வாற்கோதுமை - அறிந்து கொள்வோம் பகுதி -24

 அறிந்து கொள்வோம்

பகுதி -24


வாற்கோதுமை 




வாற்கோதுமை என்பது பார்லி என்றழைக்கப்படும் தானியம்

பழைய காலத்திலிருந்தே மக்கள் வாற்கோதுமை தானியத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். சுமேரியர்களின் சிற்பங்களில் வாற்கோதுமை பயிரைக் நம்மால் காண முடியும்.


இது எகிப்திய மற்றும்  பாலஸ்தீனத்தில் தேசத்தில் அதிகமாக விளைவிக்கப் பட்டன. (யாத். 9:31,லேவி. 27:16, உபா. 8:8).


கானான் தேசத்தை குறித்து

 "அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ் செடிகளும் உள்ள தேசம், அது ஒலிவமரங்களும், எண்ணெயும் தேனும் உள்ள தேசம்,” என்று சொல்லப்பட்டிருக்கிறது.


எகிப்தில் தேவன் அனுப்பிய வாதையாகிய கல் மழையால் வாற்கோதுமை பயிர் அழிக்கப்பட்டது (யாத். 9:31).


யாத்திராகம நாட்களில் ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கும் நிலம் 50 வெள்ளி சேக்கல் மதிக்கப்பட்டது (லேவி. 27:16).


சில குறிப்புகள்


வாற்கோதுமை முதலில் குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் கொடுக்கப்படும் தீவனமாக இருந்தது (1 இரா. 4:28).


  • பிறகு ஏழைகள் அதை உணவாக உட்கொள்ள துவங்கினார்கள் (நியா. 7:13; 2 இரா. 4:42). 


இந்த வாற்கோதுமை அப்பங்களாக சுடப்பட்டு உண்ணப்பட்டது. 


  • ஒரு படி கோதுமையின் விலையில் மூன்று படி வாற்கோதுமை கிடைத்தது

 ( வெளி. 6:6). 


ஒரு மரக்கால் கோதுமை மாவின் விலையில், இரண்டு மரக்கால் வாற்கோதுமை மாவு கிடைத்தது 

( 2 இரா. 7:1).


  • ஏப்ரல் மாதத்தின் மத்தியில், பஸ்கா பண்டிகை காலத்தில் வாற்கோதுமை பயிர் முதல் அறுவடை காலம் வருகிறது

 (ரூத் 1:22; 2 சாமு. 21:9).


இது கோதுமை அறுவடைக்கு முன் வருவதாகும். இஸ்ரவேல் மக்களின் மத்தியில் வாற்கோதுமை, கோதுமை, திராட்சை அறுவடைகள் மூன்றும் முக்கியமானவை யாகும்!


  • ரூத் கோதுமை மற்றும் வாற்கோதுமை அறுப்பின் போது சிந்திய கதிர்களை வீட்டுக்கு உணவாகக் கொண்டு வந்தாள் 

(ரூத் 2:23).


தாவீதும் அவரோடு இருந்தவர்களும் சாப்பிடுவதற்கு மற்றப் பொருள்கள் கூட வாற்கோதுமையும் கொண்டு வரப்பட்டது (2 சாமு. 17:28).


  • அப்சலோம் தாவீதின் சேனாபதியாகிய யோவாபின் வாற்கோதுமை வயலைத் தீயிட்டுக் கொளுத்தும்படி செய்தான் 

(2 சாமு. 14:30). யோவாப் தன்னிடம் வரவழைக்கவே அவன் இப்படிச் செய்தான்.


அம்மோன் புத்திரர் யூதாவின் ராஜாவாகிய யோதாமுக்கு வெள்ளியோடுகூட கோதுமையையும், வாற்கோதுமையையும் கப்பமாகக் கட்டினார்கள் (2 நாளா. 27:5).


  • காதுமையும் வாற்கோதுமையும் எண்ணெயும் தேனும் விலைமதிப்புள்ளவையாக இருந்தபடியால் புதையல்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றன 

(எரே.45:8). 


எலிசா தீர்க்கதரிசி 20 வாற்கோதுமை அப்பங்களைக் கொண்டு நூறு பேருக்கு உணவளித்தார், மீதியும் இருந்தது

(2 இரா 4:42-44)


  • (யோவான் 6:9 -ல்

 இயேசு ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவளித்தார் மீதியான துணிக்கைகள் 12 கூடைகளில்

நிரப்பப்பட்டன.


கிதியோன் மீதியானியரின் பாளையத்தை வேவு பார்க்கப் போன போது, ஒருவன் மற்றவனிடம் சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டு வந்தது, அது கூடாரம் மட்டும் வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப் போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது” என்று தான் கண்ட கனவைப் பற்றி கூறினான் (நியா. 7:13).

 மற்றவன் இது கிதியோனின் பட்டயம் என்று பதிலளித்தான். தேவன் அவர்களைத் தங்களிடம் ஒப்புக்கொடுப்பார் என்று கிதியோன் நம்பிக்கை பெற்றான்!




Post a Comment

0 Comments