தீமோத்தேயு || அறிந்து கொள்வோம் || பகுதி -132 ||

அறிந்து கொள்வோம்

பகுதி -132



தீமோத்தேயு


தீமோத்தேயு என்ற கிரேக்க பெயருக்கு "Timotheos" என்றும் "தேவனுக்கு முக்கியமானவர்"- "Precious One of God"அல்லது தேவனால் கனம் பண்ணப்பட்டவர் என்றும் அர்த்தப்படும்.


🌿தீமோத்தேயுவின் தாய் - யூதர் (ஐனிக்கேயாள்)

🌿தீமோத்தேயுவின் தந்தை - ஒரு கிரேக்கர் (பெயர் குறிப்பிடப்படவில்லை). 

🌿தீமோத்தேயுவின் பாட்டி - லோவிசாள். 

🌿 பவுல் லீஸ்தீராவுக்கு போனபோது அங்கு தீமோத்தேயுவை சந்தித்தார். பவுலின் ஊழியத்தின் மூலமாக இவர் இரட்சிக்கப்பட்டார்.

பவுலோடு பல இடங்களுக்கு பிரயாணம் பண்ணி ஊழியம் செய்தார்.ரோமாபுரியில் பவுல் சிறைச்சாலையில் இருந்த போது அவரும் அவரோடு கூட இருந்தார்.


வேதாகமத்தில் புதியஏற்பாட்டில் சிறந்த முன்மாதிரியான ஒரு ஊழியக்காரனாக இருப்பவர் தீமோத்தேயு. இவர் வாலிபப் பிராயத்திலிருந்து ஊழியம் செய்பவராயிருந்தார்.(1தீமோ-4:12) 

இவர் பவுலின் ஊழியத்தில் உருவக்கப்பட்டவர்.ஒவ்வொரு ஊழியர்களும் தமக்குப் பின்னர் ஊழியத்தை தொடர்ந்து நடத்துவதற்கு ஆவிக்குரிய தீமோத்தேயுக்களை உருவாக்க வேண்டும். 



"நான்" தீமோத்தேயுவைப் போல உருவாக வேண்டும்' என்று விரும்புபவர்கள் தங்கள் தலைவனுடன் இணைந்து ஊழியத்தில் பங்கேற்று உதவிகள் செய்பவராகவும், பாடுபடுபவராகவும்,ஜெபிப்பவராகவும் காணப்பட வேண்டும்.





தீமோத்தேயுவின் முன்மாதிரி   (நற்பண்புகள்)


1.பவுல் அவர்களின் ஊழியத்தையும் அவரின் பாடுகளையும் பற்றி நன்கு தெரிந்து கொண்டே பவுலடிகளாருடன் இணைந்து ஊழியப்பயணம் செய்வதற்கு தன்னை ஒப்புக் கொடுத்தார்.


2.முதற்க்கட்டமாக விருத்தசேதனம் செய்யப்பட சம்மதித்தார்.


3.பவுலடிகளின் உடன்வேலையாளாயிருந்தார்.


 4.பவுலைப் போலவே ஊழியம் செய்பவராயிருந்தார்.


5.பவுலடிகளார் தன்னை அனுப்பிய இடங்களுக்கெல்லாம் கீழ்ப்படிதலுடன் சென்றார்.


6.பல சபைகளை சந்தித்து அவர்களுக்கு போதித்தார்.


7.பவுலடிகளாருடன் சேர்ந்து நிரூபங்களை எழுதினார்.


 8.சபைகளுக்காக ஊக்கமாய் ஜெபிப்பவராக இருந்தார்.


 9.எபேசு சபையின் போதகராக செயல்பட்டு நற்செய்திப்பணி செய்தார்.


10.மிகவும் உத்தமராக நடந்து கொண்டார்.


ஆதார வசனங்கள்

அப்-16:1,அப்-16:3,1தீமோ-4:12,2தீமோ-1:5,

1கொரி-4:17,1கொரி-16:10-11,2கொரி-1:11,

2கொரி-1:19,பிலி-1:1,பிலி-2:19-23,

கொலோ-1:1-2 ,1தெச-1:1 ,1தெச-3:1-7 

2தெச-1:1, பிலே-1:1-2, எபி-13:23 

ரோம-16:21





Post a Comment

0 Comments