எச். எ. கிருஷ்ண பிள்ளை || மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு ||

மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு


எச். எ. கிருஷ்ண பிள்ளை

 H. A. Krishna Pillai


(கிறிஸ்தவ கம்பன்)

கிருஷ்ண பிள்ளை தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் கரையிருப்பு என்ற கிராமத்தில் 23-04-1827ஆண்டு  ஒரு இந்து வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்தார். அவர் தனது ஆரம்பக் கல்வியை தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியத்தில் பெற்றார்.பிறகு, தமிழ்நாட்டில் சாயர்பூரம் சென்று அங்குள்ள பிஷப்பான ராபர்ட் கால்டுவெல் அவர்களால் ஒரு தமிழ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.


சாயர்புரத்தில் பணிபுரிந்தபோது பிள்ளை  கிறிஸ்தவத்தின் உண்மையான ஆழத்தை உனர்ந்தார்.ஒரு முறை மிஷனரி, அவருக்கு புதிய ஏற்பாட்டை வழங்கப்பட்டது. அதைப் படிக்க முதலில் அவர் தயக்கம் காட்டினாலும்,மெதுவாக படிக்கத் தொடங்கியபோது,தேவனுடைய ஆவியானவர் அவருடைய இதயத்தில் ஆழமாக கிரியை செய்யத் ஆரம்பித்தார். இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்த அப்பெரிய தியாகம் அவரது வாழ்க்கையை மாற்றியது.இதன் விளைவாக அவர் மனந்திரும்பி தேவனுடைய பிள்ளையாக மாறினார்.பிறகு  சென்னையில் மைலாப்பூரில் உள்ள செயின்ட் தாமஸ் திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்றார். அப்பொழுது அவருக்கு ஹென்றி ஆல்பிரட் என்று  கிறிஸ்துவப் பெயர் வழங்கப்பட்டது.பின்னர் 1875-ம் ஆண்டில் திருநெல்வேலியில் உள்ள சர்ச் மிஷனரி சொசைட்டி (CMS) கல்லூரியில் தமிழ் பண்டிதராக அவர் நியமிக்கப்பட்டார்.

அவர் ஒரு கிறிஸ்தவராக மாறிய பிறகு கிறிஸ்தவ தமிழ் இலக்கியப் படைப்புகளில் கவனம் செலுத்தி இந்து வேதங்களில் கூறப்பட்ட விஷயங்களுக்கு ஒப்புமைக்கும் கிறிஸ்தவ எழுத்துக்களை எழுதுவதில் அவர் நன்கு அறியப்பட்டார்.அவர் எழுதிய பாமாலைகள் இன்றைக்கும் தமிழ் கிறிஸ்தவர்களிடையே பிரபலமாக உள்ளன.அவர் தனது காலத்தில் தெற்கு தமிழ்நாட்டில் பணியாற்றிய எட்வர்ட் சார்ஜென்ட், தாமஸ் வாக்கர் மற்றும் ஏமி கார்மைக்கேல் போன்ற மிஷனரிகளுக்கு தமிழ் மொழியைக் கற்பித்ததாகக் நம்பப்படுகிறது. அவர் ஓய்வு பெற்ற பிறகு 16 ஆண்டுகள் தமிழ் கவிதை புத்தகமான "இரட்சணிய யாத்திரிகம்" எழுதினார்.ஜான் பன்யன் எழுதிய "மோட்சப் பயணம்" என்ற தமிழில் மொழிபெயரப்பப்பட்ட "பில்க்ரிம்ஸ் ப்ரோங்ரெஸ்" புத்தகம் இதற்கு அடிப்படையாக இருந்தது. 1894ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் கவிதைகளில் ஒரு முக்கியமான படைப்பாக கருதப்படுகிறது.சிறந்த தமிழ் கவிஞர், கவிச்சக்ரவர்த்தி கம்பனின் எழுத்துக்களுடன் பொருந்திய இலக்கியப் படைப்புகளை கொடுத்ததினால்,கிருஷ்ண பிள்ளை 'கிறிஸ்தவ கம்பன்' என்றும் அழைக்கப்பட்டார்.தனது இலக்கிய திறமைகள் அனைத்து கர்த்தருக்காகப் பயன்படுத்தி அநேக காரியங்களை செய்த கிருஷ்ணபிள்ளை

03-02-1900ஆண்டில் மரித்து பரலோக வாசஸ்தலத்திற்கு புறப்பட்டார்.


பிரியமானவர்களே, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த திறமைகளை வளர்த்து, அவற்றை அவருடைய ஊழியத்திற்காக, பயன்படுத்துகிறீர்களா????





Thanks to Benjamin For Christ


Post a Comment

0 Comments