இஸ்ரவேல் தேச இராஜாக்களின் பட்டியல்கள்

இஸ்ரவேல் தேச

இராஜாக்களின் பட்டியல்கள்


ஒரு ஆய்வு




இராஜாக்கள் மற்றும் நாளாகமம் புத்தகங்கள் நமக்கு நல்லது 

பாடங்களைக் கற்றுத் தரும் 

ஒரு வரலாற்று களஞ்சியம் 

என்று சொன்னால் அதை யாராலும் மறுக்க முடியாது.


தொடக்கத்தில் வாக்குத்தத்த நாடு அதாவது இஸ்ரவேல் தேசம் ஒரே நாடாக இருந்தது. சாலமோனுக்கு பின்பு இஸ்ரவேல், யூதா என்ற இரு தேசமாய் பிரிக்கப்பட்டது.


120 ஆண்டுகள் சமஸ்த

இஸ்ரவேலும் ஒரே தேசமாக இருந்தது.

சாலமோனுக்கு பின்பு  

இரண்டாகப் பிரிந்து 208 ஆண்டுகள் வடக்கு இஸ்ரவேல் ராஜ்யம் நிலைத்திருந்தது. பிறகு அசீரியர்களின் படையெடுப்பால் அழிந்தது. 


யூதா ராஜ்ஜியம் மட்டும் 325 ஆண்டுகள் நிலைத்திருந்தது.

இஸ்ரவேல் அழிவிற்கு பின்பு 117 ஆண்டு நிலைத்திருந்து.

பின்பு பாபிலோனியரின் படையெடுப்பால் யூதாவும் அழிக்கப்பட்டது. அதற்கு பின்பு 20-ம் நூற்றாண்டு வரை யூதர்களுக்கு எந்த ஒரு தேசத்திலும் நிலையாய் தங்கியிருக்கவில்லை.


பிரிக்கப்பட்ட இஸ்ரவேல் 

மற்றும் யூதா ராஜ்ஜியத்தில்

 39 இராஜாக்கள் ஆட்சி பண்ணினார்கள்.

அவர்களின் பட்டியல்களை 

நம்மை பார்க்கலாம்.



ஒன்றிணைந்த இஸ்ரவேல் 

நாட்டின் மூன்று அரசர்கள்


1. சவுல் - முதல் ராஜா

  • கி.மு 1050-1010

  • (40 ஆண்டுகள்)

2.தாவீது - இரண்டாம் ராஜா

  • கி.மு 1010-970

  •  (40 ஆண்டுகள்)

3. சாலொமோன்- மூன்றாம் ராஜா

  • கி.மு 970-930

  • (40 ஆண்டுகள்)


ஆக இந்த மூன்று இஸ்ரவேலின் ராஜாக்களும் சுமார் 120 வருடங்களாக சமஸ்த இஸ்ரவேல் என்ற ஒரே தேசத்தை சிறப்பாக ஆட்சி செய்தார்கள். 

இம்மூவரின் ஆட்சி காலங்களைப் பற்றி விளக்கமான வரலாறு 1இராஜாக்கள் மற்றும்

 2 நாளாகமம் புத்தகத்தில் நாம் படித்து அறிந்து கொள்ளலாம்.

இம்மூவரின் ஆட்சி காலம் இஸ்ரவேல் தேசத்துக்கு பொற்காலமாக இருந்தது. 


ஒன்றிணைந்த இஸ்ரவேல் தேசம்

கி.மு 930-ல் சாலமோனின் காலத்துக்குப் பின்பு வடக்கு ராஜ்ஜியம் என்றும் தெற்கு ராஜ்ஜியம் என்றும் இரண்டாகப்

பிரிக்கப்பட்டது.



வடக்கு ராஜ்ஜியம்


இஸ்ரவேல் 

(10 கோத்திரங்கள்)


தலைநகரங்கள்:

  • சீகேம் 

  •  திர்சா 

  •  சமாரியா


ராஜாக்கள்:- 


யெரொபெயாம் முதல் ஓசெயா வரை 19 ராஜாக்கள் வடக்கு ராஜ்ஜியத்தை 208 ஆண்டுகள் ஆண்டார்கள், அதை வரிசைப்படி பார்க்கலாம்.


1.யெரொபெயாம் (22வருடம்) 


      (கி.மு 930?)

  • கொடுமையான அரசன். 

