அறிந்து கொள்வோம் - பகுதி -100 || டெஃபிலின் (Tefillin)

 

அறிந்து கொள்வோம்

பகுதி -100


டெஃபிலின்

(Tefillin)

யூதர்கள் ஜெப வேளையில் பயன்படுத்தும் எபிரேய காகித தோல் சூருள்களைக் கொண்ட ஒரு ஜோடி கருப்பு தோல் பெட்டிகள் தான் இவை. இந்த சின்ன பெட்டிக்குள் தோராவின் வார்த்தைகள் அல்லது தேவனுடைய நியாயப்பிரமாண வார்த்தைகள் காகித துண்டில் எழுதி வைக்கப்பட்டு இருக்கும்.

✝️பெட்டிக்குள் இருக்கும் தேவனுடைய வார்த்தைகள் இவை:-

🔯யாத்திராகமம் 13:1-10,

🔯யாத்திராகமம் 13:11-16,

🔯உபாகமம் 6:4-9,

🔯உபாகமம் 11:13-21,

கையில் கட்டப்படும் பெட்டிக்கு (Shel yad)என்றும் தலையில் கட்டப்படும் பெட்டிக்கு (Shel rosh) என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். கை மற்றும் தலையைச் சுற்றி இதை அணிந்து ஜெபிக்கும் போது தங்களுடைய சிந்தனைகள் மற்றும் இருதயத்தை ஒன்றாக இணைப்பதாக கருதுகிறார்கள்.


🔯டெஃபிலினை பயன்படுத்தும்

முறைகள்:

ஒவ்வொரு யூதனும் தங்களுடைய காலை ஜெபத்தின் போது இந்த டெஃபினை அணிந்து ஜெபிப்பது அவர்களின் தலையாயக் கடமையாய் இருக்கிறது. இதை வாரத்தின் ஆறு நாட்களும் தங்களின் காலை ஜெப வேலைகளில் அணிந்து ஜெபிக்கிறார்கள். குறிப்பாக ஓய்வு நாள் மற்றும் பண்டிகை நாட்களில் அவர்கள் இதை பயன்படுத்துவதில்லை.

பெட்டியின் மேல் பகுதியில் ஷிப் என்கிறதான எபிரேய எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு பெட்டி மூன்று கிளை நாடாங்களுடன் மற்றொன்று நான்கு கிளை நாடாங்களுடன் இருக்கும்.


முதலில் தங்களின் ஜெப ஆடைகளை அணிந்த பிறகு தங்களின் டெஃபின் பெட்டியை எடுத்து வைத்துக்கொண்டு முதலில் தலையில் கட்டப் போகும் Shel rosh என்கிறதான பெட்டியை எடுத்து முத்தம் செய்த பிறகு கையில் கட்ட வேண்டியதான Shel yad என்ற பெட்டியை தங்களின் இருதயத்திற்கு அருகில் இருக்குமாறு தங்கள் கைகளில் கட்டி பின்பு நாடாவை கைகளில் சுற்றுவதற்கு முன்பு ஒரு ஜெபம் இப்படி செய்வார்கள்.

ஜெபம்:-

 எங்கள் தேவனே! இந்த முழு உலகத்தை ஆளுகிறவரே! உம்முடைய தெய்வீக கட்டளைகளால் எங்களை பரிசுத்தப்படுத்தி இந்த அணியும் படி எங்களுக்கு கட்டளை கொடுத்து, அருள் செய்ததற்காக உம்மை துதிக்கிறோம். ஆமென்.

இந்த ஜெபத்திற்குப் பிறகு தலையில் அணியக்கூடிய பெட்டியை சரியாக கண்ணுக்கு நடுவில் இருக்குமாறு அதை அணிந்து அதில் நாடாவை பின்னாக விட்டு விடுவார்கள். பின்பு கையில் கட்டப்பட்ட டெஃபிலினின் நாடாவை ஷின் என்ற எபிரேய எழுத்தின் உருவம் வரும்படி கட்ட வேண்டும். பின்பு ஏழு முறை முழங்கையில் அதை சுற்ற வேண்டும் இதை பொதுவாக குத்து விளக்கு கிளைகளை குறிக்கிறதாக சொல்லுகிறார்கள். அந்த நாடாவை கட்டுவதற்கு முன்பு ஒரு ஆசீர்வாதம் வார்த்தைகள் உண்டு, அதை சொன்ன பிறகு நடு விரலில் அதை மூன்று முறை கட்டுவார்கள்.மீதி இருக்கிறதை விரல்களில் சுற்றிக் கொள்வார்கள் இந்த நடு விரலில் கட்டுவது தேவனோடு உள்ள உடன்படிக்கையை அல்லது இணைப்பை கட்டுவதாக சொல்லப்படுகிறது. இதை கட்டி முடித்ததற்கு பின்பு தான் அவர்கள் ஜெபிப்பார்கள்.

தலையில் கட்டப்பட்ட பெட்டியின் பின்பகுதியில் டாலெத்- ד-dalet) என்கிற எழுத்து வடிவத்தையும் கைகளில் ஷின் -Shin ) வடிவத்தையும் விரல்களிலே சுற்றப்பட்டது Ayin என்கிறதான எபிரேய எழுத்துக்களையும் சொல்லுகிறது என்றும் இது el shaddai என்கிற தேவனின் நாமத்தை சொல்லுகிறதாக அவர்கள் கருதுகிறார்கள்.

🔯என் இதை பயன்படுத்தி ஜெபிக்கிறார்கள்:

🌾தேவனுடைய அன்பை நினைவு கூற வேண்டும் என்பதற்காக

🌾தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிய வேண்டும் என்பதற்காக,

🌾தேவனுடைய நியாயப்பிரமாணங்களாகிய 613 வார்த்தைகளை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக,

🌾தலையில் மூளைக்கு அருகில் அதை கட்டுவதால் தேவனுடைய வார்த்தைகளை எப்பொழுதும் சிந்தையில் கொண்டிருக்க வேண்டும் என்ற அடையாளத்திற்காக,

🌾 இந்த டெஃபிலினை அணிந்து ஜெபிக்கிற பொழுது தேவன் அவர்கள் அருகில் இருக்கிறதாக உணர்கிறார்கள்.





Notes Taken from 

Brother yakkov Ben Avraham




Post a Comment

0 Comments