ரோது தீவு - அறிந்து கொள்வோம் பகுதி-17


அறிந்து கொள்வோம்

பகுதி-17



ரோது தீவு 


 "ரோது"  என்றால் ''ரோஜா என்று அர்த்தமாகும்.


இது  ஆசியா மைனரின் மேற்குக் கரையில் மத்தியதரைக் கடலில் உள்ள ஒரு தீவாகும். இது கோஸ் தீவுக்கும் பத்தாராவுக்கும் நடுவில் இருக்கிறது. இது 75km நீளமும், 29km அகலமும் கொண்ட ஒரு முக்கியமான துறைமுகமாய் இருந்தது.


பவுல் அப்போஸ்தலன் தனது மூன்றாவது ஊழிய பயணத்தில் கிரேக்க நாட்டிலிருந்து சீரியாவிலுள்ள அந்தியோகியா வுக்குக் கடல் வழியாக பயணம் செய்தபோது இந்த தீவின் வழியாக தான் சென்றார்

(அப். 21:1).


ரோது தீவு பற்றி சில குறிப்புகள்


இந்த தீவு மத்திய தரைக்கடல் பகுதியில் மிகவும் முக்கியமான துறைமுகமாக இருந்தது.

இந்தத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹீலியோஸ் என்ற புறஜாதி தெய்வத்தின் கொலாசஸ் என்ற 100அடி உயரமான வெண்கலச் சிலை பழங்கால ஏழு அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டது. 

இந்த சிலையானது கி. மு. 290-ல் உருவாக்கப்பட்டது பின்பு கி. மு. 225 இல் ஒரு பூகம்பத்தின் போது விழுந்து விட்டது


இந்தத் தீவை சேர்ந்தவர்கள் தீரு பட்டணத்தோடு  வாணிபத்தில் தொடர்பு கொண்டிருந்தார்கள். (ஏசேக் 27:15 -இல் இவர்கள் தேதான் புத்திரர் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.


சிலுவைப்போரின் காலத்தில் இந்தத் தீவு போர் வீரர்கள் தங்கிச் செல்லும் இடமாக இருந்தது. இந்தத் தீவின் விரிகுடா பகுதி புனித பவுல் விரிகுடா என்று அழைக்கப்படுகிறது .

இந்தக் கடற்கரையில் பவுலின் நினைவாகக் கட்டப்பட்ட ஒரு

சிற்றாலயம் உள்ளது. 


இந்தத் தீவு கிரேக்க நாட்டின் கீழாக

1947ஆம் ஆண்டு வந்தது

21- ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கிரேக்க மொழி பேசும் 20 யூதர்கள் மட்டுமே இங்கே வாழ்ந்தார்கள்.

இப்போ கிரேக்கர்கள் அதிகமாக இருக்கிறார்கள்!...






Post a Comment

0 Comments