  • மக்கள் யூதாவிலிருந்து எருசலேமுக்குச் செல்லாதிருக்க பெத்தேல் மற்றும் தான் என்ற இடங்களில் பலிபீடங்களை உண்டு பண்ணினார். 

  • லேவியர்களை ஆசாரியர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்.

  • கர்த்தரின் தண்டனையால் மரணித்தார்.

  • 1இரா. 11: 26-14: 20;

 2 நாளா. 10: 2-13: 20)


2. நாதாப் (2 ஆண்டுகள்)


       ( கி.மு. 909)

  • யெரொபெயாமின் மகன்.

  •  கர்த்தருக்குப் பிரியம் இல்லாத செயல்களை மட்டும் செய்தான்.

  • கொலை செய்யப்பட்டார்.

  • 1இரா. 15: 25-32


3.பாஷா (24 வருடங்கள்)


    கி.மு. 908

  • நாதாபைக் கொலை செய்தவர்.

  • யெரொபெயாமின் குடும்பத்தினரை முற்றும் அழித்தவர்.

  •  இஸ்ரவேலை பாவம் செய்தவர். 

  • 1இரா.15: 33-16: 7, 2 நாளா 16 


4. ஏலா (2 ஆண்டுகள்)


     கி.மு 886

  • மது அருந்தி இருந்தபோது இரதத் தலைவரால் கொலை செய்யப்பட்டார்.

  • 1இரா. 16: 8-14  


5. சிம்ரி (7 நாட்கள்)


        கி.மு 885

  • ஏலா அரசரை கொலை செய்தவர்.

  • தற்கொலை செய்துகொண்டார். 

  • 1இரா. 16: 15-20


6.உம்ரி (12 வருடங்கள்)


      கி.மு 885

  • தனக்கு முன்பிருந்த எல்லோரையும் விட மிகவும் கெட்டவர். 

  • வரலாற்றறிஞர்கள் இவரை மிகவும் ஆற்றல் உள்ளவர் என சொல்கிறார்கள்.

  • தலை நகரை சமாரியாவில் மாற்றினார் .

  • 150 ஆண்டுகள் சமாரியா தான் தலைநகராய் இருந்தது.

  •  1இரா. 16: 21-28.


7.ஆகாப் (22 வருடங்கள்) 


       கி.மு 874

  • மிகவும் கொடுமையான அரசன்.

  •  யேசபேலின் கணவர்.

  •  பாகால் ஆராதனையை தேசியமயமாக்கியவர் (எலியா தீர்க்கதரிசனம் முறைத்த காலம்) 

  • 1இரா 16:29-22: 40,

2 நாளா 18.


8. அகசியா (2 ஆண்டுகள்)


        கி.மு 853

  • பாகலைச் சேவித்தவாா்.

  • எலியாவிற்கு எதிர்த்து நின்றார்.

  • பழிவாங்குதலில் வெறி பிடித்தவர்.

  •  1இரா 22:40, 2இரா 1:18


9..யோராம் (12 வருடங்கள்) 


        கி.மு 852

  • கர்த்தருக்கு விரோதமாய் செய்தார்.

  • சில நேரங்களில் மட்டும் எலியாவை மதித்தார்.

  • கொலை செய்யப்பட்டார்.

  •  2இரா. 3: 1-27, 9: 16 -25.


10 .யெகூ (28 வருடங்கள்) 


         கி.மு 841

  • ஆன்மீக வைராக்கியம் காண்பிக்கப்படவில்லை.

  • தலைமைத்துவத்தின் சிறப்பு மிக்கவர். 

  • யோராமையும் யேசபேலையும் 70 அரச குமாரர்களையும் கொன்றார் . 

  • பாகலின் எல்லா தீக்கதரிசிகளையும் ஆரானையாளர்களையும் கொன்றொழித்தவர்.

 (இதே பெயரைக் கொண்ட ஒரு தீர்க்கதரிசியும் உண்டு) 

  • 2இரா 9,10 -எலிசாவின் காலம்.


11. யோவாகஸ் (17 வருடங்கள்) 


         கி.மு 814

(இதே பெயரில் யூதாவில் ஓர் அரசன் உண்டு) 


  • பாகால் ஆராதனையை அகற்ற முயன்றார்.

  • சீரியரின் கையிலிருந்து தேவன் அவரைக் காப்பாற்றினார்.

  •  கர்த்தருக்கு பிரியமாய்

  •  வாழவில்லை.

