மிஷனெரிகளின் வாழ்விலிருந்தது || I.R.H. ஞானதாசன் ||

மிஷனெரிகளின் வாழ்விலிருந்து……

பகுதி -1


I.R.H. ஞானதாசன்




மிஷனெரி தாகத்தை ஏற்படுத்துவோம்


ஓய்வு நாள் பள்ளி பிள்ளைகள் வசனத்தைக் கேட்பதிலும், செயல்படுத்துவதினும் அதிக வாஞ்சை உள்ளவர்கள்; கற்றுக் கொண்டதை செயல்படுத்த துடிப்பவர்கள்.


பேராயர் I.R.H.ஞானதாசன் இச்சிறுவர்களை தம் ஊழியத்தில் பயன்படுத்திய விதம் அனைவருக்கும் சிறந்த எடுத்துகாட்டாகும். அவர் ஓய்வு நாள் பள்ளிக்கூடத்தில் உள்ள "பிரைமரி" பிள்ளைகளுக்கு  "மிஷனெரி டேமியன் குடும்பம்" என்று பெயரிட்டார். இந்த பிள்ளைகள் தொழுநோயாளிகளை  தாங்கினர்கள்.குளச்சல் பகுதியில் உள்ள தொழுநோய் இல்லம் இவர்களால் குதூகலமானது.


"ஜூனியர்" மாணவர்களுக்கு "மிஷனெரி சத்தியா குடும்பம்" என்று பெயரிட்டார். இவர்கள் "பாப்புவா தீவில்" நடைபெற்ற ஊழியத்தை தாங்கி உற்சாகப்படுத்தினர்கள்.


"சீனியர்"மாணவர்களை “மிஷனெரி லீச் குடும்பம்" என்று அழைத்தார். இவர்கள் "நெய்யூர் மிஷன்"பணியை வளரச் செய்தனர்கள். 


இப்படி சிறுபருவத்திலேயே குழந்தைகளுக்கு மிஷனெரி தாகத்தை ஏற்படுத்தியவர் இந்த பேராயர் ஞானதாசன். பிள்ளைகளை நடக்க வேண்டிய வழியில் நடத்திக் காட்டினார்.

இவர் 18/04/1915 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் திட்டுவிளை  என்ற இடத்தில் பிறந்தார்.16/07/1973 ஆம் ஆண்டு மாரித்தார்.


1959ம் வருடம், திருவிதாங்கூர் பேராயம் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டபோது, குமரி திருச்சபையின் முதல் பேராயராக தனது 44வது வயதில் அபிஷேகம் செய்யப்பட்டார். இவர் பிரிவினைகளை அழித்து ஐக்கியத்தை உருவாக்கினார். ஒற்றுமையை நிலை நிறுத்தினார்.


1972 ம் ஆண்டு தென்னிந்திய திருச்சபைகளின் பிரதமப் பேராயராகவும் உயர்த்தப்பட்டார்.


வீண் ஆடம்பரம் இல்லாதவர், எளிமையானவர், பழகுவதற்கு இனிமையானவர், சமுதாய அக்கறையில் மிகுந்த ஈடுபாடு உடையவர். காது கேளாதவர். பார்வையற்றவர் போன்றவர்களுக்கு பள்ளிகளை ஏற்படுத்தினார். இவருடைய காலம் திருச்சபைகளின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.


மிஷனெரிப் பணியின் தாகம்  நமக்குள் கொழுந்துவிட்டு எரிய வேண்டும்….


"நான் பணி செய்யும் இடமும், என் ஊதியமும் கடவுள் நிர்ணயிப்பவை. அதில் என் சுயசித்தத்திற்கு இடம் இல்லை" என்று சொன்னவர் இவர்.






Post a Comment

0 Comments