முள்ளம்பன்றி அறிந்து கொள்வோம் பகுதி-31

 அறிந்து கொள்வோம்

பகுதி-31


முள்ளம்பன்றி

 Porcupine


இந்த முளாளம் பன்றி தன் 

முதுகில் நீண்ட முட்கள் போன்ற அமைப்பைக் கொண்ட மிருகமாகும். இந்த முட்களை விரித்து எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது.


எபிரெய மொழியில் முள்ளம்பன்றியை‌‌

"qippodh" என்று அழைக்கிறாா்கள்.


பாபிலோனின் அழிவைக் குறித்து முன்னறிவித்த போது தாம் அதை முள்ளம்பன்றிகள் வசிக்கும் இடமாக மாற்றி போடுவதாக தேவன் சொல்லியிருக்கிறார் 


(ஏசாயா 14:23,34:11)


"அதை முள்ளம்பன்றிகளுக்குச் சுதந்தரமும், தண்ணீர் நிற்கும் பள்ளங்களுமாக்கி, அதைச் சங்காரம் என்னும் துடைப்பத்தால் பெருக்கி விடுவேன்" என்று


சீரியாவிலும், பாலஸ்தீனப் பகுதியில் முள்ளம் பன்றிகள் மற்றும் முள்ளெலிகளும் காணப்படுகின்றன.


முள்ளெலியின் அறிவியல் பெயர் "Hystrix cristata" என்பதாகும்.


முள்ளம்பன்றி கிட்டத்தட்ட இரண்டடி நீளம் வரை வளரக் கூடியது. அதன் முட்கள் நீண்ட வடிவில் இருக்கும்.


இது எதிரிகள் வரும்போது, பின்னால் திரும்பி, தனது முட்களை விறைப்பாக காட்டி பயமுறுத்தி தப்பிக்கும். 

சில வேளைகளில் இந்த முட்கள் எதிரிகளின் உடலில் குத்துவது உண்டு. அதன் பற்கள் உறுதியாகவும், கூர்மையாகவும் இருக்கின்றன.


முள்ளம்பன்றியின் கைகளும், பாதங்களும் அகன்றவையாக இருக்கும். அவற்றில் இருக்கும் நீண்ட நகங்கள் தரையில் வளைகளைத் தோண்டுவதற்கு ஏற்றவனவாக உள்ளன. இந்திய முள்ளம்பன்றி பழங்கள், தானியங்கள், தாவர வேர்கள் போன்றவற்றையே பிரதான உணவாகக் கொள்கிறது. இயற்கைத் தாவரங்கள், விவசாயப் பயிர்கள் ஆகிய இரு வகைகளையும் இவை பயன்படுத்துகின்றன. அத்தோடு, தனது முட்களின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் போன்ற கனிப்பொருட்கள் பெறுவதற்காக இவை எலும்புகளையும், நத்தை ஓடுகளையும் மென்று தின்கிறது.


இதற்கு தொந்தரவு ஏற்படும் பொழுது முள்ளம்பன்றி தனது முட்களை உயர்த்தி நிமிர்த்திக் கொள்வதோடு, வாலில் உள்ள  முட்களை அசைத்து எச்சரிக்கை ஒலி ஒன்றை எழுப்பும், தொந்தரவு நீடிக்குமாயின், அது விரைவாகப் பின்னோக்கிச் சென்று எதிரியை தன் பின்புற முட்களால் மோதித் தாக்கும். அப்போது அதன் முட்கள் எதிரியின் உடலினுள் ஆழமாக சென்று கடும் 

காயம் அல்லது மரணத்தை விளைவிக்கும்.


இது பகலில் தூங்கி, இரவில் 

இரை தேடும் உயிரினமாகும்.

இது ஐரோப்பாவிலும், 

ஆசியாவிலும் அதிகமாக

காணப்படுகிறது. மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்காவில் மரத்தில் வாழும் முள்ளம்பன்றிகள் இங்கு காணப்படுகின்றன……

Post a Comment

1 Comments