  •  (2இரா 13: 1-9).


12. யோவாஸ் (11 வருடங்கள்) 


   கி.மு. 798

(யூதாவின் 8-வது அரசருக்கும் அதே பெயர் உண்டு)


  • எலிசா தீர்க்கதரிசியை மதித்தார்.

  • சீரியர்கள் கைப்பற்றிய பட்டணங்களை திரும்ப பிடித்துக் கொண்டார்.

  •  கர்த்தருக்குப் பிரியம் இல்லாததை மட்டுமே செய்தார். 

  • 2இரா. 13: 10-14: 16.



13. 2-ம் யெரொபெயாம் (41 வருடங்கள்)


       கி.மு. 793

  • தீர்க்கதரிசிகளாகிய யோனா. ஓசியா ஆமோஸ் ஆகியோரின் காலத்தை சேர்ந்தவார்.

  • நாடு அவர் ஆட்சியில் செழிப்படைந்தது.

  •  இழந்த பகுதிகள் மீண்டும் கைப்பற்றப்பட்டன.

  •  கர்த்தருக்கு அருவருப்பானவை செய்தார்.

  • 2இரா. 14: 23-29. 


14.சகரியா (6 மாதம்) 

       

        கி.மு. 753

  • அவர் ஆட்சி காலத்தில் ராஜ்ஜியம் வலுவிழக்க ஆரம்பித்தது.

  • கர்த்தருக்கு அருவருப்பான யாவையும் செய்தார்.

  •  2இரா 15: 8-12. 


15.சல்லூம் (1 மாதம் மட்டும்)


       கி.மு.752

  • சகரியாவை கொலை செய்து ஆட்சிக்கு வந்தார்.

  • 2இரா 15: 13-15


16.மெனாகேம்(10 வருடங்கள்) 


         கி.மு. 752 (முதல் படையெடுப்பு)

  • சல்லூம் இவரால் கொலை செய்யப்பட்டார்.

  • கர்த்தருக்கு பிரியமான மனிதன் அல்ல.

  • கருணையின்றி கர்ப்பிணிகளை கொன்றார்.

  • அசீரிய அரசன் படையெடுத்து வந்த போது 6 கோடி 60 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து தப்பினர்.

  •  2 இரா 15: 14-22.


17. பெக்காகியா ( 2 ஆண்டுகள்) 

       

         கி.மு. 742

  • மெனாகேமின் மகன்.

  •  கர்த்தருக்கு பிரியமான காரியங்கள் எதையும் அவர் செய்யவே இல்லை.

  • கொலை செய்யப்பட்டார்.

  • 2இரா 15: 23-26.


18. பெக்கா (20 வருடங்கள்) 


         கி.மு. 740 ( 2- மீ சிறைபிடிப்பு)

  • கர்த்தருக்கு விரோதமாய் காரியங்கள் செய்தார். 

  • அசீரிய அரசரான திகிலாத் பிலேசர் இஸ்ரவேலைக் கைப்பற்றி அடிமையாக 

அசீரியாவிற்குக் கொண்டு போனார். பின்பு அங்கு பெக்கா கொலை செய்யப்பட்டார்.

  •  2 இரா 15: 27-31,

2நாள 28: 5-8


19. ஓசெயா (9 வருடங்கள் )


         கி.மு. 732 (3- மீ சிறைபிடிப்பு)

  • கர்த்தருக்கு விரோதமான காரியங்கள் மட்டுமே செய்தார்.

  • அசீரியாவின் மூன்றாம் படையெடுப்பு.

  •  இஸ்ரவேலின் மக்கள் அடிமைகளாக 

அசீரியாவுக்குப் பிடித்துச் செல்லப்பட்டனர்.

  •  2இரா. 17: 1-6


இஸ்ரவேல் வடக்கு ராஜ்ஜியம் வீழ்ச்சி


தேவன் இஸ்ரவேல் ராஜ்ஜியத்திற்கு ஏராளமான எச்சரிப்புகளை தீர்க்கதரிசனம்

மூலம் கொடுத்தார்.

இருந்தும் அவர்கள் தேவனைக் கனம் பண்ண வில்லை. புறஜாதிகளின் பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டு விக்கிரகங்களை ஆராதித்து சொந்த விருப்பம் போல் வாழ்ந்தனர், அதனால் தேவன் அவர்கள் மீது படையெடுக்க ஆசிரியரை அனுமதித்தார்.



