தீக்கோழி அறிந்து கொள்வோம் பகுதி -25

அறிந்து கொள்வோம்

பகுதி -25


தீக்கோழி

நெருப்புக்கோழி

(Ostrich)

 

தீக்கோழி குறித்து 

தமிழ் வேதாகமத்தில்

(லேவி.11:16;

உபா.14:15; புல.4:3; யோபு 39:13)

ஆகிய இந்த வசனங்களில் தீக்கோழி என்னும் சரியான பதத்தை நம்மால்  காண முடியும்.

ஆனால் இந்த குறிப்பிட்ட வசனங்கள் - யோபு 30:29; ஏசா.13:21, 34:13, 43:20; எரே.50:39; மீகா 1:8 ல்- நம் வாசிக்கிறது என்ன "கோட்டான்" அல்லது "ஆந்தை" என்று ஆனால்  "கோட்டான்" மற்றும் "ஆந்தை" என்ற வார்த்தைக்கு பதிலாக தீக்கோழி என்ற பதம் இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள் வேத பண்டிதர்கள்.

சில ஆங்கில வேதகமாத்தில் சரியாக தீக்கோழி

(Ostrich) என்று இருக்கிறது.


ஆப்பிரிக்கா கண்டத்திலும் அரபி தேசத்திலும் சீரியாவுக்குத் தென் கிழக்கில் உள்ள வனாந்தரங்களிலும் இந்த  தீக்குருவிகள் இருக்கின்றன. பெண் தீக்குருவி தன் முட்டைகளைப் பற்றி கவனிக்கிற தில்லை என்று யூதர்கள் நினைத்தார்கள். யோபு 39:15. 


ஆனால் இந்தத் தீக்குருவியின் இயல்பைப் பற்றி படித்த அநேகர் இப்படியாக சொல்லி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண் குருவிக்கும் மூன்று அல்லது நாலு பெண் குருவிகள் இருக்கும் என்றும் அவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வனாந்தரத்திலுள்ள மணலில் பள்ளந்தோண்டும் என்றும் பெண் குருவிகள் முப்பது அல்லது நாற்பது முட்டைகளை அந்த ஒரே குழியில் இட்டு, 

அத்தேசங்களில் போதிய சூரிய உஷ்ணம் இருக்கிறபடியினால், 

அந்த முட்டைகளைப் பகலில் அடைகாக்காமல், மணலை 

அந்த பள்ளத்தில் தள்ளி மூடிவிட்டு இரவுதோறும் அந்த மூன்று( பெண் + ஆண்) அல்லது நாலு கோழிகளும் மாறி மாறி அந்த முட்டைகளுக்கு குளிர் வராதபடி அவற்றை அடைகாக்கும்.


  • நெருப்புக்கோழி பறவை இனங்களில் மிகப்பெரிய உயிரினம். நெருப்புக்கோழி நீண்ட கழுத்தையும், கால்களையும் கொண்டவை. 



63 kg முதல் 145 kg  எடை கொண்டது இது,நெருப்புக்கோழி சுமார் 2.5 மீட்டர் அதாவது, 8 அடி வரை உயரமாக வளரக்கூடிய பறவை.


நெருப்புக்கோழி ஓட்டம்

மணிக்கு 70 கிமீ (43 மைல்) வேகத்தில் ஓடக் கூடியவை. தொடர்ச்சியாக 45 நிமிடம் வரை ஓடக்கூடியது. சிறிய உடலமைப்பு உள்ள மனிதர்கள் சவாரி செய்ய கூடிய அளவுக்குத் தீக்கோழிகள் பெரியவையாகும். வட ஆப்பிரிக்கா மற்றும் அரேபியாவின் சில பகுதிகளில் இவை ஓட்டப்பந்தயங்களில் பயன்படுத்தப்பட்டன. ஒரு மாத வயது உள்ள நெருப்புக்கோழி மணிக்கு 55 கிமீ (35 மைல்) வேகத்தில் ஓடக் கூடியவை.


  • நெருப்புக் கோழியின் இறகுகள் அலங்காரப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் தொப்பியில் அலங்காரம் செய்யப்படுகிறது.


நெருப்புக் கோழியின் கால்கள் மிகவும் நீண்ட அளவுடையது. பயமுறுத்தப்பட்டால், தீக்கோழி தனது வலுவான கால்களால் உதைத்து, கடும் காயத்தை உண்டாக்கக்கூடியது. நெருப்புக்கோழிகளின் கால்களில் 2 விரல்கள் மட்டும் இருக்கும்.


  • தீக்கோழிகள் தான் முட்டைகளை அடைகாத்து

குஞ்சு பொரிக்க 42 முதல் 46 நாட்கள் ஆகலாம். பறவையினங்களில் தீக்கோழிகளின் முட்டைகளே உலகில் பெரிய முட்டைகளாகும். ஒரு முட்டை 1.4 kg எடையும் 15 செ.மீ அளவும் கொண்டது.



நெருப்புக்கோழி 40- 45 ஆண்டுகள் வரை வாழும். இன்றும் ஆப்பிரிக்காவின் வறண்ட, சூடான வனப் பகுதிகளில் வாழ்கின்றன.


  • தீக்கோழிகளுக்கு பற்கள் இல்லை. எனவே உணவை அரைத்து உண்பதற்காக கூடவே கற்களையும் விழுங்குகிறது. தாவரங்கள், விலங்குகள், கிழங்கு வகைகள், இலைகள், பழங்கள், கொட்டைகள்,வெட்டுக்கிளி, பூச்சிகள், பாம்புகள், பல்லிகள், ஊர்வன இனங்களை நெருப்புக் கோழி விரும்பி சாப்பிடும். தண்ணீர் தேவைப்படுவதில்லை தாவரங்களிலிருந்து தண்ணீரை எடுத்துக் கொள்கிறது.


தீக்குருவிகள் தங்கள் செட்டையை அசைவாடி ஓடுகிற வேகமான ஓட்டத்தையும் அவைகள் 

அலறுகிற துக்கமான சத்தத்தையும் பற்றி வேதாகமத்தில்

சொல்லியிருக்கிறது. 

(யோபு 39:13, 18; மீகா 1:8)


  •  யூதார்கள் அதன் இறைச்சியை புசிக்கிறதில்லை

(லேவி.11:16; உபா.14:15)





Post a Comment

2 Comments