வரையாடு அறிந்து கொள்வோம் பகுதி -29

 அறிந்து கொள்வோம்

பகுதி -29


வரையாடு 

Wild Goat


வரையாடு என்பது மனிதரால் பழக்கப்படாமல் காடுகளில் வாழு கூடிய ஆடு. 1 சாமு. 24:2 -வின் படி

இந்த ஆடு கன்மலைகளில் வசித்து வந்தன  இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் பகுதி சாக்கடலுக்கு அருகிலுள்ள என்கேதி என்ற பகுதி தான்

அங்கே அதிகமான வரையாடுகள் காணப்பட்டன.

 இதை மலையாடு என்றும் அழைத்தார்கள். 

நீண்ட உள்வாங்கிய கொம்புகள் இதற்கு சிறந்த அடையாளமாகும்.


இந்த வரையாடு மலை முகடுகளிலும், இடுக்குகளிலும் கீழே விழுந்துவிடாமல் செல்லக்கூடியவை, உயர்ந்த மலைகளில் காணப்படும் புல்கள் மற்றும், மர இலைகள் தான் உணவாகும்.


இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் பண்புடையது,

கடல் மட்டத்திலிருந்து 1,200 - 2,600மீ உயர்ந்த மலை முகடுகளில் உள்ள புல்வெளிகளில் தான் வரையாடுகள் வாழும்.


முதிர்ந்த ஆண் வரையாடு சராசரியாக 100 கிலோ எடையும் 110 செ.மீ. உயரமும் இருக்கும். பெண் வரையாடு சராசரியாக 50 கிலோ எடையும் 80 செ.மீ. உயரமும் இருக்கும்.


பெண் வரையாட்டின் கொம்பு ஆண் வரையாட்டின் கொம்பை விடக் குட்டையாகவும் பின்னோக்கிச் சரிவாகவும் காணப்படும்.


ஆண் வரையாடு அடர் பழுப்பு

 (Dark Brown) மெல்லிய கறுப்பும் கலந்த வண்ணத்தில் இருக்கும். பெண் வரையாடு சாம்பல் நிறத்தில் காணப்படும்.


ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் வரையாடுகள் இனப்பெருக்கம் செய்யும். ஆறு மாத காலம் வயிற்றில் குட்டியை சுமக்கும்.


வரையாட்டின்  சராசரி ஆயுள் காலம் மூன்று முதல் மூன்றரை ஆண்டுகள் தான். ஆனால், சில வரையாடுகள் மட்டும்

ஓராண்டு கூடுதலாகவும்  வாழ்கின்றன.


தமிழ்நாட்டின் மாநில விலங்கு

இந்த வரையாடு…..


வேதத்தில் வரையாடு



இதை எபிரெய மொழியில் Yael என்று அழைக்கிறார்கள்.


வரையாடுகள் தன் விருப்பப்படி மனிதர்கள் யாரும் செல்ல முடியாத உயரமான இடங்களில் அலைந்து திரியும் எனவே அவைகள் குட்டி போடுகிற காலத்தை அறிய முடியாது. (யோபு 39:1).


"உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்"

சங்கீதம் 104:18


மோவாபின் மலைப்பகுதிகளிலும், சீனாய் பகுதியிலும் இந்த வரை யாடுகள் அதிகமாகக் காணப்பட்டன.


பாழான இடங்களில் காட்டாடுகள் துள்ளும் என்று வேதம் சொல்லுகிறது.

(ஏசா 13:21 ஏசா 34:14).


வரையாடு புசிக்க தகுந்த மிருகம் . உபா 14:5 


இளவயதின் மனைவி வரையாட்டைப்போல அழகுள்ளவளாக இருக்கிறாள். 

நீதி 5:19.



Post a Comment

1 Comments