பாசான் அறிந்து கொள்வோம் பகுதி -26

அறிந்து கொள்வோம்

பகுதி -26


பாசான் 

(Bashan)


பாசான் கலிலேயாக் கடலுக்குக் கிழக்கே இருக்கும் ஒரு நாடு. இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்திலிருந்து வரும் போது,

ஓகூ என்பவன் அந்த பச்சானுக்கு ராஜாவாய் இருந்தான். 

(எண்.21:33;உபா.29:7)


யோர்தானுக்கு கிழக்கே இருக்கிற மனாசேயின் பாதிக் கோத்திரத் துக்குப் பாசான் தேசம் பங்கிடப்பட்டு இருந்தது. 

இதில் இரண்டு ஊர்கள் லேவியர்களின் அடைக்கல பட்டிணமாய் கொடுக்கப்பட்டது. (யோசு.21:27) 


சீரிய ராஜாவாகிய ஆசகேல் 

ஏகூ இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த காலத்தில்  இந்த பாசான் தேசத்தைப் பாழாக்கினான்.

 (2 இரா.10:32-33)


இந்தத்  பாசான் தேசம் உயர்ந்த மலையின் மேல் இருந்தது. சங்.68:15.


பாசான் தேசத்தில் உள்ள  கர்வாலி மரங்கள் மிகப் பெரிதாய் இருந்தது.

(ஏசா.2:13; எசே.27:6; சக.11:2).


இங்கு வளரும் மாடுகளும், வெள்ளாட்டுக்கடாக்களும் பெரியவைகளாய் இருந்தன.

உபா.32:14; எசே.39:18. 


பாசானிலுள்ள எருதுகள் கொடூரத்துக்கும் அநியாயத் துக்கும் உவமைகள்.

 சங்.22:12. ஆமோஸ்.4:1. 


பாசானில் உள்ள அடைக்கலப்பட்டணங்களில் ஒன்றாகிய கோலான் ஒரு விசேஷித்த ஊர்.

உபா.4:42-43.



Post a Comment

2 Comments