திறன்னுவின் வித்தியாசாலை அறிந்து கொள்வோம் பகுதி -14

அறிந்து கொள்வோம்

பகுதி -14



திறன்னுவின் வித்தியாசாலை


சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்த போது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையில் அநுதினமும் சம்பாஷித்து கொண்டு வந்தான் 

(அப் 19:9).


பவுல் எபேசுவிலுள்ள ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, மூன்று மாதமளவும் தைரியமாய்ப் பிரசங்கிக்கிறார். ஜனங்களுக்குப் புத்தி சொல்லிக் கொண்டு வருகிறான். அவனுடைய பிரசங்கத்தைக் கேட்டு ஒரு சிலர் இரட்சிக்கப்படுகிறார்கள். இயேசுகிறிஸ்துவே கர்த்தரென்று விசுவாசிக்கிறார்கள். வேறு சிலரோ தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி அவிசுவாசிகளாகிறார்கள். இவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கும், அவருடைய சுவிசேஷத்திற்கு எதிர்த்து நிற்கிறார்கள்.


பவுல் மூன்று மாத காலமாக பிரசங்கம் பண்ணி சுவிசேஷ செய்தி ஜனங்களுடைய இருதயத்திற்குள் பிரவேசித்திருக்கிறது. அவர்களுடைய மனசாட்சியோடு பேசுகிறது. அதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஒரு சிலர் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள். வேறு சிலரோ தங்கள் இருதயத்தையும் மனச்சாட்சியையும் கடினப்படுத்தி, சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துவிடுகிறார்கள்.

இயேசுவே கிறிஸ்து என்று விசுவாசியாமற்போகிறார்கள். இவர்களுடைய அவிசுவாசம் இருதய கடினத்தினிமித்தமாய்

உண்டாயிற்று.


ஒரு சிலர் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு. இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது, அவிசுவாசிகளுடைய மனதில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அவர்களுடைய மனதைக் குழப்ப விரும்புகிறார்கள். 

ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தையும், அவருடைய மார்க்கத்தையும் நிந்திக்கிறார்கள். இந்த நிந்தனையைக் கேட்டு ஏற்கெனவே விசுவாசிகளாக இருக்கிறவர்கள்,

தங்கள் விசுவாசத்தை விட்டுவிட்டு, மறுபடியும் யூதமார்க்கத்திற்குத் திரும்பி வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் மார்க்கத்தில் இவர்களால் தவறு ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையினால் தங்கள் பொல்லாத வார்த்தைகளினால் கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும், மார்க்கத்தையும் நிந்திக்கிறார்கள்.


பவுல் எல்லா எதிர்ப்புக்களையும், நிந்தனைகளையும் சகித்துக்கொண்டு, ஜெப ஆலயத்தில் மூன்று மாதமளவும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தைரியமாய்ப் பிரசங்கித்து வருகிறான். கிறிஸ்துவின் மார்க்கத்திற்கு விரோதமாக அவிசுவாசிகளின் நிந்தனையான வார்த்தைகள் அதிகரிக்கிறது. இவர்கள் மனந்திரும்புதலை விரும்பவில்லை. தாங்கள் போதிக்கப்படுவதை வெறுக்கிறார்கள். 

பவுல் இவர்களுக்கு பிரசங்கம் பண்ணும்போது, அவனுடைய பிரசங்கத்தைக் கேட்காமல் அவனையும், அவன் பிரசங்கிக்கிற சுவிசேஷச் செய்தியையும் நிந்திக்கிறார்கள். இதற்கு மேல் அவர்களோடு

போராட மனதில்லாமல், 

பவுல் ஜெப ஆலயத்தில் உள்ள

யூதர்களைவிட்டு விலகி, சீஷர்களை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, 

திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலைக்குப் போகிறான்


அங்கு அனுதினமும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சம்பாஷித்துக்கொண்டு வருகிறான். பவுல் ஜெப ஆலயத்தில் இருந்து பிரிந்து போனதால், ஊழியத்தில் இரட்டிப்பான நன்மை உண்டாயிற்று.


1. ஜெப ஆலயத்தில் வாரம் ஒருமுறை, ஓய்வுநாளில் மாத்திரமே பிரசங்கம் பண்ண முடியும் (அப் 13:43). 

ஆனால் திறன்னுவின் வித்தியாசாலையில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அனுதினமும் சம்பாஷிக்க வாய்ப்புண்டாயிற்று.


2. ஜெபஆலயத்தில் யூதர்களும், யூதமார்க்கத்தை ஏற்றுக்கொண்டவர்களும் மாத்திரமே வருவது வழக்கம். புறஜாதியார் யூதருடைய ஜெபஆலயத்திற்கு வர அனுமதியில்லை.

 திறன்னுவின் வித்தியாசாலையில் யூதரும் வரலாம், புறஜாதியாரும் வரலாம். பவுல் இங்கு ஊழியம் செய்யும் போது யூதரும் கிரேக்கரும் ஆகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்கிறார்கள் 

(அப் 19:10).


திறன்னுவின் வித்தியாசாலை பற்றிய வேத பண்டிதர்களின் கருத்துக்கள்


*இது யூதருடைய மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கும் பாடசாலை என்றும், இங்கு பழைய ஏற்பாட்டு ஆகமங்களைக் கற்றுக் கொடுப்பார்கள் என்றும்  சிலர் சொல்கிறார்கள். 

அடிப்படையில் இது

யூதருடைய மார்க்க பாடசாலை

என்பது அவர்களுடைய கருத்து. 

பெரிய பட்டணங்களில் யூதருக்கு ஜெப ஆலயமும் அத்துடன் இதுபோன்ற பாடசாலையும் இருக்கும். இதை

யூதர்கள் ''பெத்மித்ராஸ் என்பார்கள்


திறன்னுவின் வித்தியாசாலை

பற்றி வேறு சிலரின் கருத்து


*இது புறஜாதியாரின் தத்துவ பாடசாலை என்று சொல்கிறார்கள். இது திறன்னு என்பவருக்குச் சொந்தமான இடம் என்றும். பவுலுடைய ஊழியம் நடைபெறுவதற்கு திறன்னு தன்னுடைய வித்தியாசாலையில் இடம் கொடுத்தான் என்றும் . சீஷர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அவருடைய வித்தியாசாலைக்கு வந்து, 

பவுலின் பிரசங்கத்தைக் கேட்கிறார்கள். திறன்னு ஒருவேளை பவுல் மீதுள்ள அன்பினால் அல்லது பவுல் இடத்தில் வாடகை பணத்தை

வாங்கிக்கொண்டு, தன்னுடைய வித்தியாசாலையில் பவுலின் 

ஊழியம் நடைபெறுவதற்கு அனுமதி கொடுத்திருக்கலாம்.

என்கிறார்கள்.


திறன்னு ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியராய்  இருந்து இருக்க

வேண்டும் அவன் பள்ளிக்

கூடத்து ஆசிரியராய்

இருந்தால் அந்தப் பள்ளிக்கூடம்

அவன் வீட்டில் ஓர் அறையாய் இருந்திருக்க இருக்கும்.

ஆதலால் வன் கிறிஸ்தவனோ இல்லையோ என்பதைப் பற்றித் தெரியாவிட்டாலும் இவன் கிறிஸ்தவர்களுக்குச்

சத்துரு அல்ல என்பது நிச்சயம்.








Post a Comment

0 Comments