திகிலாத்பிலேத்சாருக்குப் பின்பு 5-ம் சல்மனாசார் அசீரியாவின் அரசரான போது அவர் இஸ்ரவேலின் 19 ம் அரசரான 

ஓசெயாவிடம் மிக அதிகமான கப்பம் கேட்டார்.அதற்கு ஓசெயா ராஜா கெடுக்க மறுப்பு தொிவித்தாா், பின்பு அசீரியரை எதிர்க்க துணிந்து எகிப்துடன் கூட்டணி சேர்ந்தார் (2 இரா. 17:4). 


இந்தச் சதித்திட்டத்துக்குப் பழிவாங்க சல்மனாசார் இஸ்ரவேலின் தலைநகராகிய சமாரியாவை 3 ஆண்டுகள் முற்றுகையிட்டனர். 

சமாரியாவை வெற்றி கொள்வதற்கு சற்று முன்பே சல்மனாசார் இறந்து போக 

அவருக்குப் பின்பு அரியணையில் ஏறிய 2-ம் சர்கோன் சமாரியாவை வென்று இஸ்ரவேலர்களை எல்லாம் அடிமைகளாக்கி அசீரியாவிற்குக் கொண்டு சென்றார். 

இது அசீரியாவின் மூன்றாவது இறுதியுமான படையெடுப்பாகும். 


இதற்கு முன்பு இரு தடவை படையெடுத்திருந்தனர்.

  • 2 இரா 15: 19 - முதல் முறை

  • 2 இரா 15:29 - 2 ம் முறை

(இந்த படையெடுப்புகள் எல்லாம் வெறும் எச்சரிப்புகளாய் இருந்தது. படையெடுக்காதிருக்க கப்பம் செலுத்த வேண்டும் என்றும் கலகம் பண்ணக் கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டது.

இஸ்ரவேல் மக்கள் அவற்றைப் புரிந்து கொண்டு தேவனிடம் திரும்பியதால் தான் அப்படையெடுப்புகளிலிருந்து தப்பியிருக்க வேண்டும்)


மூன்றாவது படையெடுப்பின் போது இஸ்ரவேலை முற்றிலுமாக அழித்த அசீரியர்கள் இஸ்ரவேலர்களை அடிமைகளாக்கி கொண்டு சென்றது மட்டுமல்லாது அந்நியர்களை இஸ்ரவேல் தேசத்தில் குடி ஏற்றினார்கள்.



தெற்கு ராஜ்ஜியம்


 யூதா

 (2 கோத்திரங்கள் ) 


தலைநகர் : எருசலேம்


ராஜாக்கள்:-


ரெகொபெயாம் முதல் சிதேக்கியா வரை 20 ராஜாக்கள் தெற்கு ராஜ்ஜியத்தை 325 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். அதை வரிசை படி பார்க்கலாம்.


1.ரெகொபெயாம் (17 வருடங்கள்) 


           கி.மு. 930

  • இவன் தாய் ஒரு அம்மோன் சாதி பெண்- 2 நாளா 12:13

  • லேவியருக்கு அடைக்கலம் கொடுத்தார்.

  •  நகரங்களைக் கட்டி உறுதிப்படுத்தினார்.

  • ஆட்சி நிலைத்து 

நின்ற போது நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்.

  • எகிப்திய மன்னன் சீஷாக்கினால் நெருக்கப்பட்டார்.

  • செமயா தீர்க்கதரிசியின் சொற்படி கேட்டு தம்மை தாழ்த்தினார்.

  • பிதாக்களைப் போல நித்திரையடைந்தார். 

  • 1இரா. 11: 43 -14: 40, 

2 நாளா. 10-12 


2.அபியாம் (3 ஆண்டுகள்)


      கிமு. 913

  • இஸ்ரவேலுடன் போர் தொடுத்தார்.

  • கர்த்தரில் நம்பிக்கை வைத்தால் வெற்றி பெற்றார்.

  • பிதாக்களைப் போல நித்திரையடைந்தார். 

  • 1இரா 15: 1-8;

 2 நாளா 13: 1-14:1


3.ஆசா (41 வருடங்கள்)


         கி.மு 910

  • கர்த்தரின் பலிபீடத்தை புதுப்பித்தார்.

  • பலி செலுத்தினார்.

  • கர்த்தரைத் தேடாதவர்கள் மரணத்திற்குப் பாத்திரர் என கட்டளையிட்டார்.

