பிசீதியா அறிந்து கொள்வோம் பகுதி -27

அறிந்து கொள்வோம்

பகுதி -27


பிசீதியா


(Pisidia)


சின்ன ஆசியாவின் தென்கரையில் பம்பிலியா என்னும் நாடு இருந்தது. அந்த நாட்டுக்கு வடக்கே 120 மைல் நீளமும் 50 மைல் அகலமும் உள்ள ஒரு மலைநாடு இருந்தது அதன் பெயர் தான் பிசீதியா. பவுலின் ஊழிய காலத்தில் தான்  இம்மலை நாட்டுக்குப் பிசீதியா என்று பெயர் வழங்கப்பட்டது,இங்கு வாழ்ந்து வந்த மக்கள் நாகரீகமற்றவர்களும் கள்ளர்களுமாய் இருந்தார்கள், 


பிசீதியாவிவின் வடக்கு பகுதியில் அந்தியோகு என்ற பட்டினம்  இருந்தது. இங்கு கி மு.25 ல்  அகுஸ்துராயன் பிசீதியாவிலுள்ள கள்ளர்களை ஜெயிக்கும் படி இந்த அந்தியோகுப் மற்றும் லீஸ்திரா  இன்னும்  சில பட்டினங்களில்  கோட்டைகளைக் கட்டி கள்ளர்களின் தாக்குதலுக்கு மக்களை கைப்பற்றினான்.


ஆனால் கிபி. 74ம் வருடங்களில் இந்த ஜனங்கள் நாகரிகத்தில் கொஞ்சம் தேறினவர்களாய் இருந்தார்கள் என்று பண்டிதர்கள் சொல்கிறார்கள். 


பவுலின்  ஊழிய பயணத்தில் இத்தேசத்தில் வழியாய் பிரயாணம் பண்ணுவது மிக அபாயகரமாய் இருந்தும்  பவுலும் பர்னபாவும் தாங்களின்  முதல் சுவிசேஷப் பயணத்தில் இதன் வழியாய் இரண்டு தடவை கடந்து போனார்கள். 

(அப்.13:13, 14:24)


ஒருவேளை பவுல் கள்ளரால்

 தனக்கு  வந்த மோசத்தை குறித்துப் பேசும் போது, பிசீதியா நாட்டாரால் தனக்கு நேரிட்ட மோசத்தை குறித்து சொல்லி இருக்கலாம். 

(2 கொரி.11:26).





Post a Comment

2 Comments