ஐபிராத்து நதி || அறிந்து கொள்வோம் || பகுதி -130 ||

அறிந்து கொள்வோம்


பகுதி -130


Euphrates

ஐபிராத்து நதி


(ஐபிராத்து என்பதற்கான கிரேக்க வார்த்தை "Eufratees")


மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நீளமான நதி.மெசொப்பொத்தாவில் இரண்டு பெரிய நதிகள் பாய்ந்து ஓடுகிறது அவற்றில் ஐபிராத்தும் ஒன்று.அர்மேனியா என்ற மலைப்பகுதியில் ஐபிராத்து நதி உற்பத்தியாகிறது.

அர்மேனியாவின் தற்கால பெயர் துருக்கி இங்கிருந்து தான் மேற்கு முகமாக மத்திய தரைக்கடலை நோக்கி இந்த நதி பாய்ந்து ஓடுகிறது.அதன் பின்பு தென்புறமாக திரும்பி சீரியா தேசத்தின் வழியாகபாய்ந்து,

தென்கிழக்காக ஆயிரம் மைல் ஓடி, அதன் பின்பு டைகிரீஸ் நதியோடு கலந்து பெர்சிய வளைகுடாவில் போய்ச்சேருகிறது.


ஐபிராத்து நதியின் நீளம் சுமார் 1780

மைலாகும். இந்த நதிதில் 1200 மைல் நீளத்திற்கு கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது.

இந்த நதிக்கரையில் பழங்காலத்து நாகரிகங்கள் ஏராளமாக தோன்றின என்று நம்பப்படுகிறது.

ஈராக் தேசத்தின் ஐபிராத்து நதிக்கரையோரத்தில் பழங்காலத்து பட்டணங்கள் பல புதையுண்டு உள்ளது.குறிப்பாக பாபிலோன், எரிது, கீஷ், லார்சா, நீப்பூர்,

சிப்பார்,ஊர்,போன்ற பட்டணங்கள்.


வேதாகமத்தில் ஐபிராத்து நதிக்கு பலவிதமான பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன:-

"the river Euphrates","the great river", 

"the river"ஏதேன் தோட்டத்தில் பாய்ந்து ஓடிய நான்கு நதிகளில் ஐபிராத்து நதியும் ஒன்று(ஆதி 2:14) இஸ்ரவேல் தேசத்தாருக்கு வாக்கு பண்ணின கானான் தேசத்தின் வடக்கு எல்லையில் ஐபிராத்து நதி அமைந்துள்ளது.(ஆதி 15:18)


இஸ்ரவேல் தேசத்தின் முற்பிதாக்கள் நதிக்கு இப்புறத்தில் குடியிருந்தார்கள்.(யோசு 1:2-3,14-15).

அங்கு அவர்கள் கர்த்தரை ஆராதிக்காமல் அந்நிய தெய்வங்களை ஆராதித்து வந்தார்கள். கர்த்தர் ஆபிரகாமை நதிக்கு அப்புறத்திலிருந்து அழைத்து வந்து கானான் தேசத்தில் கொண்டு வந்தார்.தாவீது ராஜா தன்னுடைய தேசத்தின் எல்லைகளை ஐபிராத்து நதிவரையிலும் விஸ்தாரிக்க முயற்சி பண்ணினார்.

ஐபிராத்து நதிக்கரையில் உள்ள கர்கேமிஸ் என்னும் இடத்தில் கிமு 605 -ல் பெரிய யுத்தம் ஒன்று நடைபெற்றது.இந்த யுத்தத்தில் யோசியா ராஜா மரித்துப்போனார்.

(2 நாளாக 35:20-24, வெளி 9:14,16:12).

Thanks to Good News......



Post a Comment

0 Comments