  •  கர்த்தர் இளைப்பாறுதலை கட்டளையிட்டார்.

  • இஸ்ரவேல் அரசர் பாஷா போருக்கு வந்த போது 

சீரிய அரசின் உதவியை நாடினார்.

  • பிதாக்களைப் போல நித்திரையடைந்தார்.

  • 1 இரா 15:8-24,

2 நாள் 14:2 -16:14


4. யோசபாத் (25 வருடங்கள்)


         கி.மு 872

  • கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்.

  • செல்வமும் சிறப்பும் இவர் ஆட்டத்தில் பெருகின.

  • கர்த்தரைக் குறித்த பயம் சுற்றிலுமிருந்த நாடுகளுக்கு பரவியது.

  • பிதாக்களைப் போல நித்திரையடைந்தார்.

  • 1இரா. 15:24- 22: 41-50, 

2 நாளா 17-21 



5. யோராம் (8 ஆண்டுகள்) 


        கி.மு 853

  • ஆகப் மற்றும் உமரியின் குடும்பத்தில் திருமணம் செய்தார்.

  • பாகால் ஆராதனையை ஊக்கப்படுத்தினார்.

  • எலியா தீர்க்கதரிசியால் கடிந்துரைக்கப்ட்டார்.

  • குடல் நோயால் பாதிக்கப்பட்டார்

  • யாருமே விரும்பாத நபராய் இறந்தார்.

  • 2இரா 8:16-24,

2 நாளா. 21


6.அகசியா (1 வருடம்)


         கி.மு 841

  • இஸ்ரவேல் ராஜாக்களில் மிகவும் தீய செயல்களைச் செய்தவர்.

  •  அத்தாலியாளின் புதல்வர்.

(அவள்தான் அவருக்கு ஆலோசனைக்காரியாக இருந்தாள்.

  •  கர்த்தருக்குப் விரோதமான காரியங்களை மட்டும் செய்தார்.

  • கொலை செய்யப் பட்டார்.

  •  2 இரா 8: 25-29

 2 நாளா 22: 1-12.  


7 .அத்தாலியாள் அரசி ( 7 ஆண்டுகள்)


           கி.மு. 841

  • கணவர் யோராமைக் கெடுத்தவள்.

  • அகசியாவிற்கு தீய ஆலோசனைகளை

 அளித்தவள்.

  • அரச குடும்பத்திரை முற்றும் அழிக்க முயன்றாள்.

யோவாசை மட்டும் அவன் தாதி களவாக ஒளித்து வைத்த படியால் கொலை செய்ய முடியவில்லை.

  • பாகாலை ஆராதித்தாள். கொலை செய்யப்பட்டாள்.

  • 2இரா 11,

2 நாள் 22:10 - 23:21


8.யோவாஸ் (40 வருடங்கள்)


           கி.மு.835

  • யோய்தா ஆசாரியன் இருக்கும் மட்டும் கர்த்தருக்குப் 

பிரியமானதை செய்தார்.

யோய்தாவின் மரணத்திற்குப் பின் யூத பிரபுக்களின் சொற்படி கேட்டு நடந்தார்.

கர்த்தரின் ஆலயத்தை ஒதுக்கினார்.

யோய்தாவின் புதல்வரை கொலை செய்தார்.

  • நோய்ப் படுக்கையில் கொலை செய்யப்பட்டார்.

  •  2இரா:12, 2 நாளா 24.


9.அமத்சியா (29 வருடங்கள்) 


            கி.மு.796

  • முழு மனதோடு அல்ல கொஞ்சம் கர்த்தருக்குப் பிரியமானவற்றைச் செய்தார். 

  • தனது தந்தைக்கு மரண தண்டனை அளித்தார். 

  • தீர்க்கதரிசியின் வார்த்தைகளை அலட்சியம் செய்து போர்க்கு சென்று அங்கிருந்து விக்கிரகங்களை எடுத்து கொண்டு வந்தார்.

  • 2 ஆண்டுகள் அந்நிய நாட்டில் கைதியாய் வாழ்ந்த பின்பு கொலை செய்யப்பட்டார்.

  •  2இரா 14:1-22, 2 நாளா 25. 


10.அசரியா (உசியா) (52 வருடங்கள்) 


       கி.மு 792

  • இளமையில் சகரியா தீர்க்கதரிசியின் சொற்கேட்டு நடந்தார்.

