யூனியா || அறிந்து கொள்வோம் பகுதி-72

அறிந்து கொள்வோம்

பகுதி-72


யூனியா (Jinias)


அன்றோனீக்கு, யூனியா இருவரும் பவுல் அப்போஸ்தலனோடுகூட ரோமாபுரியில் காவலில் வைக்கப்பட்டிருந்தார்கள் (ரோமர் 16:7).


யூதர்களாகிய இவர்கள் பவுலுக்கு முன்பாகவே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள்.இவர்கள் அப்போஸ்தலருக்குள் மிகவும் பெயர் பெற்றவர்களாக இருந்தார்கள்.


யூனியா என்பது ஒரு விசுவாசப் பெண் குறிக்கப்படுகிறது.அப்படியல் இந்தப் பெண்மணி அன்றோனீக்கேயின் மனைவியாகவோ அல்லது சகோதரியாகவோ இருக்கலாம்.


யூனியா ஒரு பெண் அப்போஸ்தலராக இருந்திருக்கலாம் என்பதே சிலருடைய கணிப்பாக இருக்கிறது. அப்படியானால் யூனியா புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்படும் ஒரே பெண் அப்போஸ்தலராக இருக்கிறாள்.


ஆனால் இந்த இருவரும் அப்போஸ்தலர்கள் இல்லை, இவர்கள் அப்போஸ்தலர்களால் நன்றாக அறியப்பட்டிருந்த விசுவாசிகளே என்றே பலரும் குறிப்பிடுகிறார்கள்.


எது எப்படியிருப்பினும் யூனியா பவுல் முன்னாகவே கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட விசுவாசியாக இருக்கிறாள். இவள் அநேகமாக பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமில் பேதுரு கொடுத்த வல்லமையான செய்தியைக் கேட்டு மனந்திரும்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


இவள் ரோமர் நிருபம் எழுதப்படுவதற்கு முன்பாக கி.பி. 55இல் தன் விசுவாசத்துக்காகச் சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறாள். ரோமாபுரிச் சபை பவுலால் உருவாக்கப்படவில்லை என்பதை நாம் அறிவோம்.யூனியா மற்றும் அன்றோனிக்கு போன்ற துவக்க கால விசுவாசிகளாலேயே இந்தச் சபை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.




Post a Comment

1 Comments