வெள்ளைப்போளம் அறிந்து கொள்வோம் பகுதி - 28

அறிந்து கொள்வோம்

பகுதி - 28


வெள்ளைப்போளம் 

(Myrr)


யாத் 30:23-ல் இது முதன்முறையாக குறிப்பிடப் படுகிறது. ஆசரிப்புக் கூடாரத்தில் சுத்தமான அபிஷேக தைலம் தயாரிக்க இந்த வெள்ளைப்போளமும் பயன்படுத்தப்பட்டது.

இது ஒரு வாசனை பொருள்.


இயேசுவுக்கு காணிக்கை


கிழக்கேயிருந்து இயேசுவைக் காண வந்த சாஸ்திரிகள் பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள் (மத். 2:11).


பொதுவாக இந்த வெள்ளைப்போளம் மரித்த சரீரத்தைப் பதப்படுத்த தடவப்படுகிறபடியால்,சாஸ்திரிகள் 

இயேசுவுக்கு கொடுத்த வெள்ளைப்போளத்தை 

பாடுகளுக்கு, துக்கத்துக்கும் அடையாளமாக கருதுகிறார்கள்.

இயேசு பாடுபட்டு மரிக்க போவதை குறித்து  இது முன்னமே அறிவித்தது என்கிறார்கள், இது அவருடைய மனிதத் தன்மைக்கு அடையாளமாக இருக்கிறது.


பொன் (தங்கம்) அவர் ராஜாதி ராஜாவாக ஆகப் போவதை குறித்து முன்னறிவிக்கிறது. தூபவர்க்கம் அவருடைய தெய்வத் தன்மையை குறிக்கிறது.


இதன் பயன்கள்


 இயேசுவின் சரீரம் அடக்கம் பண்ணபடுவதற்காக ஆயத்தப் பட்டபோது, நிக்கொதேமு வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டு வந்தான்.

 (யோவான் 19:39).


வெள்ளைப்போளத்தைலம் வாசனைத் திரவியமாகவும் பயன்படுத்தப்பட்டது.

(எஸ்தர். 2:12). 


ஆடைகளில் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை தெளிக்கப்பட்டது.

 (சங். 45:8). 


இவைகளைக் கொண்டு படுக்கையும் வாசனையாக்கப்படுகிறது.

 (நீதி. 7:17).


வெள்ளைப்போளத்தைத் திராட்சரசத்தோடு சேர்த்து காடியை உருவாக்குவார்கள். இதை குடிக்கும் போது உணர்வற்ற நிலையை உண்டாக்கும் எனவே இதை சிலுவையில் அறையப்பட்டவர்களின் வேதனையைக் குறைப்பதற்காக கொடுக்கப்பட்டது. இது கசப்பான சுவை கொண்டது.

இயேசு சிலுவையில் தாகமாய் இருக்கும் போது இந்த காடியை ஏற்றுக் கொள்ளவில்லை.

(மாற்கு 15:23). 


வெள்ளைப்போளத்தின் தயாரிப்பு


ஆப்பிரிக்காவிலும், அரபியாவிலும் காணப்படும் Balsamodendron myrrha என்ற தாவரப் பெயரைக் கொண்ட மரத்தின் பட்டையை வெட்டும்போது வடியும் வெள்ளை நிறப் பிசினை சுத்திகரித்து வெள்ளைப்போளமாகத் தயாரிக்கிறார்கள். 

இந்தத் தாவரம் 9 அடி உயரம்  வளர கூடியது. எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, சவுதி அரேபியா, ஓமன் போன்ற நாடுகளின் (மலை) பாறைப் பகுதிகளில் இது அதிகமாகக் காணப்படுகிறது.


வெள்ளைப்போளம் செண்டாகவும் பயன்படுத்தப்பட்டது (உன். 1:13).


இந்த வெள்ளைப்போளம்

தைலமாகவும் தயாரிக்கப்பட்டு காயங்களையும்  மற்றும் புண்களையும் கழுவிச் சுத்திகரிக்கும் ஒரு மருந்தாய் பயன்படுத்தினார்கள்.காயங்களில் இருக்கும் பாக்டீரியாக்களைக் கொல்ல இது உதவும்.


மேலும் இது தோல் சுருக்கங்களையும், தோல் வெடிப்புக்களையும் போக்கும் மருந்தாய் பயன்பட்டது.இந்தத் வெள்ளைப்போளத்தை எரிக்கும்போது வரும் புகை கொசு போன்ற பூச்சிகளை விரட்டியது.


இன்றும்  இதை(Paste) பற்பசையிலும், வாய் கொப்பளிக்கும் திரவத்திலும்

( Mouth wash) சேர்க்கிறாா்கள்.


 வியாபார பொருள்


இஸ்ரவேல் நாட்டில் கீலேயாத்திலிருந்து கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் வணிகர்கள் எடுத்துச்

சென்று எகிப்தில் விற்றுவந்தார்கள்.

 (ஆதி. 37:25),


யாக்கோபின் குமாரர்கள் எகிப்தில் தானியம் வாங்கப்போனபோது, தானியம் விற்ற யோசேப்புக் காணிக்கை கொடுக்கும்படி வெள்ளைப் போளத்தையும் கொண்டுபோகும்படி சென்னான்.

(ஆதி. 43:11)...







Post a Comment

2 Comments