  • கர்த்தருக்குப் பிரியமானவன்

  •  விவசாயப் பிரியர்

  •  ஆற்றல்மிக்கவரானபோது கர்த்தரின் ஆலயத்தில் தூபம் காட்ட முயன்று தொழுநோய் பாதித்து இறந்தார்.

  •  2இரா 15: 1-17, 2 நாளா 26. 


11.யோதாம் (16 வருடங்கள்) 


         கி.மு 750

  • கர்த்தருக்கு முன் ஒழுங்காக நடந்தார்.

  • வலிமை மிக்க ராஜா.

  • பிதாக்களைப் போல நித்திரையடைந்தார்.

  • 2இரா.15: 32 - 38. 

2 நாளா 27


12.ஆகாஸ் (16 வருடங்கள்) 


        கி.மு. 735

  • கர்த்தருக்குப் பிரியம் இல்லாததை மட்டும் செய்தார்.

  • பாகால் விக்கிரகங்களை வார்ப்பித்து பின்களை பலியிட்டார். 

  • சீரியஅரசன் படையெடுத்து இவரை தோற்கடித்தார். 

  • தேவாலயத்தில் இருந்த பொருட்களை எடுத்து உடைத்துப் போட்டார். வாசல்கள் அடைக்கப்பட்டன. 

  • பலி மேடைகளை உருவாக்கினார்.

  • தேவனைக் தான் செயல்களால் கோபப்படுத்தினார்.

  • இறந்த போது இஸ்ரவேல் ராஜாக்களின் கல்லறைகளில் இடம் கிடைக்கவில்லை.

  •  2இரா 16, 2 நாளா 28.


 13 .எசேக்கியா (29 வருடங்கள்) 


         கி. மு 715

  • நல்லராஜா லேவியர்களையும் ஆசாரியர்களையும் அழைத்து கர்த்தரின் ஆலய வாசல்களைத் திறந்து பழுதுபார்த்து தூய்மைப்படுத்தினார். பலிபீடத்தின் மேல் பாவநிவாரணபலி, தகனபலி, பான பலி, ஸ்தோத்திர பலி ஆகியவை படைக்கப்பட்டன.

ஆராதனை மீண்டும் ஏற்படுத்தப்பட்டது,

பஸ்கா ஆசரிக்கப்பட்டது,

முதற்கனிகள் செலுத்தப்பட்டன.

  • அசீரிய ராஜா படையெடுத்து வந்த போது தேவன் இவரை விடுவித்தார்.

  •  பெருமை கொண்டதால் நோய் வந்தது.

  •  ஏசாயாவின் சொற்களுக்கு கீழ்படிந்து தன்னை தாழ்த்தியதால் ஆயுள் நாட்களோடு 15 ஆண்டுகள் அதிகம் பெற்றார்.

  • பிதாக்களைப்போல நித்திரையடைந்தார். 

அவர் இறந்தபோது அனைத்து யூதா மற்றும் எருசலேம் மக்களும் அஞ்சலி செலுத்தினர்.

  •  2 இரா 18 - 20,

 2 நாளா 29-32, 

ஏசாயா 36- 39


14.மனாசே (55 வருடங்கள்)


        கி. மு. 697

  • நல்ல தந்தையின் கெட்ட மகன்.

  • நீண்ட காலம் ஆட்சி செய்தவர்.

  • கர்த்தருக்குப் பிரியம் இல்லாததை மட்டும் செய்தார்.

  • சொந்த பிள்ளைகளை 

தீ கடக்கப்பண்ணினார்.

  • இறந்த போது,இஸ்ரவேலின் ராஜாக்களின் கல்லறையில் அடக்கம் பண்ண படவில்லை.

  • அவரது தோட்டத்தில் அடக்கம் பண்ணப்பட்டார்.

  •  2 இரா 21:1-18, 

2 நாளா 33:1- 20


15 .ஆமோன் (2 ஆண்டுகள்)


         கி.மு 642

  • மனசேயின் மகன் தகப்பனைப் போல நடந்து கொண்டாள்.

  • கர்த்தருக்கு விரோதமான காரியத்தை மட்டும் செய்தார். 

  • கொலை செய்யப்பட்டார்.

  •  2 இரா 21:19 - 26, 

2 நாளா 33: 21- 25.


16.யோசியா (31 வருடங்கள்)


         கி. மு 640

  • மிக நல்ல ராஜா பிரதான ஆசாரியர் இலக்கியாவை கனம்பண்ணி வாழ்ந்தார்.

