ஸ்கேவாவின் குமாரர்கள் (யூதா மந்திரவாதிகள்)

 அறிந்து கொள்வோம்

குதி -15


ஸ்கேவாவின் குமாரர்கள்

(யூதா மந்திரவாதிகள்)




அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிவர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள் மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் பெயரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். என்றார்கள் .


பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழு பேர் இப்படி செய்தார்கள்

 (அப் 19:13-14)



தேவன் பவுலின் கைகளினாலே விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளுகிறார். அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் வியாதிக்காரர் மேல்' போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின. பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன. இந்தச் சம்பவத்தை தேசாந்திரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் கவனித்துப் பார்க்கிறார்கள். இவர்களும் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை சொல்லத் துணிகிறார்கள். “பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் பெயரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்"

என்று பிசாசுகளுக்குக் கட்டளைகொடுக்கிறார்கள்.


இவர்கள் தேசாந்திரிகளாய்த் திரிகிறவர்கள். யூதர்களாகயிருந்தாலும் மந்திரவாதிகளாகவும் இருக்கிறார்கள். தங்களுடைய மந்திரவாதத்திற்கு இயேசுகிறிஸ்துவின் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் யூதர்கள் மத்தியிலும் புறஜாதியார் மத்தியிலும் மந்திரம் ஓதி, அவர்களுடைய வருங்காலங்களைச் சொல்லுவார்கள், சாபங்களை நீக்குவதற்கும், வியாதிகளைக் குணப்படுத்துவதற்கும், பிசாசுகளைத் துரத்துவதற்கும் மந்திரம் ஓதுவார்கள். இந்த மந்திர வித்தையை இவர்கள் சாலொமோன் ராஜாவினிடத்தில் கற்றுக்கொண்டதாகப் பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள். இயேசுகிறிஸ்து இந்த மந்திரவாதிகளைப்பற்றிச் சொல்லும்போது "

உங்கள் பிள்ளைகள் அவர்களை யாராலே துரத்துகிறார்கள்" என்று கேட்கிறார் (மத் 12 :27)


தேசாந்திரிகளாய்த் திரிகிற

மந்திரவாதிகள் பொல்லாத ஆவிகளைத் துரத்துவதற்கு முயற்சி செய்த ஒரு சம்பவம் இங்கு எழுதப்பட்டிருக்கிறது.


எபேசு பட்டணத்தில் ஸ்கேவா என்னும் பெயருள்ள பிரதான ஆசாரியன் ஒருவன் இருக்கிறான். இவன் ஒரு யூதன். இஸ்ரவேலின் இருபத்துநான்கு ஆசாரிய வகுப்புக்களில் இவன் ஒரு தலைவன். தேவாலயத்தில் வகுப்புக்குத் பணிவிடை செய்கிறவன். ஆனால் இக்காலத்தில் தேவாலயத்தில் ஆவிக்குரிய ஆராதனையோடு, மந்திரவாதமும் சேர்ந்திருக்கிறது. அதை பிரதான ஆசாரியனுடைய குமாரர்களே செய்கிறார்கள்.


கோவாவுக்கு ஏழு குமாரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பிசாசு பிடித்தவர்கள் இடத்தில் போய், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத்துணிந்து, "பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் பெயரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்று இயேசுவின் பெயரையும் பவுலின் பெயரையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த பொல்லாத ஆவிகளோ இவர்களுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவில்லை. தாங்கள் பிடித்திருந்த மனுஷரைவிட்டு புறப்பட்டுப்போகவில்லை.


அதற்குப் பதிலாக ஸ்கேவாவின் குமாரரிடத்தில் ""இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார்' என்று எதிர்த்துப் பேசுகிறது. அத்தோடு நிற்காமல் பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்கிறான். அப்பொழுது அவர்கள் நிர்வாணிகளும், காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டைவிட்டு ஓடிப்போகிறார்கள்.


இயேசுகிறிஸ்து ஊழியம் செய்தபோது, அவரைப் பின்பற்றாத ஒரு சிலர் இயேசுவின் நாமத்தில் பிசாசுகளைத் துரத்தினார்கள். அப்போது யோவான் அவரை நோக்கி

 “ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனே உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம்' என்றான். அதற்கு இயேசு "தடுக்கவேண்டாம். நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான்' என்றார் (லூக் 9:49) 


இவர்களைப்போலவே இயேசுவைப் பின்பற்றாத அநேகர், தங்களுடைய சுயபெருமைக்காக, சுயலாபத்திற்காக, இயேசுவின் நாமத்தைப் பயன்படுத்துகிறார்கள். தங்களுடைய துன்மார்க்கமான மந்திரவாத வேலைகளுக்கு, இயேசுவின் நாமத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு சுயஆதாயம் தேட முயற்சிபண்ணுகிறார்கள்.


ஸ்கேவாவின் குமாரர் பொல்லாத ஆவிகள் பிடித்தவனிடத்தில் “பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் பெயரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்று சொல்லுகிறார்கள். ஆனால் அந்தப் பிசாசோ பவுலையும் அறிந்து வைத்திருக்கிறது. இயேசுவையும் அறிந்து வைத்திருக்கிறது. ஸ்கேவாவின் குமாரர்களையும் அறிந்து வைத்திருக்கிறது. பொல்லாத ஆவிகள் புறப்பட்டுப் போவதற்குப் பதிலாக, ஸ்கேவாவின் ஏழுகுமாரரையும் துரத்திவிடுகிறது. அவர்களும் நிர்வாணமாய் ஓடிப்போகிறார்கள். இவர்கள் பிசாசைத் துரத்தும்போது, பவுல் பிரசங்கிக்கிற இயேசுவை நாங்கள் நம்புகிறோம் என்றோ, அந்த இயேசுவை நாங்கள் சார்ந்திருக்கிறோம் என்றோ சொல்லவில்லை.


"ஸ்கேவா" என்பவன் ஒரு பிரதான ஆசாரியன். எபேசுவிலுள்ள யூதருடைய ஆலோசனைச் சங்கத்தின் ஒரு உறுப்பினர்.


*நாம் பிசாசுக்கு எதிர்த்து 

நின்றால் அவன் நம்மைவிட்டு ஓடிப்போவான். நாம் 

அவனுக்கு எதிர்த்து

நிற்கும்போது இயேசுகிறிஸ்துவில் விசுவாசத்தோடு இருக்க வேண்டும். 

நமக்குள் சத்தியமும் ஜீவனும் இருக்கவேண்டும். இயேசுவின் பெயரை ஒரு மந்திரவார்த்தைபோல பயன்படுத்தினால், அதனால் ஒரு பிரயோஜனமும் உண்டாகாது. இயேசுவின் பெயரை மந்திர வார்த்தை போல சொல்லி பொல்லாத ஆவிகளை துரத்த முடியாது. பொல்லாத ஆவிகள் நம்மை துரத்திவிடும்.






Post a Comment

0 Comments