ரிம்மோன் - அறிந்து கொள்வோம் பகுதி -16

அறிந்து கொள்வோம்

பகுதி -16





ரிம்மோன்

 Rimmon


"ரிம்மோன்" என்றால் "மாதுளை"என்று பொருள்.


வேதாகமத்தில் இந்தப் பெயர் 4 விதவிதமான பயன்படுத்தபட்டுள்ளது


1.பட்டணத்தையும்,  இடத்தையும்

2. கன்மலையையும்,

3 .புறஜாதி தெய்வத்தையும், 

4. மனிதனையும்

இது குறிக்கிறது.


1.பட்டணம்/ இடம்


கானான் தேசம் பங்கிடப்பட்ட போது, யூதா கோத்திரத்துக்குக் கிடைத்த கடையாந்தரப் பட்டணங்களில் ஒன்றாகும் (யோசுவா 15:21, 32).


சில வேளைகளில் இதற்கு அருகிலுள்ள ஆயின் பட்டணமும், இதுவும் சேர்த்து ஆயின்-ரிம்மோன் என்று அழைக்கப்படுகின்றன. மாதுளம்பழ ஊற்று என்பது இதன் அர்த்தமாகும்.இப்போது இந்தப் பட்டணம் உமர்ருமாமின் என்று அறியப்படுகிறது. இது எபிரோனுக்கு தென்மேற்கே 13 மைல் தொலைவில் இருக்கிறது.


ரிம்மோன் பேரேஸ்


இஸ்ரவேலர் கானான் தேசத்தை நோக்கி பயணம் சென்ற வேளையில் அவர்கள் ரிம்மோன் பேரேஸ் என்ற இடத்தை கடந்து வர வேண்டியிருந்தது (எண். 33:20).


2.கன்மலை


இது மற்ற கோத்திரத்தாரிடம் போர் உண்டான போது பென்யமீன் கோத்திரத்தார் அடைக்கலமாக ஓடிச்சென்ற கன்மலையாகும் (நியா. 10:45). 


600 பேர் ரிம்மோன் கன்மலையில் நான்கு மாத காலம் ஒளிந்திருந்தார்கள். இப்போது ரிம்மோன் என்ற பெயரில் ஒரு மலையோர கிராமம் இருக்கிறது. ஆயி பட்டணம் இதற்கருகில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.


3.புறஜாதி தெய்வம்


சீரியர்களின் தெய்வம் இது

சீரியர்களின் தளபதி எலிசாவின் சொற்படி தொழுநோய் நீங்கிக் குணமடைந்த பிறகு, தான் தனது ராஜாவைத் தன் கையில் தாங்கி, தமஸ்குவில் இருக்கும் ரிம்மோனின் கோவிலுக்குச் செல்லும் வேளையில் பணிந்து கொள்ள வேண்டியிருக்கும் என்று சொல்லி, அதற்காக தன்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டான் (2 இரா.5:18)

எலிசா "சமாதானத்தோடே போ”

 என்றார். 


அசீரியர்கள் ரம்மானு என்ற தெய்வத்தை மழைக் கடவுளாக வணங்கி வந்தார்கள்.


4.மனிதன்


சவுலின் படைத்தலைவர்களாய்

இருந்த பானா, ரேகாப் இவர்களின் தகப்பனின் பெயரும் ரிம்மோன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவன் ஒரு பேரோத்தியனாவான் (2 சாமு. 4:2).









Post a Comment

0 Comments