  • நியாயப்பிரமாண நூல் கண்டெடுக்கப்பட்டது. 

  • ஆட்சி அமைதியான நிலையில் இருந்தது. 

  • இறுதி கட்டத்தில் எரேமியாவின்

சொல்லாமல் கேட்க எகிப்துக்கு விரோதமாய் போருக்குச் சென்று போரில் இறந்தார்.

  • எரேமியாவும் யூதாவும் எருசலேம் மக்களும் அவருக்காக புலம்பினர் அவர்கள் புலம்பல்களில் இவரைப் பற்றி புலம்புவதை ஒரு சட்டம் ஆக்கிக் கொண்டார்.

  •  அவரது மரணத்திற்குப் பின் எகிப்தின் கையாள் ஒருவர் ராஜாவானான்.

  •  2 இரா 22: 1- 30,

2 நாளா 34-35.



17.யோவாகஸ் (3 மாதம்) 

      

         கிமு 609

  • யோசியாவின் மூன்றாவது மகன்.

  • எகிப்திய மன்னன் பார்வோன் அவரைச் சிறையாக்கி கொண்டு சென்றார். 

  • 2 இரா 23: 30 - 34 .

2 நாளா 36; 1 - 4


18.யோயாக்கீம் (11 வருடங்கள்)


       கி.மு 609   ( முதல் சிறை பிடிப்பு)

  • எகிப்திய பார்வோன் மூலம் நியமிக்கப்பட்டவர்.

  • கர்த்தருக்கு விரோதமான காரியங்களை செய்தார்.

  •  எரேமியா தீர்க்கதரிசியைக் கொலை செய்ய முயன்றார்.

  • நேபுகாத்நேச்சார் இவரை வெண்கல சங்கிலி இட்டுச் சிறை பிடித்துச் சென்றார். அவரோடு கூட தேவாலய பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டன.

  • கொலை செய்யப்பட்டார்.

  • 2 இரா 23 : 36 - 24:6

2 நாளா 36: 5- 8


19.யோயாக்கீன் (3 மாதம் 10 நாள்)

                         

            கிமு 598 ( 2-ம் சிறைபிடிப்பு)

  • கர்த்தருக்கு விரோதமான வழியில் நடந்தார்.

  • பாபிலோனிய படை யெடுப்பு நடந்தது.

  • இவரும் எசேக்கியேல் தீர்க்கதரிசியும் மற்றும் ஜனங்களும் நேபுகாத்நேசரால் சிறைப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.

  • 40 ஆண்டுகள் அவர் அடிமையாக வாழ்ந்து

அங்கே இறந்தார். 

  • 2 இரா 24: 6- 17 ; 25: 27- 30 2 நாளா 36: 8-10


20.சிதேக்கியா (11வருடங்கள்)


           கி.மு 597 ( 3-ம் சிறைபிடிப்பு)

  • யூதாவின் கடைசி ராஜா.

  • கர்த்தருக்கு விரோதமான காரியம் செய்தார்.

  • எரேமியா தீர்க்கதரிசிக்கு முன்பு பெருமையுடன் நடந்து கொண்டார்.

  • ஆலயத்தைத் திட்டமிட்டனர்.

  • தேவ மனிதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளை இகழ்ந்து பேசினார்.

  • நேபுகாத்நேச்சார் படையெடுத்து வந்து தேவாலயம் கொள்ளையடிக்கப்பட்டது ஆலயமும் அரண்மனைகளும் சுட்டெரிக்கப்பட்டது. 

  • எல்லோரும் அடிமைகளாக சிறை பிடித்து கொண்டு செல்லப்பட்டனர். 

  • 2 இரா 25:1-7,

  •  2 நாளா 36: 11- 20.



கி.மு 586-ல் யூதா மக்கள் பாபிலோனுக்கு நேபுகாத்நேச்சாரால் சிறைபிடித்துச் செல்லப்பட்டதோடு தெற்கு அரசுக்கும் திரைச்சீலை விழுந்தது. பாபிலோனிலிருந்து எழுபது ஆண்டுகளுக்கு பின்பு திரும்பி வந்த யூதா மக்களுக்கு தான் சகரியா, ஆகாய் மற்றும் மல்கியா ஆகியோர் தீர்க்கதரிசன முரைத்தார்……




Post a Comment

2 Comments