமரி (Damaris) 


பெயரின் பொருள்:-

(பண்பார்ந்த,கனிவான,மட்டமைதி; கிடாரி, நுகஞ்சுமக்கும் மனைவி)


பவுல் அத்தேனேயில் மார்ஸ்மேடையில் பிரசங்கித்த போது விசுவாசியான சகோதரி. இவள் தியொனீசியு வின் மனைவி என்று நம்பப்படுகிறது. (அப்17:34).



Post a Comment

0 Comments