வல்லூறு அறிந்து கொள்வோம் பகுதி - 30

 அறிந்து கொள்வோம்

பகுதி - 30



வல்லூறு

 Falcon


வல்லூறு ஒரு வேட்டையாடும் 

பறவை.யோபு 28:7 -என் படி

இது மிகவும் கூர்மையான கண் பார்வையைக் கொண்ட பறவை.

வானத்தில் பறக்கும் போது கீழே தொலைதூரத்தில் இருக்கும் இரையைக் கூட மிக எளிதாக கண்டுபிடித்து விடும் என்கிறார்கள்.

இது மனிதனின் பார்வையை

 விட எட்டு மடங்கு அதிக சக்தி உள்ளதாகும்.


உபா. 14:13; லேவி. 11:14- ல்

இது புசிக்க கூடாத பறவைகளில் ஒன்றாகப் பட்டியிடப்பட்டுள்ளது.


சில குறிப்புகள்


வல்லூறு (Falcon) என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு இனம். 

இது மிகவும் விரைவாக பறக்க கூடியது.உலகிலேயே  மிக அதிக விரைவுடன் பறக்க கூடிய பறவை இந்த வல்லூறு தான். 


வல்லூறு பறவை பல இனமாய் இருக்கிறது என்கிறார்கள்.

அவற்றில்  ஒரு இனமாகிய Crested Caracara ஒரு அடி உயரம் வரை வளரக்கூடியது, அது தன் இறக்கைகளை விரித்தால் நான்கடி நீளம் இருக்கும்.


இந்த பறவை, சிறிய மிருகங்கள், ஊரும் பிராணிகள் இவைகளை இரையாக உட்கொள்ளுகின்றன.


இவை சிறிய வளைந்த அலகுகளையும், கூர்மையான கால் நகங்களும் கொண்டவை.


உலகத்திலேயே மிக வேகமாகப் பறக்கக்கூடிய பறவை "peregrine falcon" என்று சொல்லப்படும் வல்லூறு இனப் பறவையாகும்  இது வானத்திலிருந்து தரையில் உள்ள இரையை நோக்கி பாயும் போது மணிக்கு 325 km வேகத்தில் பாயும்.


இவைகளின் குடியிருப்பு  மலையுச்சியில் இருக்கும்.


இஸ்ரேல் நாட்டின் தபால் தலையில் வல்லூறு உருவம் இருக்கும்.


இந்த காலங்களில்  மிகவும் உயரமான கட்டிடங்களின் உச்சியிலும் குடியிருக்கின்றன.


கத்தோலிக்க சபையில் வல்லூறு பறவை தீமைக்கு அடையாளமாக கருதப்படுகிறது.




Post a Comment

1 Comments