ராமா அறிந்து கொள்வோம் பகுதி - 32

 அறிந்து கொள்வோம்

பகுதி - 32


ராமா

(Ramah)


இந்தப் பெயரில் நான்கு பட்டணங்கள் வேதாகமத்தில் உள்ளது.


"ராமா" என்றால் "குன்று" என்று அர்த்தமாம்.


யோசுவா 18:25 - ல்

முதன்முதலாக  "ராமா" என்ற பெயரில் ஒரு பட்டணம் வருகிறது.அது பென்யமீன் கோத்திரத்தில் 'கிபியா' என்ற இடத்துக்கு அருகே இருந்தது.


நியா 4:5

இஸ்ரவேலரின் பெண் நியாயாதிபதியாய் இருந்த தெபொராள் ராமாவுக்கும் பெத்தேலுக்கு நடுவில் இருக்கிற தெபொராளின் பேரீச்சமரத்தின் கீழே குடியிருந்தாள்.


1 சாமு 1:1

சாமுவேல் தீர்க்கதரிசி பிறந்த இடம் இந்த பட்ணனம்.இது 'ராமதாயீம்' என்று அழைக்கப்பட்டது.

சாமுவேலை ஏலியிடம் விட்டபிறகு  எல்க்கானா இங்குதான் திரும்பிச் சென்றான்.


1  சாமு. 8:4 - என் படி 

பிற்காலத்தில் இது சாமுவேல் தீர்க்கதரிசி தங்கியிருந்து ஊழியம் செய்த இடமாகும். இஸ்ரவேலின் மூப்பர் ஆலோசனைக்காக ராமாவில்  சாமுவேல் பார்க்க வருவார்கள் மக்கள் இந்த இடத்தில் வைத்துத்தான் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டார்கள்.


சவுலை ராஜாவாக அபிஷேகம் பண்ணிய பிறகு சாமுவேல் பெரும்பாலும் ராமாவிலேயே தங்கியிருந்தார். 

இடையில் அவர் பெத்லகேம் சென்று தாவீதை ராஜாவாக அபிஷேகம் செய்தார்.

இந்த இடத்தில் தான் சாமுவேல்  மரணமடைந்து  அவருடைய தோட்டத்தில் அடக்கம்பண்ணப்பட்டார்.

1 சாமு. 25:1


சாமுவேல் காலத்திற்க்கு 

பின்பு ராமா


இஸ்ரவேலின் ராஜா பாஷா இந்தப் பட்டணத்தில் அரண்களை பலப்படுத்தினான். 

பல புதிய பகுதிகளைக் கட்டத் துவங்கினான். ஆனால் சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் இஸ்ரவேலின் பட்டணங்களை தாக்குவதைக் குறித்துக் கேள்விப்பட்டவுடன் தன் கட்டுமானப் பணியை விட்டுவிட்டு போனான்.

(1 இரா. 15:17-22; 

2 நாளா. 16:1-6).


எரேமியா தீர்க்கதரிசி யூதாவின் மக்களோடுகூட சிறைப்பட்டு  கொண்டுபோகப்பட்டபோது இந்த இடத்தில் தான் பாபிலோனிய சேனாபதி நேபுசராதானால் எரேமியா விடுவிக்கப்பட்டார். 

எரே. 40:1.


மேலும் சில குறிப்பு


'ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகைகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள்".

எரே 31:15 - இது

பெத்லகேம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்

இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளைகள் கொல்லப்பட்டபோது, மேலே செல்லப்பட்ட இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறியது (மத். 2:18). 


ராகேலின் கல்லறை பெத்லகேமுக்கு அருகே இருக்கிறது,இப்போது இது கிபியாவுக்கும், பேரோத்துக்கும்

இடையில் எர்-ராம் என்ற

கிராமமாய் இருக்கிறது.

இது எருசலேமுக்கு 8 km

வடக்கு பகுதியில் உள்ளது.




Post a Comment

1 Comments